Sunday 22 July 2007

கிறுக்கல்கள்,

என் கண்ணில் நீர் முத்தாய்
சிதறும் போது
உன் பாசங்கள் என் இதயத்தில்
பதியப் படுகின்றது

இந்த உலகை
மறக்கின்ற நிமிடங்களாய்
கவிதையை அணைந்துக்
கொண்டோன்

என்
மெளனசிரிப்பொலியால்
பலதை மறைந்துக்கொண்டேன்
இந்த வாழ்வை ரசிப்பதால்
இன்னும் வாழ்ந்து கொண்டு
இருக்கின்றேன்

***
என் சேகங்கள்
உன் இதயத்தை
தொட்டதா?
ஏன்? என்மீது
கோபம் கூட
வருவதில்லை

உன் பாசம்
எனக்கு வேதனைகளை
தரும்போது அமைதியாய்
சிரித்துக் கொண்டேன்

என்பாசத்தை பரீட்சித்தவன்
என்பதால் அல்ல
என்மீது - நீ கொண்ட
அன்பினால்

***************
எத்தனை கொடுமை
நீ தந்தாய் எனக்கு
உன்னை நான்
நேசித்ததால்!

போலியாய் நீ வந்தாய்
வேதனையென்றேன்
உண்மையாய் மாறினாய்
அப்போதும் வேதனைகள்
பல கண்டேன்

உன்னை நான்
எப்படி வெல்வது?
புரிந்துகொள்ளா
உணர்வே நீ
சொல் எனக்காய்
கொஞ்சம்

இரத்தமும் சதையும்
சேர்ந்த என் உடம்பில் நீ
எங்கே இருக்கின்றாய்
புரியாது தேடுகின்றேன்
புரியாத உணர்வே
உன்னை வெல்வதற்காய்

2 comments:

செவத்தப்பா said...

Very nice poem about true love!

Keep it up!

சு.கஜந்தி said...

நன்றிகள் உணர்வுகளில் தான் வேறுபாடு
இரண்டும் வலிகள் கொண்டதே உண்மை
காதல் அழவைத்து பார்க்குமா!!! என்ன?