Tuesday, 28 February 2023

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 நினைவாய் சில சந்தோஷம்

கவியேடு பிறந்ததால் கவியான

உன்னேடு  பலகால  உறவாக 

வாழவே தந்தான் உன்னை 

 எனக்கே எனக்கு  இறைவன் !!

தம்பியாய் நண்பனாய்

என்னை புரிந்திட்ட ஒரு 

அழகான இதயமும் நீயானாய்

என்றும் எனக்கு!

நிண்ட சுமை நீளும் தனிமை

என்னடா வாழ்க்கையென 

சி்ந்தித்த பொழுது 

உன்னேடு

சிலதினம்  சிந்திய மழைமேக

நாட்களைப்போல் மீண்டும்

அழகான தருனமாய் பூத்தது எனக்குள்

எதை எதையே

பேசிடும் நம் உரையாடல்

தேனீர்கோப்பையும் புன்னகைக்க 

மீண்டும் உயிர்கொடுத்தாய்

என்னக்கு !

உன்னைபோல் ஒரு

உறவு கூடவே இருந்தால் 

என்றுமே

மனசிற்க்கு தோல்வியில்லை

புரிந்ததாய் சொல்லும் சொல்லுக்கு

அர்த்தங்கள் என்றும் எனக்கு நீயே

உன்னை தந்து என்னை புன்னகைக்க

வைத்த விதி

என் வாழ்வில்  எழுதிய  ஓற்றை

நன்மை  இதுவே!!!

No comments: