Monday, 6 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 எப்போதும்!!  

 எதிர்பார்ப்புகள்

ஏமாற்றங்களாகவே 

 இருக்கும்!

எப்போதும்!

 ஆசைகள்கானல் நீராகவே 

இருக்கும்!

எப்போதும்! 

கனவுகள் நிறைவேறமலேயே 

இருக்கும்!

எப்போதும்! 

 முயற்ச்சிகள் தோல்விகளாகவே  

இருக்கும்

எப்போதும் !

தனிமை அழுதுகொண்டே

 இருக்கும்

எப்போதும்! 

 கேட்பவர்கள் கேள்விகள்

விசித்திரமாய்  இருக்கும் 

 எப்போதும்! 

புன்னகை சிந்தும்  

இதழ்கள்  கண்ணீரை  

ஏந்தும் !

எப்போதும் !

 பெண்மையின் வாழ்வை 

 இடைபோடும் இதயங்கள்

தப்பாகவே  கனவுகாணும் !!!

எப்போதும்! 

பெண்மை சிதைக்கப்படும் 

நிமிடத்தை  பலர் ரசிப்பார் 

எப்போதும்!

சுமப்பதாய்   நடிப்பதாலேயே  

வாழ்க்கை தோல்வியோடு   

யுத்தம் செய்கின்றது!!

எப்போதும்! 

 மனிதனிடம் நியம்   

மறைந்தேகிடக்கு 

ஊமையின்  மெளனத்தின் 

மொழிபோல்  வாழ்க்கை

இருந்தும்  இல்லாமல்

இருக்கும் !!!




No comments: