என் கனவுகளில் கைதொட்டு
என்கற்பனையின்வடிவத்தில் பூத்த
பூ அவள்!!!
என் ஆசைகளின் வடிவாகி
என் கற்பனையை
தோற்கடித்த கவிதையவள்!!
என் கைபட்டுக்கருகிபோன
மலர் வாசம் பேசிட செய்யும்
கல்லறையவள்!!!
நான்
பேசும் மொழியில்
நான் பேசா
காதல் மொழியவள்!!
என் தனிமைக்குள்
நான் இழந்துவாழும்
துணையவள்!!
என் மௌனத்தை
உடைக்கும் இசையின்
வடிவமவள் !
என் துயரங்களில்
என்னை தூக்கியெறிந்து
போகும் உறவுகளிடம்மிருந்து
காத்து என் கண்ணீர்
துடைக்கும் கைக்குட்டையவள்!!!
என் உயிரின்
சுவாசத்தை சுவாசிக்கும்
மூச்சின் கருணையும்
அவள்!!!
நான் உயிர் விடும்போது
என்னை தாங்கிடும்
அன்னை மடியுமவள் !!!

No comments:
Post a Comment