தனிமை சில காலம்
துயரத்தின் தவமாய்
வீணையின் நரம்புகள் அறுந்த
மெளனத்தின் ஓசையாய் போச்சு!!!
தனிமை பல காலம்
வறுமைக்கு உரமாய் கைகள்
உடைத்தே கட்டுண்ட காயத்தின்
வலியாய் போச்சு!!
தனிமை சில காலம்
தனிமைக்கு என்னை
துணையாய் கொடுத்து
போகும் பாதையில்
கடமைக்கு என்னை உறவாய்
கொண்டுத்தே! கடந்தே போச்சி !!!
தனிமை பல காலம்
தனிமையை தந்த
உறவிற்கு என்னையே
அர்தங்களாக்கியே
என்னையே அர்த்தங்கள்
கேட்டே போச்சி !!
தனிமை சில காலம்
வலியின் துடிப்பை நடிப்பாய்
கண்டவர்களோடும்
வாழ்க்கையின்சந்தோஷத்தை
தேடியேடியவர்களோடும்
என்மீது மீட்டிடா கோவத்தை
காட்டியே வெறுத்தவர்ளோடும்
கூடவே இருந்திடும்
துயரமாய்ப்போச்சசி !!
தனிமை பல காலம்
தூரமாய் நடந்தே
வேடிக்கை பார்த்தவர்கள்
பரிசாய் கொடுத்த
கண்ணாடியை
எனக்கு கண்ணாடியாகி
எனக்காக நானே என்னை
கைபிடித்துக்கொண்டே
நடந்தே பழகிட கற்றும் தந்தே
போச்சி !!
.jpg)
No comments:
Post a Comment