வாழ்க்கையினை
போன போக்கில் வாழ்ந்தவன்
தமிழனா !!தமிழ்
தமிழனென தேடுகின்ற தமிழுக்கும்
சொல்லுக்கும் செயலுக்கும்
தடுமாற்றங்கள் பிறக்கின்றதே
பல தேடலில்!! இன்று
பல வரலாறுகளை
தேடி தேடி சொல்லும்
தமிழுக்கு!!
என்ன வரலாறு தமிழே!!
எதுகும் தமிழுக்கு
சொந்தமாய் தோன்றவில்லையென்றால்
தோன்றலின்அடையாலம் என்ன
தமிழே!!இல்லை
மனிதன் மனிதனாய்
பிறந்ததுவே உண்மையோ
கடனாய் !!கடன் வேண்டி
தன்னைதொலைத்தவன்
காட்டுக்குள் எதுவாய் வாழ்ந்தான்!
இறைவனும் கடனாமே !!
கடனெனில் இறைவனை
சொந்தம்கொண்டவன்
எதனிடம் கண்டான் இறைவனை !
இவனிடம் தேற்ற அறிவும்
வரலாறும் !
இப்போ பலதாய் சிதைத்து
காலத்தின் மடியில்
பலவடிவில் புதைக்கின்றதே !!
மனிதனை மனிதன்
எதன் அடையாளமாய் பார்த்து
வாழ கற்றுகொண்டே வாழ்வதை
கண்டே வாழ்ந்தான்!!
ஓன்றில் மட்டும்
தோற்கவில்லை மனிதன் இன்றும்
மிருகத்தோடு மிருகமாய்
வாழ்வதில் மட்டும்
மனிதன் மனிதனாய் தெரிகின்றான்
இதில் மட்டும்
எந்த அடையாளமும்
அவனில் பிறக்கவில்லையே என்றும்!!!
.jpg)
No comments:
Post a Comment