Friday 14 January 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 ஐந்துமணி குளிர் கெஞ்ச 

அதிகாலை காற்று மிஞ்ச 

பக்கத்து வீட்டு  அம்புயம் 

 இது புரியாமல்பரபரக்க 

பக்கம் வந்து மாமன் காதுகடிக்க  

இன்னும் கொஞ்சமென

தூக்கம் போர்வையிழுக்க 

 தலைக்குமேல்வேலையிருக்கு என்னப்பா

செய்கின்றாய்யென அத்தை குரலெழுப்ப

அச்சச்சோயென சோம்பல்  

இருந்த இடம் தெரியாமலே ஒட

தலைகுளித்தேன் நானும்மெல்ல 

வாழைமரம் தோரணம் மாலையேடு

மாமன்  புன்னகையோடு 

எனை  நோக்க  உதவிடவாயென

விழிகள் கெஞ்ச அறிந்தும் அறியாமலும்

நானும் பார்க்க

சாணமிட்டு  அத்தை  முற்றத்தில்

 கோலமிட  மச்சாள் நிறைகுடவைத்து

விளக்கேற்ற

பக்கத்தில்  அடுப்பு வைத்து 

விறகேடு மாமா சண்டையிட  

எதையும் அறியதவள் போல் கொஞ்சம்

தேனீர் கிடைக்குமாயென கண்கள் ஏங்க

அருகே வந்த மச்சாள் அறிந்ததைமோல் 

கேலிபேச எதையே

புரிந்ததை போல்மாமன்

யஎன்னை பார்க்க  மெல்ல ஆனந்தம் 

கிண்டலும்கேலியுமாய்  தொடங்க  

  அத்தையேடு மாமா

பொங்களை பொங்க  

சுற்றி நாங்கள்  

இழந்ததை புதுப்பித்து மகிழ

அப்பப்ப  என்னையும

மாமனையும்    ஒன்றாய்

இணைத்தால் இன்று!!!

தொலைத்த வருடம் கூட  இனித்தது தித்திப்பாய்!!




No comments: