Sunday, 23 December 2007

மழை

என் மீது நீ படும்
போதெல்லாம்
என் உடல்
சிலிர்க்கின்றது
ஏனோ
நான் பூக்களாய்
நனைகின்றேன்
என்னை தொட்டு சிதறும்
உன் சிதறல்கள்
என்னை விட்டு பிரியா
கவிதைகளானது
***
தென்றலால் குளிர்ந்து
மழையென நனைத்து
வானவில்லின் வர்ணத்தோடு
பூமிதனில் பூத்து
சுவாசத்தை வருடி
நதியில் நடை பழகி
கடலில் கலந்து
சூரியத் தீண்டலால்
மீண்டும்
மேகமாய் மறைகின்றாள்!

நினைவுகள்

என் உயிரே உன் பெயரை
மூங்கில் காடு என்
காதோடு இசைக்க
தொலை தூரத்து
வானத்தைப் போல்
தொலைந்திடா நிலவாய்
உன் நினைவுகள்
வந்து வந்து போக
அந்தி
மாலைப்பொழுதை
வெறுக்கின்றேன்
உன் நினைவால்

***
என்னேடு கலந்திட்ட
உன் விம்பங்கள்
என் இதயத்தில்
முள்ளாய் தைக்க
என் உயிர்
உனக்காய் துடிக்கின்றது
உன் நினைவால்
***
உன் ஞாபங்கள்
என் மெளனத்திற்குள்
மீட்கப்படுகின்றது
ஏன் தெரியுமா?
அதுகூட சுகமான நினைவுகள்
என்பதால்.....

***
அன்பால் அவளைஅணைத்து
தன் இதயக்கோவில்
அவள் உருவம் பதித்தவனின்
சிதறுகின்ற கற்பனையும்
உதிர்கின்ற பூக்களும்
அவன் முகம் காட்ட
அவன் நினைவைச் சொல்லும்
அவள் கனவுகளை
தென்றல் காற்றிடம
சொன்னாள்
அவன் காற்றோடு இருப்பதால்

***
எப்படி முடிந்தது
உனக்கு என்
நினைவுகளை
மறந்திட..
எனக்கு
சொல்லி தர மறந்து
விட்டாயே
உன்
நினைவுகளை
நான் மறந்திட
***
என்
மனச்சிறையில்
அவன் நினைவுகள்
தென்றலால் பதிவு
செய்து
சுழல் காற்றாய்
சுற்ற.....
என்னை அவன்
தீண்டி
அவன் வாசத்தை
எனக்குள் சுற்ற விட்டு
என் இதயத்தின்
நாளங்களை அவன்
நினைவென்னும்
சுழல்காற்றால்
பிடிங்கிச்சென்று
மீட்டுகின்றான்
எனக்காய் யாழை
**
பசுமரத்தாணியாய்
அவன் நினைவு
எனைத் துரத்த
பார்க்குமிடமெங்கும்
அவன் உருவம்
விம்பமாய்த் தோன்ற
பாவையிவள் தவித்தாள்
கண்ணிருந்தும் குருடா

பிரிவு

எனக்காய் நீ தந்த
சின்னச் சின்ன
மகிழ்ச்சிகளை
நான் அச்சத்தோடு
ரசிக்கின்றேன்

ஏன் தெரியுமா?
சண்டை வந்தால்
எனைப் பிரிந்து
விடுவாயோ என்று!!

பிரிந்து பிரிந்து
பிரிவையே வெறுத்து
விட்டேன் அன்பே
உன்னை பிரியவேண்டாமே என
நான் பிரிந்தேயிருக்கின்றேன்
என்றும்.....

****
உறவோடு உனைத்தேடி
உறவாகி நானிருக்க
உறவே எனை மறந்து
பறந்ததேனோ

உன் பிரிவால் சுதியின்றி
நல்ல ஜதியின்றி
என் பாதம் நடை பழக
மறுக்கின்றதே...

என் உறவே
உன் விழிப்பார்வை
என்னைத் தீண்டாதோ
என் உயிர் உன்னைச்
சோராதோ....

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மலர் வாசம் வீசாயோ
தென்றல் காற்றே
கனிமொழியாள் படைப்பில்
கற்பனைக்குள் தோற்ற வாசம்
காலத்தால் அழிந்த வாசம்
இயத்தில் உறைந்த வாசம்
மலருக்குள் மறைந்த வாசம்
சுமையாக வந்த வாசம்
என்னோடு வாழும் வாசம்
எனை சுடராய் எரிக்கும் வாசம்
எவரோடும் தோன்றா வாசம்
புதைகுழியில் புதைத்த வாசம்
புதிராய் தோன்றிய தால்
என்னை வாசமில்லா வாசத்தை
சுவாசிக்க சொன்னது.கலாம் !!!

Friday, 21 December 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பாரியவன் காதல் 
கொள்ள
பெளர்ணமி நிலாவும்
கொண்ட காதல் 
உயிர்த் துடிப்பால்
தன்னிலை தான் மறந்து
பூமிக்கு வந்தது 
காதலால் ,,....

காஞ்ப்பட்டுத்தி
நெற்றித் திலம்
தானிட்டு
மல்லிகையும் தலை 
சிரிக்க
கைவலயல் கலகலக்க
கால் கொலுசு 
சத்தமிட
அதிசய தேவதையாய்
அசைந்தே வந்தது 
பார்ப்பவரே அசந்திட..

நிலவின்  கைதொட
பாரியவன் துடித்து 
நிற்க
முகூர்த்தமும் வந்ததென்று
தோழியவள் அழைத்து

செல்ல

அதிகாலை  புன்னகைக்க 
மணப்பெண்ணும் தான் மறைய
ஏக்கம்கொண்டு 
  அவன் பார்க்க
வானமதில் நிலவு  சிரித்தது 
தன் ஒளி தானிழந்து
வெள்ளை பொட்டொன்றாய்.......

என் அன்பே....

கரைந்து ஏன் போகின்றாய்
என் அன்பே!
தண்ணியடித்து தாடிவளர்த்து
காதல் காத்து!! கரைந்து ஏன்
போகின்றாய்  என் அன்பே!


குடும்பம் மறந்து 
வாழ்வைத் தொலைத்து
வீதியில் நின்று வீண் காதலால்
கரைந்து ஏன் போகின்றாய்
என் அன்பே

உழைப்பு மறந்து
உயர்வைத் தொலைத்து
சோம்பறிக் காதலால் உன்னை
நீ கரைத்து! கரைந்து ஏன்
போகின்றாய் என் அன்பே

கரைந்து கரைந்து போவதா
காதல், அல்லவே அல்ல!
கரைந்திடா காதலை நீ தேடி
காலத்தோடு இ
லட்சியம் வென்று
வாழ்ந்திடு என் அன்பே காதலேடு
வாழ்வையும்.கரைத்து !!

Wednesday, 28 November 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தீப்பொறி தன்னை தன்னகத்தே
கொண்டு,தீச்சுவாலையோடு
கலந்திட்ட எம் உயிர்த் தியாகங்களே

உங்கள்
எண்ணற்ற சிந்தனை சிதறல்களை
ஒன்றாக்கி மாறாக் கொள்கையேடு
கனவிலும் தேசியத்தை வளர்த்து
உங்கள் உள்ளத்தின் ஆசைகளை
எமக்கு தந்து, எம் உயிர் காத்து!
மண்ணுயிர் மீட்டிட,மரணத்தின்
வாசலில் உடல் கொழுத்தி, எம் இருள்
போக்கிய தன்னலம் காணா தியாகங்களே!

உங்கள்
உயிரை துச்சமாய் தூக்கியெறிந்து
ஈழக் காற்றினை சுவாசக் காற்றாய்
சுவாசித்து உடலை எமக்காய் தந்த
உயிர் தியாகங்களே உங்களுக்காய்
கவிதைப் பூக்களால் கோர்க்கின்றேன்
ஓர் அஞ்சலி மாலை....

Tuesday, 27 November 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

விதையாய் விழ்ந்து 
விருச்சமாய் எழுந்து,
விடியலுக்காய் வித்தான
முத்துக்கள் இவர்கள்

எட்டுத்திக்கும் விடுதலைக் காற்றனுப்பி
உலகின் பார்வையை 
தன்  பக்கம் திருப்பி
புரியா உள்ளங்களை 
புரிந்திடச் செய்து
கடலோடும் புயலோடும் 
தரையோடும்
தீயாக எரிந்து 
வானேறி வீரம் காட்டி
விதையான சுயநலமில்லா
 சுவாசத்தின் முத்துக்கள் 
இவர்கள்........

எம் மண்ணின் ஒளியெல்லாம்
அவர்கள் !
 முக ஓவியமாய் விரிய 
இருளுக்குள் ஒளியாகி,
இருண்ட வாழ்விற்கு 
வெளிச்சமாகி
வானத்திங்களின் ஒளியெடுத்து
உலகத்தின் பார்வையில் வீழ்ந்து
விடுதலை உணர்வை
 எம் இதயத்தில்
வித்தாக்கி மறைந்த 
எம் முத்துக்கள் இவர்கள்..................................

Tuesday, 20 November 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தன் இனம் அழித்து
உயிர் எடுத்து
இரத்தத்தால் பூமி நனைத்து
மனுதர்மம் காக்கின்றது
யுத்தமென்னும் அழிவு

சுறாவளிக் காற்றாய்
சுற்றி சுழன்று
வேரோடு பிடுங்கி
வெற்றுடல் குவித்து
வேடிக்கை காட்டி
நிக்கின்றது ஓர் அழிவு

பூமி வெடித்து தீப்பொறி
எடுத்து பூவுடல் எரித்து
கடல் பொங்கி உடல் தழுவி
உயிர் குடித்து ரசிக்கின்றது
இன்னுமோர் அழிவு

இப்படி
அழிவின் மேல் அழிவு வந்து
அழிகின்ற பூமி தெரியாமல்
கற்பனையில் கிறுக்கின்றேனோ
பூமியின் அழகு தனை
புரியாமல்..................தவிக்கின்றேன்

Sunday, 18 November 2007

உணர்வு தந்த சில கிறுக்கல்கள்..

ஈழத்து மண்ணே நான்
சில காலம் உன் மடியில்
வாழ்ந்திட வேண்டும்!
அகதி வாழ்க்கையில் நான்
தொலைந்த நின்மதியை
மீண்டும் தேடிட வேண்டும்!
இருக்கும் காலம் இனித்திட
விரைவில் நீ மலர்ந்திட
வேண்டும்...

*****************
ஈழமே நீ வேண்டும்
அதற்காய் நாங்கள் இங்கே
இனைந்திட வேண்டும்

வார்தையாலம் வீண்வாதம்
விட்டிட வேண்டாம்
தமிழர் நாங்கள்... மற்றவை
மறந்திட வேண்டும்

பசிக்காய் அழுதிடும்
குழந்தையின் அழுகுரல்
நிருந்திட வேண்டும்
இங்கே இனைந்திட்ட இதயங்கள்
நாங்கள் சூழ்நிலை அறிந்து
கரம் சேர்ந்திட வேண்டும்

**************************
உறவின் உயிரைக் காத்திட
முடியவில்லை
ஆனாலும் உணர்வில் ஓர் வலி
சொல்ல தெரியாவில்லை

உண்டேன் உறங்கினேன்
ஆனாலும் எதையோ இழந்ததாய்
ஒர் தவிப்பு எனக்குள்
என்னை
தொலைத்து கோழையாய்
இழந்த விட்ட தமிழ் உணர்வால்
துடிக்கின்றது இதயம்
எதனால் நானும் தமிழ் என்பதாலா
புரியவில்லை ராமா
ஆனாலும் நீயாவது
காத்திட தோன்றிடுவாயா?
கட்டத்தரையில் கண்ணீரோடு
என் உறவு .....வலிக்கு எனக்கு.........
****************
முள்வேலிக்குள்
இவனை
சிறையிட்டாலும்
இன்று சோர்ந்திடும்
இவன் இதயம்

நாளை ஒர் நாள்
முற்கம்பிகளை
உடைத்தெரிந்து
விரிச்சமாய்வெளி் வரும்

இவன் கண்களில்
இன்று தெரித்திடும்
தீப் பொறி நாளைய
விடுதலையை
சொல்லிடும் எரிமலைக்
காற்றாய் .......

****************
வீரரே உம் இரத்தத்தில்
முளைத்திட்ட
செடிகளெல்லாம்
உமாக்காய் பூக்கள் பூக்க
உம் மரணத்தால்
உதிர்ந்திட்ட வெள்ளை
மலரெல்லாம்
சிகப்பாய் பூத்திட்டது
உம் கல்லறையின்
பக்கத்தில் உறங்கிட
அல்ல
உம் கனவுகளை
மீட்டெடுத்து எம்
தேசத்தை காக்க.........
...................................................
தன்னுடல் தனை மறந்து
தனாக்காய் வாழாது
எமாக்காய் வாழும்
தியாக தீபங்கள் இவர்கள்
ஆனால்....
இன்று பூவுடலாய்
பூமியில் சரிந்த வேளை
இழிவின் மேல் இழிவு செய்து
கொடுமைக்கு மேல் கொடுமை
செய்து
அரக்கனாய் ரசிக்கும்
மனிதனின் மத்தியில்
மனித நேயத்தின்
புனிதம் சொல்லி
புனிதமாய் மறைந்தனர்
மறையா மறைவில்..
...........................................
வென்று சேரட்டும்
கைகள்
ஒன்று கூடட்டும்
இதயங்கள்
வெடித்து சிதறிய
மனிதநேயத்தால்
சிதறிக் கிடக்கும் எம்
உறவின் துயர்காத்து
இருளில் புதையும்
மண்ணின்
விடியலைத் தேடி
ஒன்று சேரட்டும்
கைகள்
..............................................
தமிழர்கள் நமக்காய்
ஒர் இடமின்றி
தவித்திட் காலம்
வென்று எமக்காய்
வரைத்திட்ட தேசத்தின்
புதிய பூபாலம்
எமக்காய் பிறக்க
நம் வீரர் உறுதிகொண்டு
இணைந்திடுவோம்
ஈழத்தின் தாகத்தோடு

Saturday, 17 November 2007

சுமை தாங்கி

இன்பங்கள் பலகோடி அவள்
வரவாள் உன்னைச்சேர
துன்பமே வந்ததென்று
கிண்டலும் கேலியுமாய்
எத்தனை காயங்கள் நீ கொடுத்தாலும்
உன்னைத் தாங்கிக் கொள்ளும்
சுமைதாங்கி அவள் தானே...

எத்தனையோ விண்மீன்கள்
உன் வாழ்வில் வந்து வந்து
போனாலும் , நீயே அவைகளை
ரசித்தே நின்றாலும்,உன்
இருளுக்கு ஒளியாய் இறுதிவரை
உன்னோடு வருபவள் அவள் தானே!


தன்னுயிர் உள்ளவரை
உன்னை சுமந்து உன் கருவை சுமந்து
உன் வாழ்வை தன் வாழ்வாய்
எண்ணி, உனக்காய் சுமக்கின்ற
சுமைதாங்கி என்றும் அவள்தானே..............

Wednesday, 31 October 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


பழமையில் புதுமை
தேடி
புதுமையிலும் புதுமை
தேடி
புதிதாய் ஒர் வாழ்வை
தேடி
பண்பில்லா பண்பில்
சேர்ந்து
பரிகாசம் தன்னைச்
சுமந்து
உறவிற்கே உறவு
சொல்லி
முறையே இல்லா
உறவில் சேர்ந்து
தேடலினால் தேடிக்
கொண்டோம்
பொறுமையில்லா இதயம்
கொண்டு
சொல்ல முடியா
பாதை ஒன்றை
புதிய வாழ்கையென்று………

Friday, 26 October 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


ராமன் தீயெடுக்க
சீதை குளித்தால் இன்று
இராவணர்கள் தீயெடுக்க
சீதைகள் குளிக்கின்றனர்

இதிகாசம் கண்ட தீயால்
கலியுகமும் குளிக்க
பணகார முதலைகள்
எடுத்த தீயில்
வறுமைத் தவிப்புக்கள்
நித்தம் குளிக்கின்றது

வரதட்சனை மாமியார்
வைத்த தீயில் மருமகள்
மட்டும் குளிக்க
வரன் காணா கன்னியவளை
ஏக்க தீ சுட்டெறித்தால்
மரணத் தீ அவள் குளிக்க

கோழையவன் எடுத்த தீயில்
குடும்பமே குளித்துக் கரைய
கடவுள் அவன் காட்டிய தீ
கருணையில்லா மனிதர்கள்
வைக்கும் தீயானது............

Wednesday, 24 October 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உன்னத பந்தம் ஒன்று
உன்னோடு எனைச் சேர்க்க
உன் கரம் பற்றியதால்
உன் உறவாய் நான் வந்தேன்
உன்னோடு !1
பலர் வாழ்ந்த வாழ்கை  
நமைச்சேர 
இணையான துணையாக
நம் வாழ்வில் நாம் சேர்ந்தோம்
மகிழ்வாய் 
மகிழ்சியாய் சில நாட்கள்
மகிழ்ந்தே போக ,
சத்தியம் தனை செய்து
 ,அன்போடு
எனை அணைத்த, 
இன்ப நாட்கள் 
கசந்ததேன் நமக்கு!! 
இப்போது! 
நம் உறவு புரியவில்லை,
எனக்கும் தான்
 எதுவுமே கூறாமல்
வார்த்தையால் எனைக்
 கொன்று
சாக்கடையாய் நீ 
பார்க்க
என்ன தான் 
நான் செய்தேன்!
இரட்டை வேடம்
 நீ போட்டு
அழகாய் நடிக்க
 உன் வேடம் தெரிந்தும் 
புரியாமல் நான்
தவிந்து இன்னும் வாழ
என்ன பாவம் 
நான் செய்தேனே
தெரியவில்லை எனக்கும்
 தான்!
வில்லனவன் வெளியிலென்றால்
உன்னிடம் சொல்லலாமே
வில்லனோ நீயென்றால்
நான் யாரிடம் 
 தான் சொல்ல
துணையாய் வந்த

 என் அன்பே
நீ கூறு கொஞ்சம்.............

Tuesday, 23 October 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஆயிரம் ஆயிரம்
மனிதப் பூக்கள்;! பூக்களாய்
பூத்துக் குலுங்கிய என்
தோட்டத்தில்
யுத்தமென்னும் அரக்கன்
உடல் சிதறக் குண்டெறிந்து
உயிர்ப் பலியெடுத்து
அழிவின் மேல் அழிவு செய்து
பசியோடும் வலியோடும்
என் உறவை என் நட்பை
தவிக்க விட்டு!என் தோட்டத்தின்
அழகை ச் சுடுகாடாக்கி
எம் மிடத்தில் எம் மினத்தை
காக்கின்றான் சமாதான உயிர் குடித்து


சொல்லிச் சொல்லி மாண்டு
காயத்தின் மேல் காயத்தால்
கருகிய வாழ்வு ஒளிறின்றி போக
எங்கோர் முலையில்
உறவுகளின் நம்பிக்கை
மட்டும் உயிர் வாழ்கின்றது
என்றும் மாறாமல்........


Monday, 22 October 2007

தோல்விகள்

ற்பனையின் அழகு என்றும்
நிஜத்தின் தோல்வி
பொய்யின் அழகு என்றும்
உண்மையின் தோல்வி
போலியின் அழகு என்றும்
உறவின் தோல்வி
ஏமாற்றத்தின்
அழகு என்றும்
நம்பிக்கையின்
தோல்வி


சந்தேகத்தின்
அழகு என்றும்
மகிழ்ச்சியின்
தோல்வி
ஆடம்பரத்தின்
அழகு என்றும்
அமைதியின் தோல்வி
பிரிவின் அழகு என்றும்
வாழ்வின் தோல்வி
யுத்தத்தின் அழகு என்றும்
மனிதனின் தோல்வி
சிந்தனையின் அழகு என்றும்
கடவுளின் தோல்வி!

Friday, 17 August 2007

தருவாயா?

பூவின் மென்மை தனை
பேச்சிலும் செயலிலும்
கொண்டவளை பலர் ரசிக்க...
கல்லைப் போன்ற
உறதி தனை மனதில்
கொண்டு தோல்வியிலும்
வெற்றி கண்டவள்
சுகந்திர காற்றை சுவாசிந்து
பிரிவை தாங்கா இதயம்
கொண்டதால்
வெற்றியிலும் தோல்வி
கொண்டாள் இறைவா
இவளுக்காய் தருவாயா?
உறுதியான இதயத்தை...

Thursday, 16 August 2007

கிறுக்கல்கள்,

உண்மைக் காதல்
ஏட்டில் வடிக்க
பொய்மைக் காதல்
வாழ்வைச் சிதைக்க
புரியா உணர்வில
தெரியா உறவாய்
சேர்ந்த காதல்
கல்லறைக்குள் வாழ
இறப்பின் சிறப்பு
காதலில் தெரிய
கண்ணீரால் நனைந்த
காதல்
கல்லில் செதுக்கிய
காவியமானது...

*******************
பத்து மாத கருவை
சுமந்து பட்டினியும்
வலியுமாய் ரசித்திடும்
பெண்ணவளின் நளிங்கள்
மீது எனக்கு
ஒர் காதல்

சிந்தும் சிரிப்பில்
சிதறும் அழகில்
மென்பஞ்சு மொட்டு
அசைந்திடும் அசைவில்
தொலைந்து நிற்குது
என் காதல்

வறுமைத் துயர்
தான் தாங்கி
பிரியா உறவாய்
சேர்த்தே நிற்கும்
உறவின் மீது
எனக்கும் ஒர் காதல்

முதுமை வந்தும்
மாறக் காதல்
தாம் கொண்டு
சேர்ந்தே ரசிக்கும்
ஜோடி மீதும்
எனக்கும் ஒர் காதல்
*****************
அழகின் கவர்ச்சியின்றி
பார்வையின் மோதலின்றி
எனக்கும் அவனுக்கம்
ஏற்பட்ட காதல்
சொல்ல முடியா கதைசொல்ல
என் உணர்வில் கலந்திட்
அவன் வசம் என்னை
காலமுழுக்க சுவாசிக்க
சொன்னது
*****************
நான் மழையைக்
காதல் செய்ய
மழை பூமியைக்
காதல் செய்ய
பூமி அழகைக்
காதல் செய்தால்
மனிதன் அழிவைக்
காதல் செய்கின்றான்

Saturday, 4 August 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஏழை பசித்திருக்க
படைத்தவன் பத்தி ரசித்திருக்க
துடிக்கும் ஏழை
துயர் துடைக்கா மனிதன்
மூடநம்பிகை பயத்தால்
சுயநலபத்தி கொண்டு
கற்பனை சிலைக்கு உயிர் கொடுத்தான்
தான் வாழ!!
புராணம் சொல்லா
அன்பைச் சொல்லி
ஆடரம்பர வாழ்வை
கடவுளுக்கு காட்டி
படைத்தவன் சொல்லா
பத்தியொன்றை! 
சமூகத்திற்கு கொடுத்து
ஏழைச்சிரிப்பில் கடவுளை
காணா மனிதன் தொட்டுணரா
கற்பனைச்சிலையின் உயிர்த்துடிப்பால்
தொட்டுணரும் ஏழையின் கண்ணீர்
துடைக்க மறந்தான் பத்தியால்!!!

Thursday, 2 August 2007

மனிதன்

உலக மென்னும்
அற்புத படைப்பின்
அழகிய பொய்கள்
நாங்கள்
அறிவு கொண்டு
அழிவை நேசித்து
போலி கொண்டு
நிம்மதியழித்து
இன்பம் தேடி
துன்பம் நேசித்து
காலம் தனை
காகிதக் குப்பையாக்கி
மரணம் கொண்ட
மாய வாழ்வின்
உதிர்ந்த இதழின்
கற்பனை கொண்டு
வாழ்வின் சரித்திரத்தை
இறந்த உயிரின்
இரத்தத்தில் எழுதுகின்றோம்

Monday, 30 July 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


என்னில் பல
தவறு வாழும்
போது
மற்றவர்
தவறை நான்
கூறியதால்
என்
தவறை மற்றவர்
கூற
மற்றவர்
தவறவை நான்
கூற
என்னை நானே
புரிந்து கொள்ளாது
மற்றவறை
புரிந்து கொண்டேன்
தவறாய்...

Sunday, 29 July 2007

வாழ்க்கை..

எனக்காய் நீ தந்தாய்
உனக்காய் நான் இருக்க!
இடையில் யார் வந்தார்?
என்னை ஏனோ நீ பிரிய

உன்னினைவுகள்
எனைச் சுட என்னவனே
உன்னவளாய்
உன் வாழ்கையில்
இன்னும் நான்
தொடர்வே இல்லா
தொடர்கதையாய்
தொடர்கின்றேன்.....

Friday, 27 July 2007

முகவரி

பெண்ணே உன் காதலின்
எல்லை அழித்து
உணர்ச்சியின் கவர்ச்சியால்
பெண்மையின் மென்மை
அழித்து
பத்துமாதம் சுமந்த தாய்மை
தனை அழித்து
காலத்தின் மாற்றமாய்
சிசுவை அழித்து
உன்னை நீயே
அழித்துக்கொண்டு
யாரைக் குறை
சொல்லுகின்றாய்

உன்னை இழந்து
உன் வாழ்வை இழந்து
மானம் காத்திடவா
தப்பான முகவரி
எழுதுகின்றாய் பெண்ணே........

உன் சிந்தனை மாற்றி
உன் முகவரி மாற்று
புதிய வாழ்கைக்காய்
புதிய உலகிற்காய்
மற்றவரை தண்டிக்க
முதல்..

Tuesday, 24 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

எங்கள் தேசத்தின் வரலாற்றில்
இணைந்திட்ட
முதிர்வில்லா தோழனே
தியாகத்தின் தியாகமே

எம் நெஞ்சகத்தே குடி
கொண்டநெருப்பின் நெருப்பே!

யுத்த களம்தனில்
வீருநடை போட்டு
வெற்றி வெற்றியென
வென்று குவித்த

தோழனின் தோழனே

மரணத்தை உடலக்கு கொடுத்து
இலட்ச்சிய பாதைக்கு மரணம்
இல்லவே இல்லையென
எரிந்திடும் புதைகுழியில்
இருந்து விருட்சமாய்
எழுந்திட்ட வீரர்களே! உம் விடுதலைக்கு
எம் தீப அஞ்சலி!

உங்களுக்காய்
எம் விழிணீர் அகற்றி
நெஞ்சம் தனில் நெருப்பேந்தி
சிந்தனை சுடரோடு
தீயாய் இணைந்து
பூக்கள் தூவி நிக்கின்றோம்

மீண்டும் மீண்டும்
ஈழம் தனில்
மனிதபூவாய் பூத்திட
வேண்டும் என்று.......


***********
எம் தேசத்தின் சரித்திரத்தில்
ஒன்று கண்ணீரில்
நனைகின்றது இன்று
பூவெடுத்து கண்ணீர்
அஞ்சலி செய்கின்றோம்

யூலையே ... நீ தந்த
கறுப்புப் புகையால்
கருகி விட்ட
மனித நேயத்தின்
நினைவுச்சுமைகளை
அழித்திட முடியாமல்

கரைகின்ற கண்ணீர்
அமுதசுரபியாய் எம்மிடம்
இருப்பதால் கரைகின்றோம்
கண்ணீரில் இன்றும்.....

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,


யாரும் யாரையும்
விரைவில் வென்றிடத்
தேடிய பாதையாய்
நீ ஏன் வந்தாய்!!

கண்ணே மணியே என
காதலால் கொஞ்சிய
காதலின் சரித்திரத்தை சகதிக்குள்
தள்ளி நீ ஏன் வந்தாய்!!

பாசத்தை போலியாக்கி
போலிக்குள் உன்னை வைத்து
துரோகத்தை நட்பாக்கி
தூய்மையில்லா சீரழிவை
தேடும் மனிதன் தன்னைத் தான்
வெட்டும் கொடுமையாய்
நீ ஏன் வந்தாய்?

புரிந்து கொள்ளா மாயையென
சொன்னவர் மாண்டிட
மண்டவர் சொல்லியதை
வாழ்பவர் மறுந்து
புரியாது போனதால்
உதிர்ந்து தவிக்கும் தவிப்பின்
தவிப்பாய் நீ ஏன் வந்தாய்?

புரிந்து கொள்ள வைத்தாலும்
புரியாது வாழ்வதும்
உன்னாலே தானே சதியே..................

Monday, 23 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

இயற்கையின் செழிப்பும்
பசுமையின் விரிப்பும்
பார்த்திடும் இடமெங்கும்
நீல வர்ணமாய் கடல் அலையும்
மோதி மோதியோடும்
பெண்ணின் நெலிவாய்
நதிகள் நடைபழக
வயல்வெளியெங்கும்
காதல் சிட்டுக்கள்
கதைபேசி மகிழ்ந்திட்ட
அழகிய தீவு

இன்று...
புதைகுழியாய்
எலும்புக்கூடுகளின்
சுடுகாடாய்
பெண் மங்கையின்
கற்பைப் பறித்திட்ட
அரக்கனின் ஆக்கிரமிப்பாய்!

அழுதிடும் குழந்தையின்
எதிரியாய் மாறிட வாழ்வின்
வாழ்கையில்லா தேசமாய்
இழப்புக்குள் சிக்கித்
தவிக்கின்றது

ரசிக்க வந்தவர்கள்
அவலங்களை படமாக்கி
சொல்லியும் புரியாத
அழிவுக்குள் மீளமுடியா
மனிதர்களானோம்
அழகிய தீவில்

Sunday, 22 July 2007

கிறுக்கல்கள்,

என் கண்ணில் நீர் முத்தாய்
சிதறும் போது
உன் பாசங்கள் என் இதயத்தில்
பதியப் படுகின்றது


இந்த உலகை
மறக்கின்ற நிமிடங்களாய்
கவிதையை அணைந்துக்
கொண்டோன்  என்
மெளனசிரிப்பொலியால்
பலதை மறைந்துக்கொண்டேன்
இந்த வாழ்வை ரசிப்பதால்
இன்னும் வாழ்ந்து கொண்டு
இருக்கின்றேன்

***
என் சேகங்கள்
உன் இதயத்தை
தொட்டதா?
ஏன்? என்மீது
கோபம் கூட
வருவதில்லை

உன் பாசம்
எனக்கு வேதனைகளை
தரும்போது அமைதியாய்
சிரித்துக் கொண்டேன்



என்பாசத்தை பரீட்சித்தவன்
என்பதால் அல்ல
என்மீது - நீ கொண்ட
அன்பினால்

***************
எத்தனை கொடுமை
நீ தந்தாய் எனக்கு
உன்னை நான்
நேசித்ததால்!

போலியாய் நீ வந்தாய்
வேதனையென்றேன்
உண்மையாய் மாறினாய்
அப்போதும் வேதனைகள்
பல கண்டேன்

உன்னை நான்
எப்படி வெல்வது?
புரிந்துகொள்ளா
உணர்வே நீ
சொல் எனக்காய்
கொஞ்சம்

இரத்தமும் சதையும்
சேர்ந்த என் உடம்பில் நீ
எங்கே இருக்கின்றாய்
புரியாது தேடுகின்றேன்
புரியாத உணர்வே
உன்னை வெல்வதற்காய்

Saturday, 21 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

மண்ணில் பிறந்தோம்
வாழ்வதற்காய்
அங்கே மரணம் துரத்த
ஓடுகின்றோம்
எங்கேயெனத்
தெரியாமல்

யாரிடம் சொல்வது
எம் இனத்தின் சாபம் தனை
எதிரிகளோடு   எம்
உறவுகள் எமைத்துரத்த
வழி தெரியாபாதையில் ஓடினோம்
எங்கே எனத் தெரியாமல்

எமைக் காத்ததோழர்களே!!!
எதிரிகளோடு எம் இனம்
அழிந்திடும் சாபம் மாறிடுமா?
அங்கே!!

Friday, 20 July 2007

நட்பின் சாரல்.............,

கவிதையின் கவியாய்
எங்கோ பிறந்து என்
தங்கைக்கு உறவாய்
என்னோடு உறவாகி
என் சோகங்களின் வலியை
கண்ணீரில்லா சிரிப்பொலியாய்
எனக்கே தந்து
என் உணர்வுகளை
சொல்லாமல் செய்து
பிரமிப்பாய் ரசிக்க வைத்து
சிரிக்கவைத்தவனே! உன்னோடு
சண்டைகள் பல போட்டு
முரண்பாடுகள் கண்டபோதிலும்
அக்காவாய் தொடரும்
நம் பாசம் என்றும்
தொடர்ந்திட வேணுமடா?
உன் அக்காவாய்
உன் கனவுகள் நனவாகி மகிழ்ச்சி
பொங்க வாழ்ந்துகின்றேன் என்றும்





விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

காதல் சொல்லா
கற்பனையில் கலந்திட்ட
உறவுவே! என்
உணர்வுகள் புரிந்திடாமல்
ரசிக்கத் துடித்தவன் நீ

ஆனால்...
யாரிடமும் காணப் பாசம்
உன்னிடத்தில் கண்டேன்
நான்...



பல பேரைக் கடந்து
வந்த போதிலும்
உன் மென்மையான
இதயம் என்னை விட்டகலா
சிந்தனைஆனது ஏனோ?


துடித்திடும் என் இதயம்
சொன்னது, துடிக்காத உன்
இதயம் வரைந்து சென்றது
காதல் ஒவியம் தானென்று!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,



கற்பனைகள் பல கொண்டு
பட்டங்கள் பெற்ற போதும்!!
வாழ வழியின்றி
வாழ்தயிடம் தானின்றி
தூரதேசத்தில் துரத்தும்
சுமைகளில் தொலைந்த
தமிழன் தேடியும் காணா
கற்பனையாய்
உடல் வருத்தி
உணவு விடுதியில்
உழைக்கின்றான் தன் குடுபத்திற்காய்!!



மறத்து போன உணர்வுகளில்
தொலைந்த மகிழ்ச்சியை
அவசர அவசரமாய்
தேடிடும் தமிழன்!
இயந்திரத்தேடு போட்டியிட்டு
போட்டியிட்டு வென்று
சவற்கார நுரைக்குள்
கைகள் குளிக்க
களைத்து வெறுத்து
வலியோடு வாழும் கொடுமைகளை
சொன்னால் தான் புரியுமா?
பரிதாவ மனித வாழ்கை
ஏக்கங்கள் தனைக் கொண்டு
கண்ணீரில் கரைந்திட
சந்தோஷ தேடலில்
தொலைந்து போன
நாட்களை தேடுது மனசு!!!

Wednesday, 18 July 2007

மூன்றாம் ஆண்டு நினைவு [19-07-2007]



மூன்றாம் ஆண்டு நினைவு - கவிதைகளால் ஒரு அஞ்சலி
மூன்றாம் ஆண்டு நினைவில் என்ன செய்வது என்று புரியாமல் கவிதைகளால் அஞ்சலி செய்கிறார்கள் இவர்கள்...

யார் இவர்கள் என்று தொக்கி நிற்கும் கேள்வியை விடுங்கள்... ஏதோ ஒரு வகையில் இந்தக் குட்டிப் பெண்ணின் நினைவை இதயங்களில் ஏந்தியவர்கள் இவர்கள்...

என் மடியில்
பூத்திட்ட சின்ன
மலர் இவள்
என்னைத் தாயாக்கி
எனக்குத் தாயாகி
தன் சுவாசத்தை
எனக்காய் தந்து
இன்று என்
சுவாசத்தில் கலந்திட்டவள்
மீண்டும் பூவானாள்
இங்கே என்றும்
என்னோடு வாழும்
அவள் வாசம்
இந்த
கவிதைப் பூக்களில்
வாழ்வதால் என்
ஆத்மா சமர்ப்பணமானது
இங்கே...!






------கவி ரூபன் -----------------

சின்னப் பெண்ணே
நீ மறைந்து
மூன்றாண்டாம்
உன் நினைவு
மட்டும் எப்படி இன்னும்
எல்லோர் மனதிலும்
முரண்டு பிடித்து
முக்காலி போட்டு
உட்கார்ந்து இருக்கின்றது?
பக்கத்தில் இருந்து
பார்த்துப்
பழகியறியாதவன்
நான்...
இருந்தும் செவிவழி கேட்டு
நிழற்படத்தில் பார்த்துத்
தெரிந்த எனக்குள்ளும்
எப்படி நீ விஷ்வரூபமானாய்?
வாழ்க்கை
விசித்திரம் தான்
வந்து போகும்
உறவுகளும் அப்படியே...
யாரோ
கிழித்த கோட்டில்
நீயும் நானும்
எப்படிச் சொந்தங்களானோம்?
சாவு அருமையான
விஷயம்!
இறப்பது தெரிந்தும்
'நிரந்தர இருப்பு'
அனுமதி பெற்றது போல
செய்யும் செயல்களில்
தான் எத்தனை
முரண்பாடு?
குட்டிப் பெண்ணே
நினைவுச் செதில்கள்
குற்றி
கண்கள் குளமாகின்றது
உண்மை தான்
ஆனாலும்
வெறும் வார்த்தை
ஜாலங்களில்
பாசாங்கு செய்யப்
பிடிக்கவில்லை
மறுபிறவி
உண்டெனின்,
எனக்கு மகளாய்
வந்து பிறவேன்
மகிழ்ந்து விளையாடலாம்!
எவ்வளவு அழகாய்
முடிச்சுக்கள்
விழுகின்றது...
வாழ்க்கை அழகு தான்
அவரவர் புரிதல் படி!
பெண்ணே
நினைவுக் கவிதை
என்று நினைத்து தான்
தொடங்கினேன்
ஆனால்
வாழ்க்கையின்
வடிவான பக்கங்களைப்
புரட்டத் தொடங்கிவிட்டேன்
உதிருகின்ற
பூக்களைப் பார்த்து
அழுவதைவிட்டு
மலருகின்ற பூக்களைப் பார்த்து
மகிழ்வதே
உன் நினைவு
எனக்குச் சொல்லும்
பாடம்!
உன் நினைவை
ஏந்திக் கொண்டு
வாழ்வென்னும் பெருங்கடலில்
நீந்தப் போகின்றேன்
ஒரு சமயம்
இருவரும் சந்திக்கலாம்!

[http://kaviyarankam.blogspot.com/2007/07/blog-post.html]

-------சுபா (சித்தி) ----

பூவொன்று
உதிர்ந்ததென்று
தாயின்று அழுகையிலே
விழிநீர் துடைப்பதா
விம்மல் அடக்குவதா
அல்லல் துடைக்கும்
கையொன்று எப்போதும்
ஆறுதலாய் பற்றுமென்று
தோளினைப் பற்றுவதா?
எதுவும் தோன்றாமல்
மனசுக்குள் மானசீகமாய்
மங்களங்கள் தோன்றட்டும்
என்று
மகேசனை வேண்டுவதா?
நீ
சிரிக்கும் போது
சிரிக்கவும்
அழும்போது
விழிநீர் துடைக்கவும்
நல்ல உள்ளங்கள்
சுற்றி இருக்க
சோகமென்ன என்றுரைப்பது
தானே சரி?!

----அம்மம்மா அப்பப்பா.......

எங்கள் முதல் முத்து
நீயம்மா எங்கள்
முதல் சொத்தும்
நீயம்மா காலங்கள்
கடந்தும் மறந்திடா
உறவும் நீயம்மா
உன் அன்னையின்
ஆராக் காயமும்
நீதான்னம்மா

........சித்தப்பா சித்தி....
உனக்காய் தேடித்
தேடித் நான்
அனுப்பிய அத்தனை
வாழ்ந்துக்களும்
உன் அன்னையிடம்
ஆனால் நீயோ.....
இறைவனிடம்
..............மாமா........
வெண்பனியில்
உன்னை நனைத்து
நான் ரசிக்க
என்னோடு சண்டை
போட்டவளோ....
இப்போது பனிகாலத்து
நினைவு நீயம்மா
...........மாமா சித்தி.....
உன்னை பார்கவில்லை
அதனால் நாங்கள்
உன்னை மறக்காது
தவிக்கும் அன்னைக்காய்
அழுகின்றோம்
..................நட்பு ..உறவுகள்..
சின்ன வயதிலே
பாசத்தின் ஆழம்
சொன்னவள் நீ
அழகின் ரசனை
சொன்னவள் நீ
குறும்பால் கவர்ந்தவள் நீ
அந்ததனையும் நினைவாய்
இருக்க நீமட்டும்
நிழலாய் ஏன்
மறைந்தாய்
............................

கீர்த்தன அர்ச்சணா....

உன் நினைவுகளை
நாங்களும் மறக்காது
எங்கள் இதயபூர்வமான
கண்ணீர் அஞ்சலியை
மீண்டும் மீண்டும்
செய்கின்றோம்....

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தீயென தன் உடலுக்கு
தீயிட்டு
புறப்பட்டாள் எட்டுத்திக்கும்
சுட்டெரிக்கும் தீயென
பெண் மங்கை!

நம்விடுதலை காற்றை
அவள் சுவாசித்தால்
மென்மை பாறையாய்
உறையா வெண் குருதியில்
தன்னுடல் நனைத்து புறப்பட்டாள்
பெண்மங்கை!

தன் திறமை தனை தான் நம்பி
 உலகிற்கு தன் வீரம் சொல்லி
தன் உறவிற்காய் கை கொடுத்தாள்
பெண் மங்கை!
தன் உயிரை துச்சமாய் எண்ணி
இரவு பகல் தனை மறந்து
பொன்மலர் தீக்குள் ஒளியா
ஈழத்துமண்ணில் விழ்ந்திட்டாள்
பெண்மங்கையாய்!

வித்துடல்கள் வீதியில்
மரணத்தின் தூய்மையால்  எம்மிடம்
சொல்லாமல் சொல்லியது
அவர்களே !சிகப்பு மலர்களென்று

Tuesday, 17 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தன்னுடல் சிதறிட
தேசமெங்கும் கலந்திட
மரணத்தை தன்னுடல்
சேர்த்து நடத்தனர்
மகிழ்ச்சி பூக்களாய்!
எம் விடுதலை காத்திட
எம் உயிர் காத்திட
தன் உயிர் தந்த
தோழர்கள்..!

மரணத்தை காதலித்து
தேசத்தை சுவாசித்து
கல்லறையை நேசித்து
எம்மிடம் சொல்லாமல்
சொல்லிச் சென்றவை
ஆயிரம்!

அதனால்! அஞ்சிய நான்
இன்று  என் விழி
நீர் கொண்டு
செய்கின்றேன் அஞ்சலி
புனிதமாய் உதிர்ந்திட்ட
உயிர்களே உங்களுக்காய்....

Monday, 16 July 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வறுமைப் பெண்ணின்
உணர்ச்சிகள்


குடும்பச்சுமையிலும்
கூலி வேலையிலும்
கரைந்து போனதால்

சீதனச்சந்தையில்
அடிமாடாய் நின்ற
வறுமைப்பெண்
வந்து வந்து போகும்
ஆண்களை ஏக்கத்தோடு
பார்த்து சொன்னாள்..

இது
வறுமையின் குற்றமோ
ஆண்களின் குற்றமோ
இல்லை
பெண்களே !! பெண்களை
புரிந்து கொள்ளா குற்றமென்று

ஆனாலும்
பணக்கார விதவைப்
பெண்ணிற்காய் கண்ணீர்
விட்டாள்
மீண்டும திருமணம்
சந்தையில்
சீதனம்ப் பேச்சியில்
விலை மாடாய் அவள்
நிற்பதை பார்த்து

தன்
கண்ணீர் துடைக்க ஆண்
இல்லாத அவளைப்பெண்
அவளுக்காய் கண்ணீர்
விட்டாள்......

Sunday, 15 July 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

பாவப்பட்ட ஜென்மங்கள்
இருளும் வெளிச்சமும்
ஒன்றானாது இவர்களுக்கு
பகலில்
தீண்டப்படாத உறவுகளாய்..
இரவின் ஆசைக் கிளிகளாய்
வாழ்ந்ததிடும் இவர்களை
காரிஉமிழ்ந்து வசைபாடும்
உத்தமர்கள் ஆயிரம்!!


ஆனால்

கொடுமை யிலும் கொடுமை
பகலில் மட்டுமே
இரவின் முதல் ரசிகனுமாய்
வாடிக்கையாளனுமாய்
முகமூடிதிருடனுமாய்
வாழ்பவர்கள் இவர்களோ

இந்த பாவப்படட
ஜென்மங்கள் தன்
உணர்ச்சிகள் விற்று
மரணத்தை தேடி
யாருக்காய் வாழ்கின்றனர்?

Saturday, 14 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தன் கணவன்
உயிரைக் காத்திட
முடியா..
கலியுகக் கண்ணகி
கண்மூடித்தூங்கி
பல நாட்களாச்சி!

வாகனத்தின் சத்தமெல்லாம
மரணத்தின் ஓசையாச்சி
பயந்து பயந்து பாதி உயிர்
அவளுக்கும் போயாச்சி!
இறந்திடாமல் நரகமும் சொர்க்கமும்
கண்முன்னே  தோன்றலாச்சி!

போராடிப் போராடி
களைத்திட்ட அவளைத்தேடி
வெள்ளை வேணில் வந்தம்மா
விதவையென்னும் பட்டம் ஒன்று

 யார் தடுத்தும் இறுதியில்
மாறிடாக்கோலம்
அவளுக்கும்  சொந்தமாச்சி ...!

Thursday, 12 July 2007

யார் அவள்

வானமே இல்லாத நிலவாய்
தென்றலே தொடாத மலராய்
எழுதப்பட்ட புத்தகத்தில்
வர்ணிக்கப்படாத கவிதையாய்!
கண்களின் கண்ணீரைப் புரிந்து
கொள்ளா உறவுகளின்
சுமைதாங்கியாய்!
மூடநம்பிக்கையின் ஆணிவேரில்
தொலைந்து விட்ட சந்தோஷங்ககளாய்!
இரவின் வரவிற்காய் காத்திருக்கும்
அல்லிமலராய்!
கனவுக்குள் நிஜத்தை
தோடுபவளாய்!
தலையணைக்கு மட்டும்
தெரிந்த கண்ணீரின்
ஈரத்தை சொல்ல
யாருமில்லாதஅவள் யார்?

என் விழிகளுக்குள் சிக்கிக்கொண்ட சாரல்...1



சிதைந்திடும் கோலத்தில்
கரைகின்ற கண் மையில்
வழிகின்ற விழிநீரை
ஏந்திடா தனிமைக்குள்
சமாதானத்தின் சின்னமாய்
தூய்மையின் சோகமாய்
வெள்ளை மலரொன்று.
விடியா இரவுகளில்
தொலைந்திட்டாள்
ஏக்கங்களோடு

தன் மனதைப் புரியா
மனிதர்கள் சமாதனம்
வேண்டா தனிமைச் சிறைக்குள்
தூய்மை தேடினாள் தன் தூய்மை
சொல்ல...
**************************
பூவென்று பூக் கொண்டு
பூப் போல் பூமகனைத் தேடி
நதிமேல் நதியாய் நதிபோல்
நதி கடந்திடுது தனியாய்
வெண் முகத்தின் ஒளியால்
வெண்மேகம் ஒளிபெற்று
சிரிந்து வரவேற்க !
கரு கூந்தல் தொட்டதென்றல்
கருமேகம் கூட்டி சின்னத் துறல்
போட்டு வரவேற்க !
சின்ன வேர்வைப் புள்ளி
தொட்ட துறல் பட்டுச் சிவந்த பெண்னைப்போல்
சூரியன் வந்து வரவேற்க!
வந்த சூரியன்ப்பார்வையால்
 கொண்டநாணப் பெண்மைபோல்
வானவில் வந்து வரவேற்க!
மெல்ல விரிந்த பூக்கொண்டு
வானவில் வர்ணமாய் மெல்ல போகின்றாள்
பூமகனைத் தேடி......

*****************************
வாழ்ந்த நாட்கள்
இனிமை சொல்ல
உண்மை பாசம் தாம்
கொண்டு !இணைந்த
இதயக் காதலால்
போகும் நாட்கள் தனை
மறந்து! முதுமைக் காலத்து
இளமை நினைவில் மயங்கி
நிக்கின்றது முதுமை இங்கே
************************************
வெள்ளைப் பனிச்சாரல்
பூமி நனைக்க, நனைந்த
பூமி குளிரில் தவிக்க!
தவிக்கும் பூமியியோடு
முதுமை துடிக்க!
துடிக்கும் முதுமையின்

உணர்வின்றி குழந்தைகள்
குதிக்க! குதிக்கும் குழந்தையாய்
விரிந்திடும்  மலர்களை
மூடிய பனிக்குள் இதழ் நடுங்க!

நடுங்கும் மலர் கண்டு நான் வாட
வாடிய எனைப் பார்த்து
என் இதயம் துடிக்க!
துடிக்கும் எமைப் பார்த்து

சூரியன் சிரிக்க! சிரிந்த சூரியன்
சிந்திய வெப்பத்தில் வெண்பனிஉருக!
உருகிய பனி கண்டு ,
என் மலர் சிரிக்க!
சிரிக்கும் மலர்கண்டு நான் சிரிக்க
எனை பார்த்து என் இதயம்
சிரிந்ததுமெல்ல .....................

*****************************

வண்ணமதி ஓளியில்
வெள்ளிநிலவென்று
இருண்ட வாழ்வின்
இருள் போக்க
மென்கரத்தால் ஒளியெடுத்து
இல்லமெங்கும் ஒளிர்கின்றாள்


புதிய காற்றின் வாசமாய்..
***********************************
சலனமில்லா இதயமென்று
உயிர் ஓவியமானதால்
பார்வைகள் பல சொல்ல
புரியா மனிதர்கள் பார்வையின்
நிலை கண்டு! இருளோடு
ஒர் சிறை தான் கொண்டு
இருண்ட வானத்தின்

நச்சத்திரத்திலும் நிலவிலும்
உறவின் முகம் கண்டு
பூவின் சிரிப்பில் தனை
மறந்து ,உரிமையோடு
உலமை ரசித்திட !
தப்பான தப்பு
தப்பாய் தவறி விழ
புரிந்தது அவளுக்கு
உண்மை உலகம்....
*********************************
இழந்த வலி தனை மறக்க
கல்லறைப் பூவென்று
கருவறை விதியால்
வாசமின்றி விசியது
வர்ணப்பூக்களின் முகம்
போல.....
காயம் தந்த கண்ணீர்
காலமும் மற்றிடா கோலம்
நிலையாக்கொண்டதால்
இப்போ! தவிக்கின்றாள் தன் நிலை
கண்டு................

ஏந்திய கையுக்குள்
ஓர் கை
இணையத் துடிக்கின்றது
சமாதானத்தைப் போல்
எட்ட நின்றே...





********************************
சிந்திய சிரிப்பொலியும்
பேசிய வார்த்தையும்
நித்தமும் என் காதில்
ஒலிக்க..
அவளோ சித்திரமாய்
சுவரில் தொங்கி
நித்தம் நித்தம் என்னை
நித்திரையின்றி தவிக்க விட்டு
அழகாய் சிரிக்கின்றாள்
என் நினைவோடு

எத்தனை எத்தனையோ
கற்பனைகளை என்னோடு
நித்திரையின்றி சொல்லி விட்டு
அத்தனை கனவையும் என்னிடம்
விட்டு சித்திரமாய் சிரிக்கின்றாள்
என் உயிரோடு


நித்தம் நித்தம் என் இதயம்
துடிக்க மறுத்தது அவள்
கன்னக்குழி சிரிப்பழகை
காணாது

எத்தனை எத்தனை கொடுமைகள்
வாழ்கையோடு வந்தாலும்
கண்மணியே!! உன்னை இழப்பது
போல் கொடுமை வேண்டாம்
இந்த பூமியில் எனி...............
*********************************
அழகு காதல் தான்
சேர
உணர்ச்சி தடுமாற்றம்
கூட்டுச் சேர
தப்பு தப்பில்லா சரியில்
ஒன்று சேர
கூடியவன் கூடுவிட்டு
தான் போக
பெண்மையின் தாய்மை
அதில் சேர
கற்பத்தில் கரு சேர
பத்து மாதம் சுமை சேர
சிற்றெறும்பு காட்டு
மரப்பொத்தில் சிசு சேர
நெஞ்சில் பால் சுறக்கா
பெண்மை தன் மானம்
காக்க
எறிந்தால் மொட்டு ஒன்றை
சித்தெறும்பின் காவலில்......

******************************


இதயங்கள் இரண்டும்
ஒன்றோடு ஒன்று
காதல் கொண்டு
தாயாய் சேயும்
சேயாய் தாயும்
மாறி மாறி
இன்பக் கனவைச்சொல்லி
இந்த உலகம் தாம் மறந்து
புதிய உலகம் தாம் கண்டு
வாழ்கின்றது வாழ்கையொன்று

*********************************

******************************
அறியா மனிதன்
அழிவு நிறுத்தி
அதிகார வர்க்கம்
தனை மாற்றி

கருவறை முதல்
கல்லறை வரை
உயிரின் உரிமை
தனை இழந்து தவிக்கும்
உறவிற்காய்......

பூப்பறிக்கா கைகள்
பூவேந்தி வருகின்றது
இறைவா உன்னிடத்தில்
பசியில்லா தவிப்பில்லா
உயிரின் வாழ்விற்காய்...