Friday, 31 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 பூக்களை நீட்டினேன் 

முற்கள்கிடைத்தது

 முற்களை நீட்டினேன்  

முற்களின் கூர்மையாய் 

சொற்கள்  கிடைத்தது

சொற்களை நீட்டினேன்  

காயங்கள் கிடைத்தது

காயங்களை நீட்டினேன் 

வலிகள் கிடைத்தது

வலிகளை  கொண்டு கவிதையானேன்

அவமானம் கிடைத்தது 

அவமானத்தால் தனியே ஆனேன்

திமிரென பட்டம் கிடைத்தது!!!



குட்டிக்குட்டிச் சாரல்


 நாம் எதிர்பார்க்கும்

 உறவு எப்போதும் 

எம்மை அலட்சியமாய்

தூக்கியெறிந்து சொல்லும் 

நாம் எதிர்பார்த்திடா 

உறவே  

நாம் காயபட்டநேரம்

வலியுணர்ந்து நமக்காய்   துடிக்கும்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  ஓவ்வொரு முறையும் 

உனக்கு விடை

கொடுத்திடும் போது 

ஒன்றை கற்றுக்கொள்கின்றேன்

ஆனாலும் 

மனமென்னும் மாயகண்ணாடி

உன்னை நம்பியே ஏமாந்துவிடுகின்றது 

இம்முறை  உன்னில்

என்னை புதைக்கின்றேன்  

நான் பூப்பதும் 


என்மீது பூக்கள் விழுவதும்

நீ  எழுதும் கதையே 

 நானெழுதித்தோற்றதால்

உன்னிடம் விட்டுவிட்டேன்

நீ கைபிடிக்க 

நான்விழியிழந்தே  உன்னேடு

நடந்திட போகின்றேன்  

இருளுக்குள்

தொடகட்டும்   என்போராட்டம் !!!!

Thursday, 30 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஆணிடம் சந்தோஷத்தேடல்

பெண்ணிடம் நின்மதிதேடல் 



பூமியழுகின்றது அழிவினால்

மாற்றமே மாறதென காத்திருக்கின்றான்

இறைவன்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வலிகளை ரசிப்பவருமுண்டு 

வலிகளால் அழுவருமுண்டு

  என் வலிகளே 

என்னை சிலையாய் மற்றிட

பலர் புன்னகைகளை பார்த்து  

புன்னகைக்கின்றேன் 

என்னை விட்டு பிரிவுகள்பிரித்தாலும் 

மெளனிக்கின்றேன்   தனியாய்

என்னால் பிறர் காயபட்டால் 

 மட்டும் அழுகின்றேன்

 என் தவறை எண்ணி 

என்னை அழவைத்தவரை

பார்த்தால் மட்டும் சிந்திக்கின்றேன்

என்னைபழிவாங்கியே 

மகிழ்ந்திட என்ன  கேவமோ 

இறைவனுக்கு 


பிறவிகள் வேண்டாம்

 எனிபிறந்துடவும் வேண்டாம்

யார்  சந்தோஷத்தையும்

 எடுத்துசெல்லா இறப்பே

வேண்டும்!!!இறையே!


குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை நேசிக்கா இதயத்தையும்

 நேசிக்கின்றேன்

நேசமட்டுமே 


அழகான உலகமென்பதால்

இந்த உலகத்தின்  அழகே 

எத்தன் நேசம்

அந்த நேசத்தின் அழகே 

எத்தன் சுவாசம்

எத்தன்சுவாசத்தின் அழகே 

பூவின் அழகு

Wednesday, 29 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 வருடங்கள் தொலைந்தது

வயதும் தொலைந்தது 

கனவுகளும் தொலைந்தது

ஆசைகளே

கூடாதென்று இருந்தும்

 வாழ்க்கையில் வலிகள் மட்டுமே

என்னை இறுக்கட்டிக்கொண்டது  

ஓவ்வொரு தோல்வியும்  

ஓவ்வொருபுத்தகமென்று!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தொலைந்தவையை தேடியழவுமில்லை

இழந்தவை எனக்குகிடைக்கவுமில்லை


இருந்தும் கற்பனை 

தோட்டம் பூத்தது

நியமில்லா கனவுகளில்

 சிலநேர சந்தோஷமாய்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 என்னிடம் இழந்திட

 இல்லையென்ற பின்னே   

தொலைவானது சந்தோஷம்



மரணமே. சந்தோஷமான  பின்னே

வாழ்க்கை  தேடலற்ற  

சந்தோஷமானது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 நியமில்லா நிழல்மீது

 நம்பிக்கை கொண்டு  

நியத்தை விட்டு விடுகின்றோம்



நியமென நம்பியே தோற்று  

இழக்கின்றோம்

நம் நியத்தை!!!


Tuesday, 28 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்


நம்பிக்கையே 

தடுமாறிவிழுந்திட.

 எல்லாமே 

பொய்களாகி போனதே 

உலகில் எதை

 நம்புவதென தெரியாமல்

 தடுமாறி இழந்தே 

அழுகின்றது மனிதம்


Sunday, 26 December 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................

 மாமனை   இழந்த 

 மரிக்கொழுந்து

தனியாய் வாடுது உல்லாசமற்று  

உறக்கமிழந்தமரிக்கொழுந்து 

விழிப்பில் அழுகின்றது


தனிமைகண்டு  

இறந்திடவும் முடியமால் 

 உறங்கிடவும் முடியாமல் 

மாமன் நினைப்பு மாயைக்குள் 

தவித்து நிக்கும் மரிக்கொழுந்தை  

வீனாய்ஏக்கம் தானாய் கொல்லாமா

மாமன் மரணித்தபின்னும் !!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நாம் பொருமை கொள்ளவும்

நம்மை பொருமைபடுத்தவும் 

நாமக்க சிந்திக்கவும்

நம்கைபிடித்து நடக்கவும் 



நம் கண்ணீர்துடைக்கவும்

ஒரு  உறவு  உயிராய் இருந்தால்

 உலகில் இழப்பின்வலியை கூட 

தாங்கியெழுந்திட  முடியும்

நம்மால்!!!

ஓற்றையனாதைக்கும் 

ஒரு உறவு நம்பிக்கையெளியாகும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 மனிதன் இயற்கையேடு யுத்தம்



செய்கையில்  பூமி மரணத்தேடு

யுத்தம செய்கின்றது 

Saturday, 25 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உணர்வுகளிடம்  

நாம் தேற்றிடிடும் போது



நாம் யாரேவாக தெரிகின்றோம்

 நம்மிடம்

உணர்வு தோற்றிடும் போது

  நாம் நாமாக தெரிகின்றோம்

குட்டிக்குட்டிச் சாரல்

நற்சிந்தனை நல்லுள்ளதை

என்றும்

ஏற்றுக்கொள்ள உலகமே


இது

 இதற்கு உயிரை கொடுத்து உடலை

கொடுத்த  இறைவனே 

 சாட்சியின் காட்சி!!!!

Friday, 24 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இதயம் 

 தடுமாறும்   இடத்தில் 

கைபிடித்தே நடக்கும் 

  கைபிடியானேன்

இதயம் 



தடுக்கி விழுந்த இடத்தில்  

பிடித்தெழுந்திட 

கல்லானேன் 

இதயம் 

 புரியா  நட்பு 

பிரியும் இடத்தில் புரிந்திட்ட  

நட்பானேன் 

இதயம் 

அடைந்த மனவலியின்  தடுமாற்ற 

  குழப்பத்திற்குள் தெளிவின் 

 உறுதியானேன் 

 இதயம்

தன்னைதேற்றியே  

தானேயெழும்வரை

  நல்சிந்தனை நானானேன் 

 எல்லாம்  கைசேர 

கைதட்டி வாழ்த்திடும் ஓசை 

தூரத்தின் தூரமானேன்



என்னை   நானே ஏமாற்றி!!

என்னையே   தொலைத்து 

என்னை புதைத்தேன்

எல்லாம்தெரிந்தும்!!!

தப்பாய்  தவறாய்

என் தேற்றங்களை

மாற்றியவர் விம்பங்களாய் 

நான் மாறியும்   

மெளனமாய் வேடிக்கை 

பார்த்தேன் 

புரியாமல் தடுமாறுவது மனிதமனம் 

தானே இறையே !!!

நம்தேவையும் தேடலும்

நம் சுயநலம்என்பதால் !!

பார்வையும் எண்ணமும்

மனதின் கற்பனைதானே 

புன்னகைகள் மெளனிக்க



 புதிராய் மாறியது  என் திருவுரும்!!!

நல்வையும் நல்லெண்ணமும் மாறாமல்

என்றும் நானே தானே தனியாய்!!

மற்றவர் கற்பனை உருவமாய் !!!


குட்டிக்குட்டிச் சாரல்

 தோற்றபின்   எழுந்த 

நிமிடம்

தந்த கனவின்னோடு 

தோற்றேயான கற்பனைகள் 

கற்று தந்த  புத்தகம்

அடுத்த நிமிடம் 

பொய்யென்றதால் 

இந்த நிமிடம்   எனக்காய் 

பூத்தது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 மறக்க நினைத்தே தேற்ற

மறதியிடம் கொஞ்சிக்கேட்கின்றேன்


என்னை மறந்தே உறங்கிட 

ஒரு நாளை

குட்டிக்குட்டிச் சாரல்

 தன்னில் தன்னை தொலைத்து

தன்னைதேடும் தம்மில் 

தன்னையெடுத்து

மற்றவரையும்  சிந்தித்து   

வாழும்  ஓரு உறவு உலத்தின்

உயர்வு!!!

Thursday, 23 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 முற்களின் நடுவே 

விழுந்தபூவிற்குள் 

கற்களின் வலிசொல்லிய

 காயத்தின் மேல் 

சொற்கள் கொண்டு மருந்தானாய்!!!

என் இதயதுடிப்பில்  

சேரா ஓற்றை வார்த்தை

உன்னையையும் என்னையும் 

பிரித்தது தனித்தனியாய்   

அந்த  இடையில்

 இடைவிட ஏமாற்றம் 

என்னை   தூரமாக்க 


தூரமாய் விழுந்த 

தூரத்தின் நடுவே 

கருகிப்போன மலராய் 

தேடிபார்க்கின்றேன்!!   உயிருள்ள 

ஓரு சொல்லை  

இல்லையென்றது தமிழ் !!

பூவை  விட்டு  பிரிந்த 

வாசம்போல் !

உன்னிடம் வந்தே

கடனாய்  போன 

கடன்காரியாய்  தமிழிடம்

ததோற்றுகிடக்கின்றேன்

 கருகிப்போன  பூவைப்போல் !!!


குட்டிக்குட்டிச் சாரல்

 கடக்கும் வரை தெரியா என்

கடந்த காலசுமையை


 கடந்த பின்னே கேட்கின்றேன்  

என்னை கடக்கும்விழிகளின்

அனுதாபார்வையினுடே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓருவர் எனக்கு கற்று தந்த

பாடத்திலேயே 


 என் வாழ்க்கை தவறை

திருத்திட நின்று பார்க்கின்றேன்

என் வாழ்க்கை   கண்ணாடியை!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 எட்டிபிடித்த கனவினை 

கட்டியணைத்தே நடந்திட

முடியா கற்பனை தேடலில் 

தொலைவதே

நியமென சொல்லியழுகின்றது 

வாழ்க்கைத்தேவை!!!!


Tuesday, 21 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 பேச்சின்வீச்சு வார்தைகளில்

விளையாட ! விளையாடும்

 விளையாட்டுப்பொருளாய்  



தேன்றுவதே பெண்மை

காத்திட  கரத்திடமே 

 கனியைப்பெறத்தவிக்கு

போராடடம் !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தளிர்க்கொடி

 தளரும்  தளிர்நடை  கண்டு 

ஆதவன்  எழுகின்றதே  அடிவானில் 

மேகப் போர்வை விலக்கி!!

தளிர்கொடி 

 தளரும் தளிர் நடைகண்டு

தென்றலில் மோதி மேகம் உடைந்து

அழுது தவித்து வடிக்கின்றதே

 நீரை!!

தளிர்க்கொடி 

தளரும் தளிர்நடை கண்டு

வானில் மெல்ல    வளைகின்றதே 

வானவில்

 புன்னைகை்குடையாய்   !!

தளிர்கொடி 

தளரும் தளிர் நடைகண்டு

மாமன் இதயத்துடிபிற்குள்

 ஓர்அலை  மாமன் 

மனசையுடைக்கின்றதோ

உணர்வாய்  !!




தளரும் தளிர்க் கொடியோடு  

தளர்வாய் தலை கவிழும்

 பூவிற்க்குள்  மெல்ல 

எழுகின்ற வாசம் போல்

மெல்ல உயிர் பெறுகின்றது தளிர்கொடி!!!



Monday, 20 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இழந்தவை புரியா 
இலக்கணப்பிழை இவள் 
தொட்டதை தடுக்கும் கைகள்
தடாகத்தை விட 
தண்ணீர்ததும் விழிகள்
ஒரமாய் தனியே ஒரு 
அனாதை  போராட்டம்
கூடவே பல உறவு 
தூரமாய் தோன்றும்
அவளுக்கும்!!! 


எட்டி பிடிக்க ஆயிரமிருக்க
தடைகளாக்கும் 
அவள் கோலங்கள் 
தன்னை தேற்றி 
தன் காலுன்றி எழுந்திட
காலம் கேட்கும் 
நாட்களை கடனாய் 
காப்பதாய் பாதுகாப்பதாய் 
தடைகள்போடும்  உறவுகள்
திருபும் திசையெங்கும் 
 மனிதம்!!இவள் கதை பேசும் 
பலதாய்
மங்கள அழகில்  
வலையவந்தவளை
அமங்களத்தின் 
அடையாளமென்று  பூட்டி
வைத்திட ஆயிரம் கதைகள் 
இரக்கமற்ற மனதனை  
படைத்த இறைவனையே  சபிக்க
தோன்றும் அவளுக்கும்
இருந்தும் !!தன்னக்காய்
ஓடிடயெழுந்தால்


எத்தனையே  மனிதன்
 இரக்கமென்று தப்பாய் 
அவள்  கைபிடித்திட 
துடிப்பார்
அதனையும் தாண்டியேடும 
இவளிடம்  இரக்கத்தை 
காட்டிட   ஓரு 
மனிதன் கிடைப்பது  
அதிசயம்
அந்த அதிய இதயம்  
கிடைத்தாலும் அதையும்
அசிங்கமாக்கும்  இவ்வுலகின் 
முகத்தை உடைத்தெடுக்கும் ஆண்மகன் 
உறவின் வரம்
அந்த வரத்தைபெற்றவள் 
வாழ்க்கை  உயர்ந்த புத்தகம் 

குட்டிக்குட்டிச் சாரல்

உன்னால்  உனக்காய்  

செய்ய  முடியா  வாழ்வை 

கற்பனையாக்கினாய்



என்னை புரியாமலே

 என் உணர்வை

நீ   சிந்தியாமல் !

உனக்காய் சிந்ததில்

உடைத்தெறியபட்டது  என் விம்பமே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 கனவுகள் தேற்றதால் 

நினைவுகள் 

ஆசைகளை  வேடிக்கை

பார்த்திட  



கற்பனைகள்

 தன்னை இழந்தது

 எல்லாம் மாயையென்றது!!!

Sunday, 19 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 திரும்பி பார்க்க மறுக்கும்

 நம் வாழ்வின் ஆசைகளை



 கொஞ்சம்  நிறுத்தி நின்று

 திரும்பிபார்த்தால் 

நாம் இழந்தவை பெரிதாய் தெரியும் 


Saturday, 18 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உயிர்வரை உயிர்யெழுதும்

உயிர்ஓசை  ஒரு நெடி சந்தோகம்



உயிரையே எடுத்திடும் 

உயிர் நேசம்

குட்டிக்குட்டிச் சாரல்

  ஒற்றைசொல்

 உயிர்வரைத்துடிப்பு  

உறவான பின்னே

 தேடியே இறக்கும் உயிர் 

கற்பனை பூந்தோட்டம்

கல்லறைகேயழகு   

விற்பனைக்கு  கோடிக்கதை

படித்தும் புரியாப்பாதியின் 

பாதியாய் பாரெங்கும்  உறவு!!!!

Thursday, 16 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்பிக்கையால் 

இறைவனிடம் அழுகை. நம்மை 


நம்பமறுத்தால் நம்மோடு

நாம் நாமெழுதும்  பிரிவு

சத்தமில்லா யுத்தம் 


 

குட்டிக்குட்டிச் சாரல்

 விடைதேடும்

 விடையாக  நீ

கேள்வியேடு நான் 



 மாறுபட்டே மாற்றியேடி 

மாறிவிட்டோம்  நாம்

யாரோவாய்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

இதயத்தின்  தாலட்டில்
ஓரு   தொட்டில் 
காத்திருக்கு 
தூக்கத்தை தொலைத்து 
ஒரு  கனவின் தாலாட்டில் 
ஓரு  தொட்டில்
   பூத்திருக்கு


நியமென கனவு
 சொன்னதால் ஒரு 
விழியோர தாலாட்டில் 
ஒரு தொட்டில்
விழித்திருக்கு 
வீ தியோரம்  தூக்கத்தை 
விற்று விதியோரத்தொட்டில் 
தனித்திருக்கு 

Tuesday, 14 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உடல் விற்று உடல் வாங்கி



உடல் மாற்றும் சாக்கடைக்குள் 

உடல்களுக்கு! என்ன பெருமை

Sunday, 12 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மண்வாசணை மழைத்துளி

மண்ணேடு  உறைந்த 

மண்ணின் ஈரமே

என்னேடு என்னாலும் 

நின்றாடும் குழந்தைத்தமிழே 

பின்னாடும் இளமையை 



முன்னாடகவியாடும் செந்தமிழே 

சொல்லாடும்  உன்இனிமையில் 

கொஞ்சம் வில்லாட வந்த அம்பு 

பூவேடு  வந்த வாசணையில்

கண்ணால் சொல்லா நேசத்தின்

கவியாய்  நின்றாடா

காதலில் மலர்ந்தாடும் இதயத்தை 

கற்றிட தவமிருக்கும்  தமிழே 

கொஞ்சம்  கொஞ்சி பேசினால்

 என்னேடு அழகாய் தோன்றியாடும் 

 செந்தமிழின் இசையே 

கருமையின்கார்காலத்தின்

ஒளியாய் ஓளிரும் ஓளியே 

அடிவானத்தின் 

வண்ணத்தில்  ஓளிரும்

எந்தன் எண்ணத்தின் வண்ணத்தின்

அழகின் அழகே!!!

எந்தன் காதல் பூவின்

 உயிர்ஒவியம்நீயே!!








Friday, 10 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

பிரிந்தோடும் 

நீரோடை  போல் 

தடைதகர்த்து

வழிதேடியிணைத்தோடும்

  ஒன்றாய்  மனிதன் 

ஆனால்



நேசம்கொண்ட 

மனிதனேடு 

பிரிவானால்  தடைபோட்டு

தடைதாண்டா  வழியடைத்து 

 தனியாகி  தன்மேல்  

நேசத்தின்பெருமை கொள்வதேன் 

Thursday, 9 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உயிரேடு கலந்து

 உயிர்வரை போராடி

உயிர் வாழ 



 வாழ்வின் உணர்வில் 

 கலந்ததோடியதை 

 உயிர் பிரித்து

உணர்வி்ல் நிறுத்தி 

தன்னையெடுத்து

மற்றதையழிக்கு நேசம்

நிலவோடு ஓர் சாரல்.............

 நிலவே  நிலவின் நிழலே

நியமாய் இருளுக்குள் 

தொலைந்ததும் நீயே!!

ஒளியின் நிழலுக்குள் 

நிழலாய்  தொலைத்ததும்

 நீயே !!

கனவாய் தூக்கத்தை 

 தூங்கியதும்    நீயே!!

கனவிலும் கண்ணீரை 

கரைந்ததும் நீயே   !!

காலை மாலை  தொலைத்த 

 தேடலானதும் நீயே !!
விழிகள் ஏங்க  

தொலைவாய்  போனதும் நீயே!!!

மறைந்து மறைந்து 

 மறைவிற்க்குள் 

ஊமைய்  நின்றதும்  நீயே!!

ஊமையின் மொழிக்குள்ளும்  

உணர்வுகள் காட்டியதும் நீயே 

உணர்விற்க்குள்  சிறைபட்ட

மதியவள்  கதவுகள்  

உடைத்ததும் நீயே!! 

காற்றுக்குள்  காற்றோடு 

காற்றாய் மறைந்து 

கற்பனை கதைபடித்ததும்

 நீயே!!!

வேடிக்கையாக்கி வேதனை 

தந்ததும் நீயே!!! 

அந்த வேதனையை 

ரசித்து அவளை 

கேலிக்கையாக்கியதும் 

  நீயே!!

  ரசித்தவள் ரசனையின்

 கனவுகளை கடசியில் கண்ணீரில்

 நனைத்ததும் நீயே!!

கண்ணீர் கண்டும் கரையா இரும்பாய் 

இருந்ததும் நீயே!! 


Monday, 6 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சோலையோரம்  காலைநேரம்

கானாபாடும் பறவை யோடும்

 ஏனோ கொஞ்சம் 

இதமாய் தோன்றும் மனதினோரம்  

ஏதோ நினைவு  



தோன்றித்தோன்றி மறைய

இயல்பாய்  துடிக்கும் இதயம்

காணாமல் போன ஒன்றை

 தனக்கேட  உணர்வுகள்   

எதை எதையே  

சொல்லிக்குழப்ப!

பிடிவாதம்  கொஞ்சம்  தனக்காய் 

வேடிக்கை   காட்டும்

ஆனாலும் தேற்றே தவித்தும் 

 இயல்பாய்  நடிக்கும் மனசு !!



Sunday, 5 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பூத்த பூவிற்குள்

 நான் ஒருபூவினின்

சருகானேன்!!

கண்கள் தேடிடும்உறவிற்குள் 

நான் ஒரு இறந்து போன  

உயிரானேன்!!!!



பார்க்கும் பார்வைகள்  

நான்  ஓரு ஒவியத்தின் 

இருளானேன்!!!! 

எழந்தேடும் கற்பனைக்குள்

 நான் ஒரு பொருளற்ற 

சொல்லானேன் !!!

விழுந்தேடும் கனவிற்குள் 

 நான்  ஒரு பகல் 

நேரத்தூக்கமானேன்!!!

விரைந்தோடும்  காலத்திற்க்குள்

 நான் ஒரு முகவரியற்ற  

அஞ்சலானேன்!!!!

நின்று பேசும் மனிதனுக்குள் 

நான் ஒருபொழுதை போக்கு  

தேடலானேன்!!!!

நேசமென்ற இதயத்திற்குள்  

நான் ஒரு குறும் செய்தி 

தகவலானேன் !!!

பாசமென்ற உள்ளத்திற்குள் 

 நான் ஒரு ஏமாறும்  

கைதியானேன்!!!

இருண்ட வாழ்க்கைக்குள் என்றும்

 நான் ஒரு ஓளிகொடுக்கும்

 ஓளியாவேன்!!!



Saturday, 4 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 தவறுகளை ஏற்றுக்கொள்ளா



உறவுகளை நேசித்தால்

 ஏமாற்றங்களும்வலிகளும் 

உறவாகும்

Thursday, 2 December 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாமன் தோப்பு  ஊஞ்சல் 

மாமன் மாடத்து துளசி  

வண்ணமயில் நடை

மல்லிகைகொடியாடும் பந்தல்  

சண்டையிட்டு கேள்வி கேட்க்க கிளி

கொஞ்சி பேசும் மைனா  

வயலேடு பேசும் தென்றல் 

அருவிபோல் ஓடும் நீர் 

அதனேடு  துள்ளி  குதிக்கும்மீன்கள்

  அமதியை உடைக்கும் 

வேலையாட்கள் 

அதனையும் வேடிக்கை பார்க்கும்

சின்னஞ்சிறார்கள் 

அடிக்கடியழும் கணக்கபிள்ளை

கம்பீரம் தோற்கும் மாமன் நடை

கண்களும் ஏங்கும் ஆண்மை 

கரடுமுரடு பேச்சு ஆனாலும்

கவியாய்  மாறும் ஓருத்தியேடு மட்டும்

அழகாய் தேற்கும்  பார்வை  

அயிரம் பேர் நடுவிலும் தெரியும்  உணர்வு 

சொல்லியும்புரியாக்காதல்

சொல்லாதே  பிறந்தத பிறப்பு

கேட்கமல்  துடைக்கும் கைகள்

கொஞ்சம் துவண்டால் துடிக்கும் இதயம்

பார்க்காமல்  தேடாமல் பேசாமல் 

இருக்கா மனசு 

அவள் உயிரை மட்டும் சுமக்கும் உடல்

யார் கடந்தும்  மாறா காதல் 

மாமன் தோப்புக்கு அழகு 

அவள் வாயாடும் வார்த்தைக்குள்

மாமன் வாழும் புன்னகையின் அழகே!!

மானின் அவள்!!!





விழி கண்டு மொழி பேசும் சாரல்......................

 எவ்வளவு ஆழமாய்  

நாம் புரிந்து கொண்டாலும் 

நம்மைபுரியா இதயங்களோடு  

 வாழும்போதே. நம் 

புரிதலும்  தடம்மாறும் !!!

நிறைந்த உணர்வாய்

நம் படைப்பு  இருந்தாலும்

குறைந்த புரிதலாய்  புரியும் 

ரசனையே  நம் படைப்பை 

தோற்கடிக்கும் !நம் 

வாழ்க்கை 



 நம்மை புரியா  உணர்வுளால்  

காயப்பட்டு காயப்பட்டு 

மாறும் போதே நிறைந்த 

கோவமாய் நாம்தெரிகின்றோம் !!!

இங்கே நம்மை நாம் 

வெற்றிபெற்றாலே 

 போற்றபடுகின்றோம் !


குட்டிக்குட்டிச் சாரல்

நமேக்கே தெரியா நம்மை
சிலநேரம் நமக்கு சொல்லும்
விம்பங்களை கண்டு கோவம் கொள்வதே
நம்விம்பத்தின்  உண்மை!! தோல்வியாய்
நினைந்து சண்டையிடுவதற்கு நம்மை
சிந்தித்தால் வெற்றியாய். ஒரு உறவு பூக்கும்!! 

Monday, 29 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓரு மரணப்பாதையில் கல்லறைக்கு

அருகே பாதம் 

மனசு திரும்பி பார்க்கின்றது

பாதையை  

வீசப்பட்டுகின்றது கனவு  

ஏக்கத்தோடு துடிக்கின்றது இதயம் 

எடுத்திட கைகள் நீள்கின்றது ஆசையில்

முதுமை ஏலனமாய்  எனக்குள்

புன்னகைகின்றது

Sunday, 28 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 என் விழிகளில்  விழுந்த விம்பம்

விசும்பியழுகின்றது ஏனோ

சித்திரம்பேசவில்லையென அழுகின்றதா

இல்லை சித்திரத்தையே தொலைத்திட்டு

அழுகின்றதா

குட்டிக்குட்டிச் சாரல்

 எம்மை எமக்கான எதிரியாய்

உருக்கியே எம்மை தேற்றோம்

தோற்றும் புரியா எம்மை  

ஒன்றாக தந்திரத்தாலே எம்மை இன்னும்

இழந்துகொண்டே போகின்றோம்  இன்னும்

எதிரியை வெளியே தேடுகின்றோம் 

நம்மை நாம் திரும்பி பார்க்காமலே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 கோவில் வாசலில் விடுதலை விதை

தன் வறுமை போக்க யாசகம்

கேட்கின்றது தியாகத்தின் பெயரால்

கடவுளுக்கு பயந்ததே 

உள்ளே செல்லும்  எம் மனசிற்கு

தியகத்தையும் புரியவில்லை 

கடவுளையும்புரியவில்லை 

ஆனால் விடுதலை மட்டும் புரிகின்றதே

ஆச்சரியம் தான் எம்  இனம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்பியே நம்பிக்கை நம்பியதால்

தேற்றாலும்  நம்மை தேற்ற நிமிடத்தில்

கற்ற நம்மை யாரும் தேற்கடித்திட முடியா

உறுதியே. வாழ்க்கை

Saturday, 27 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

ஒரு உயிர் ஒளியின் நினைவில்

இரு உயிர்யெழுதும் கதை

கற்றிடா பாடம்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வித்துடல் விதைத்து 

உதிரத்துவியர்வையில்குளித்து 

மற்றவை மறந்து நல்லதையெண்ணி

விதையான உயிராய் விழுந்து

 தீப்பூக்காடான தேசத்தில்

கருகிய வாசணையில் 

அவையங்கள் இழந்துஎழுந்திட முடியா 

இதயத்தின் வலிகளில் 

விழுந்தோடும்நீர் தடாகத்தில் 

பூவான உயிர்களின் மூச்சுக்குள்

கேட்டிடும்  உணர்வினை  

கையெடுத்து வணங்கி

தகுதியற்றவளாய்  மண்டியிடுகின்றோன் 

உயர்ந்தவர்களே உங்கள் உயர்ந்த எண்ணத்திடம்


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இழந்தவை கேள்வியாக 

இருப்பவைவிடையற்று தவிக்க 

நடந்தவை  கதையில்

நம்மை தொலைந்தோம்

  நம்மையே நம்பாமல்

விழுந்ததையெழுப்பிடாமல் 

  விரும்பியதைவிரும்பாமல்  

நமக்கே நாமே எதிரியானோம்

நம்கதையில்  

எடுத்ததை ஒழித்ததை  

எவர்கேட்டும்  கொடுக்காமல் 

இருப்பதையும்தொலைந்தோம் 

நம் செயலால்  

நம்பியதும்கேள்வியாக 

நம்பிடாமனத்திடையே  

நம்பிக்கை அறுத்தோம் 

நம் சுயநலத்தால்  

இருந்தும்  நம்மிடையே 

இருக்கும்உணர்வால் 

எழுந்திட  சொல்லியும் 

எழுந்திட  முடியாமல்  

இடைவெளியாகின்றோம்

நம்மோடு 


Friday, 26 November 2021

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

 விதியே !சதியே மதியே 

மண்ணில் விழ்ந்த உதிரம்

வழிந்தே  ஒடிய வனத்தில்  

எழுந்த கல்லறைகள்!  தம்

எண்ணத்தை  சொல்லியே 

 தன்னை கொடுத்து மண்ணில் 

வீழ்ந்தது  உணர்வாய்!!!

 எண்ணத்தைதொலைத்து 

மண்ணையும் விட்டு 

 கல்லைமட்டும் வைத்தோம்  

நம்நினைவில்  !!சிந்தைக்குள்

நம் நல்லதை சிந்தித்து  நாம் 

நமக்காய் வாழ்வதை 

மற்றவர் அறியாமதியால்

நம்மை காத்திட்டோம் தெளிவாய்!!!

கொடுத்த தாய்  தவிக்க

காத்திட மகனற்று புலம்ப 

பசித்தவயிறு வலிக்க

ஓற்றையிடமின்றி   துடிக்க  

நாம் கல்லாய்

பத்தோடு பதினென்றை

சொந்தமாக்கிகொண்டோம் விடுதலையை !!!

 நமக்காய்!!

பெற்றபிள்ளை சிறக்க மற்றவர்பிள்ளை

இழந்தோம் நமக்காய்  நாமே

 நீதிவழிகதைபடித்த நீதி தமிழாய்

நீதியற்ற  சரித்திரத்தில் நீதியுள்ள

மனிதனாய்நமக்காய் நாம் வாழ்கின்றோம்

நம்பொறுமைபேசி!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்ணின்மணியே!

  கண்மணியே

என் உயிர் விட்டு போன 

மூச்சுக்காற்றே

யுத்தமின்றி சத்தமின்றி 

என்னைத்தேற்கடித்த

 என் வாழ்க்கை தேல்வியே

உணவின் ருசியறியா 

ருசியை  என்னிலிருந்து

பிரித்தெடுத்த  

சுவையின் சுவையே

பசியில்லையென்றாலும் 

 பட்டினியாய் 

உறங்கவிடா பசியே  

 இப்பே!!

சண்டையிட்டு உணவூட் ட

 நீயில்லை  என்னோடு!!

என்பிடிவத்தின்பிடிவாதமே 

என்னோடு சண்டையிட்டு

முத்தமிட்ட நிமிடங்கள் 

மட்டுமே நினைவில்புன்னகைக்க  

நிழல் மட்டும் நியாமாய் முன்னே

கண்ணீரோடு நிக்கின்றது!!!

அப்பப்ப !!!

உன் தமயன்

நேசிக்கும் நிடத்தில் எப்ப 

இவன் மகளாகளாய்

என் மடிவருவாய் என என் 

உயிர்காத்திருக்கு


விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 பாட்டன் முப்பாட்டன் 

பெண்பிள்ளைக்காய்

உயர்த்தியவேலியையும் காணேம்

நம் ஒழுக்கத்தையும் காணேம்

பண்பாட்டு சாக்கடை 

கறைகள் என்ற நம் இனத்தின் 

பண்பாட்டை  உடைத்தெறிந்த

நம் தன்னம்பிக்கை 

வலுக்கி தேற்ற  இடத்தில்

அறிவாளியுமில்லை பட்டிகாடுமில்லை 

பெண்மை மட்டுமே 

இறந்துகிடக்கின்றது  அனாதையாய்!!!