Thursday 2 December 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாமன் தோப்பு  ஊஞ்சல் 

மாமன் மாடத்து துளசி  

வண்ணமயில் நடை

மல்லிகைகொடியாடும்பந்தல்  

சண்டையிட்டு கேள்வி கேட்க்க கிளி

கொஞ்சி பேசும் மைனா  

வயலேடு பேசும் தென்றல் 

அருவிபோல் ஓடும் நீர் 

அதனேடு  துள்ளி  குதிக்கும்மீன்கள்

  அமதியை உடைக்கும் 

வேலையாட்கள் 

அதனையும் வேடிக்கை பார்க்கும்

சின்னஞ்சிறார்கள் 

அடிக்கடியழும் கணக்கபிள்ளை

கம்பீரம் தோற்கும் மாமன் நடை

கண்களும் ஏங்கும் ஆண்மை 

கரடுமுரடு பேச்சு ஆனாலும்

கவியாய்  மாறும் ஓருத்தியேடு மட்டும்

அழகாய் தேற்கும்  பார்வை  

அயிரம் பேர் நடுவிலும் தெரியும்  உணர்வு 

சொல்லியும்புரியாக்காதல்

சொல்லாதே  பிறந்தத பிறப்பு

கேட்கமல்  துடைக்கும் கைகள்

கொஞ்சம் துவண்டால் துடிக்கும் இதயம்

பார்க்காமல்  தேடாமல் பேசாமல் 

இருக்கா மனசு 

அவள் உயிரை மட்டும் சுமக்கும் உடல்

யார் கடந்தும்  மாறா காதல் 

மாமன் தோப்புக்கு அழகு 

அவள் வாயாடும் வார்த்தைக்குள்

மாமன் வாழும் புன்னகையின் அழகே!!

மானின் அவள்!!!





No comments: