விதியே !சதியே மதியே
மண்ணில் விழ்ந்த உதிரம்
வழிந்தே ஒடிய வனத்தில்
எழுந்த கல்லறைகள்! தம்
எண்ணத்தை சொல்லியே
தன்னை கொடுத்து மண்ணில்
வீழ்ந்தது உணர்வாய்!!!
எண்ணத்தைதொலைத்து
மண்ணையும் விட்டு
கல்லைமட்டும் வைத்தோம்
நம்நினைவில் !!சிந்தைக்குள்
நம் நல்லதை சிந்தித்து நாம்
நமக்காய் வாழ்வதை
மற்றவர் அறியாமதியால்
நம்மை காத்திட்டோம் தெளிவாய்!!!
கொடுத்த தாய் தவிக்க
காத்திட மகனற்று புலம்ப
பசித்தவயிறு வலிக்க
ஓற்றையிடமின்றி துடிக்க
நாம் கல்லாய்
பத்தோடு பதினென்றை
சொந்தமாக்கிகொண்டோம் விடுதலையை !!!
நமக்காய்!!
பெற்றபிள்ளை சிறக்க மற்றவர்பிள்ளை
இழந்தோம் நமக்காய் நாமே
நீதிவழிகதைபடித்த நீதி தமிழாய்
நீதியற்ற சரித்திரத்தில் நீதியுள்ள
மனிதனாய்நமக்காய் நாம் வாழ்கின்றோம்
நம்பொறுமைபேசி!!
No comments:
Post a Comment