நிலவே நிலவின் நிழலே
நியமாய் இருளுக்குள்தொலைந்ததும் நீயே!!
ஒளியின் நிழலுக்குள்
நிழலாய் தொலைத்ததும்
நீயே !!
கனவாய் தூக்கத்தை
தூங்கியதும் நீயே!!
கனவிலும் கண்ணீரை
கரைந்ததும் நீயே !!
காலை மாலை தொலைத்த
தேடலானதும் நீயே !!விழிகள் ஏங்க
தொலைவாய் போனதும் நீயே!!!
மறைந்து மறைந்து
மறைவிற்க்குள்
ஊமைய் நின்றதும் நீயே!!
ஊமையின் மொழிக்குள்ளும்
உணர்வுகள் காட்டியதும் நீயே
உணர்விற்க்குள் சிறைபட்ட
மதியவள் கதவுகள்
உடைத்ததும் நீயே!!
காற்றுக்குள் காற்றோடு
காற்றாய் மறைந்து
கற்பனை கதைபடித்ததும்
நீயே!!!
வேடிக்கையாக்கி வேதனை
தந்ததும் நீயே!!!
அந்த வேதனையை
ரசித்து அவளை
கேலிக்கையாக்கியதும்
நீயே!!
ரசித்தவள் ரசனையின்
கனவுகளை கடசியில் கண்ணீரில்
நனைத்ததும் நீயே!!
கண்ணீர் கண்டும் கரையா இரும்பாய்
இருந்ததும் நீயே!!
No comments:
Post a Comment