இதயம்
தடுமாறும் இடத்தில்
கைபிடித்தே நடக்கும்
கைபிடியானேன்
இதயம்
தடுக்கி விழுந்த இடத்தில்
பிடித்தெழுந்திட
கல்லானேன்
இதயம்
புரியா நட்பு
பிரியும் இடத்தில் புரிந்திட்ட
நட்பானேன்
இதயம்
அடைந்த மனவலியின் தடுமாற்ற
குழப்பத்திற்குள் தெளிவின்
உறுதியானேன்
இதயம்
தன்னைதேற்றியேதானேயெழும்வரை
நல்சிந்தனை நானானேன்
எல்லாம் கைசேர
கைதட்டி வாழ்த்திடும் ஓசை
தூரத்தின் தூரமானேன்
என்னை நானே ஏமாற்றி!!
என்னையே தொலைத்து
என்னை புதைத்தேன்
எல்லாம்தெரிந்தும்!!!
தப்பாய் தவறாய்
என் தேற்றங்களை
மாற்றியவர் விம்பங்களாய்
நான் மாறியும்
மெளனமாய் வேடிக்கை
பார்த்தேன்
புரியாமல் தடுமாறுவது மனிதமனம்
தானே இறையே !!!
நம்தேவையும் தேடலும்நம் சுயநலம்என்பதால் !!
பார்வையும் எண்ணமும்
மனதின் கற்பனைதானே
புன்னகைகள் மெளனிக்க
புதிராய் மாறியது என் திருவுரும்!!!
நல்வையும் நல்லெண்ணமும் மாறாமல்
என்றும் நானே தானே தனியாய்!!
மற்றவர் கற்பனை உருவமாய் !!!
No comments:
Post a Comment