Tuesday, 21 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தளிர்க்கொடி

 தளரும்  தளிர்நடை  கண்டு 

ஆதவன்  எழுகின்றதே  அடிவானில் 

மேகப் போர்வை விலக்கி!!

தளிர்கொடி 

 தளரும் தளிர் நடைகண்டு

தென்றலில் மோதி மேகம் உடைந்து

அழுது தவித்து வடிக்கின்றதே

 நீரை!!

தளிர்க்கொடி 

தளரும் தளிர்நடை கண்டு

வானில் மெல்ல    வளைகின்றதே 

வானவில்

 புன்னைகை்குடையாய்   !!

தளிர்கொடி 

தளரும் தளிர் நடைகண்டு

மாமன் இதயத்துடிபிற்குள்

 ஓர்அலை  மாமன் 

மனசையுடைக்கின்றதோ

உணர்வாய்  !!




தளரும் தளிர்க் கொடியோடு  

தளர்வாய் தலை கவிழும்

 பூவிற்க்குள்  மெல்ல 

எழுகின்ற வாசம் போல்

மெல்ல உயிர் பெறுகின்றது தளிர்கொடி!!!



No comments: