Monday, 8 August 2022

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 சின்ன ஆசை சிங்காராசை

என்னை தள்ளி  வைத்து

புன்னகைக்கும்பூவே

உன் மீது ஓர்  ஆசை  !!!

ஆசை ஆசையாய் 

அள்ளிசூட ஆசைகொண்ட 

ஆசைக்கு  இல்லைபோவென 

ஆசையை  எரித்து  எரிந்த 

 பூவே!

உன்னை  தொட்டெடுத்து 

கூத்தல் சோர்க ஆசையில்லை

போ!! 

மங்கையிவள் வாசம் 

கொண்ட  மல்லிகைப்பூவே

வண்ணம்  தந்து  கூந்தல் 

சேர தடையும்  கொண்ட 

நீ வேண்டாம்  எனக்கு

போ !!

உன்னைக்கட்டி

தலையில் சூடும் ஆசையில்லை

நீ

என்னைத்தெட்டு தலையில்

வாட

என்னைபோலும்  வேண்டாம்

போ!

கட்டிமாலையாக்கி

கழுத்தை அழகு பார்க்க 

ஆசையில்லை என்றாலும்

வண்ணம்கொண்டரோஜாவே  

உன்னை விடவும் 

ஆசையில்லையெனக்கு

வாசம் தோற்றபெண்ணிவள் தான்

உன் வாசத்தோடு  எறிந்தே போக

சின்ன ஆசை உன்மீது  எனக்கு

மங்கையவள் அழகில் 

மங்களத்தை கொடுத்து

அமங்கலம் தேற்றிட  

கதைதேடவில்லை

உடலுக்கு கொடுக்கும் அலங்காரம்

மனசுகிடைக்கா பிறப்பென

எனக்கும்தெரியும் 

ஆனாலும் ஆசை உன்  மீது

என் உடல்மூடும் ஆடையாய்

என் தீ தாங்கும் குளிர்ச்சியாய் 


என்சாம்பலேடு 

ஒன்றாய் கலந்தே கடலில்

கலக்க!!!


No comments: