Wednesday, 31 August 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 கனவின் கனவிற்குள்

கற்சிலையென்றை கண்டேன்

கையேடு  கையெடுத்து 

கனவிற்குள் நடந்தேன்

அழகான பெண்வடிவம் 

 மூடியவிழியின்திரையானது  

என்னைப்போல்

கனவிற்குள் ஒரு கற்பனை 



என்கற்பனையை  தடைபோட்டது!!

ஒரு குரல் காற்றைகிழித்தே

என் நடையை

தடைபோட  மெல்ல

திரும்பினேன்

குரல் வந்த திசைகேட்டு !

வேல்விழியின் வால்வீச்சே

திசைதொட்ட ஒளிவீச்சே

உன்மொழிகாற்றின் வில்பட்டு

என் இதயம் விழுந்ததடி கால்லடியில்!!!

என்ற கவி கேட்டு

கற்சிலை போல் நானேயானேன்

சிலைவடித்து கவிவடித்தவன்

குரல் கேட்டு !!!இருள் தனை 

கிழித்தெடுத்தவன்  உருவம் தேட

கனவினை உடைத்தே  விழிகள் திறந்தது

பாராமல்!!!

No comments: