Wednesday, 21 September 2022

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

முற்கள் பாய்ந்த  

சொற்களை  கொஞ்சம்

சேகரித்தேன் என்னுள்

என் பாதைகளை  கடந்திட!

கற்கள் பட்டவலியை

மறந்தே பதம்  போக

தக்க வைக்க  ஆசையற்ற

பயணமான வாழ்வில்  கொஞ்சம்

கற்பனையை இசையாய்

கொடுத்தேன் என் இதயம் தாங்க!

இயல்பாய் இயங்கா இதயம்

துடிக்க மறந்த நிமிடம்

இசையே ஒடியது

 என்னுள்  உயிராய்!

ஆச்சரியமாய் விழிக்கும்

விழிகள்தோற்றுவிட்ட  

உறவாகளாய் என்னை

தேற்றி தூக்கி தாலாட்டும் 

இசை என்னுள்

 துடிக்கும்  உயிர்த்துடிப்பு !!




No comments: