என் மாமான் கண்கள்
பொம்மையை ரசித்தாலே என்
இதயம் தாங்காமல்
கோவம் கொண்டே
சண்டை போடும்
என் கோவம்
தப்பே சரியே அறியேன்!!
ஆனால் ஒற்றையாணைத்தவிர
இவ்வலகில் ஆண்மையே இல்லையென
தன்னை தொலைத்து
தன் அறிவைதொலைத்து
சுயமிழந்து வாழ எப்படி முடிகின்றது
பெண்ணால்!!
வீரமற்று விவேகமற்று இவ்வலகில்
ஆச்சரியமாய் தோன்றும்
பெண்மைகள் எழுதும்
வாழ்க்கை நாடகம் !!!
சந்தோஷத்தை
புதைத்து தன் நம்பிக்கையும் புதைத்து
தன்னையே அழித்திடும் எதிர்கால
சூனியக்கற்பனைகள் என்றும் !!
உன்னை இரட்டை பயிராய்
பிரித்தே வடிக்கும் வடித்தில்
கிடைக்கும் முடிவின் கதைக்கு
மட்டுமே நீ வாழ்வதாரம்!!!
பெண்னே ஒன்றை ஏந்தி
ஒன்றை பயண்படுத்தும்
ஆண்களின் இரண்டை முகத்தில்
ஏமாறுவதை உணரும்
காலம் எக்காலம்!!!

No comments:
Post a Comment