சிந்தைக்குள் சிதைத்த
சின்ன சின்ன கனவும்தொண்டைக்குழிவரை
வந்து வந்து சென்ற
அழகிய ஆசையும்
இருந்தும் மறைந்த
கற்பனைகளும்
எழுதமுடியா தோல்விகளால்
எழுதி முடித்த புத்தகம் போல்
இருந்தும் வருகின்றது
ஏழ்மையின் ஏக்கமாய் !
விரைந்தே போகும் காலம்
வரைய மறந்த நாட்கள் போல்
இருக்கும் உயிரை தேடி தருமே
விடுதலை இயல்பாய்!
நடித்தே இயலாதே தேற்கின்றது
இதயம்
இல்லையென்றதை
இருப்பதாய் எழுதும் விதியிடமே!!!

No comments:
Post a Comment