Sunday, 11 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................


 எழுதி முடித்த புத்தகம்

தீயில் சாம்பலான  தத்துவம்

இல்லையென்ற  விதி

 தொலைத்துபோன உருவம்   

இருந்தும் தேடிபார்க்கின்றனர்

சாம்பலுக்குள்  ஒழித்து கிடக்குமே

வாழ்க்கையென !

ஊமையான உணர்வு  

 உயிரே இல்லாக்கவிதை

படித்தாலும்  அறியா கிறுக்கல் 

பார்வையின் முன்னே  இருட்டு

இருளும் ஒர் நாள்  ஓளியாய்

மாறாதாயென விழிகள் ஏங்கும்  

இருந்தும்  விமப்பத்தை  கண்டு 

விழிகள்  கண்ணீர் ஊற்றும் 

சாபலும் மறையும் மண்ணேடு!!!



No comments: