Wednesday, 20 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்


 இதுவரை  தனியாக

பூட்டிக்கொண்ட என் கனவுகள்

இன்னும் யாருக்கும் புரியாமலே

சிறைப்பட்டு கிடக்கின்றது 

யாரும் புரிந்துகொள்ளா  

உணர்வுகள் போல்

வெறுப்புகளும் வலிகளும் 

தத்தெடுத்த குழந்தையை போல் 

உறவுகள் இருந்தும்

அனாதையாய் கிடக்கின்றது

தனியாய்

உரிமையற்று மடிந்த  உடலை

பார்த்து தவிக்கும் உயிர்போல்

இவளும் இவள் கனவுகளும் என்றுமே

தனியாகவே  கூடு விட்டுபறக்கும்வரை

வாழும்!!!



No comments: