Sunday 1 July 2007

குட்டிக்குட்டிச் சாரல்......,


எனக்கே தெரியாது

நீ விரித்த வலையில்
புள்ளி மானாய் நான்
இரையாக நீயெடுத்து
ருசித்து விட்டாய்
விதியென நான் அழுகின்றேன்
சதியென தெரியாது....





************************
வலி கொண்ட இதயம்

வடித்த கண்ணீரை
வானம் ஏத்தியதோ!!
பூமியும் வெள்ளையாடை
அணித்துள்ளதே.....




********************




பூட்டப்படாத கதவுக்குள்!
சுகந்திரக் காற்றை
மட்டும் சுவாசிக்கு சிந்தனை

வானம்பாடி இவள் வாழ்கை
இவள் மனதிற்கு
மட்டுமே
சிறைக்கதவுகளை இட்டுக்கொண்டாள்!!




*********************
கவிதை என்னுள்

வந்தபோது
வாழ்வை மறந்தேன்
ஏட்டில் வடித்த போது
சோகம் அறிந்தேன்





*****************

நான் பார்க்கும்
இடமெங்கும்
நீயானாய்
உனைப் பார்க்கும்
வரை.....





**************************

உயிர் ஒன்று வாடுதம்மா

பிரிவால்! பிரிந்து நின்ற
நினைவு வந்து சிரிக்குதம்மா!
இவளோடு சேர்நதே நின்று




****************************
உன்னால் என் உயிரைத் தர

முடிந்தால் உன்னால்
என் இதயத்தையும் பெற
முடியும்...




************************

என்னைத் தொலைத்து

உன்னைக் கண்டு
நீயென நான் மாறியதால்!!
இப்போ நீயும் நானும்
ஒன்றானோம்!!!


*************************

தன்னிடம் தொலைத்து
பிறரிடம் தேடி
காலத்தை கரைத்து
காவியம் வரைத்தது
ஒர் கனவு.........




*********************


என்னால் முடியாது உன்னை

மறந்து  வாழ !ஆனால்
முடியும் உன்னை
மறந்தும்  வாழ என்னாலும்
என் பலகினத்தை நான் பாதையின்
படியாக்கும் போது1!!







***************************


என்னை அவன்

புரிந்து கொள்ள
அவனுக்கு தேவைப்பட்டது
இன்னுமோர் உறவு.....




***************************


துயரத்தில் என் உருவம்

பல கோணத்தைக் காட்ட
அதைப் பார்த்த விம்பம்
அழுகின்றது தனியே..



**********************
உறவே உன்மொழி மெளனம்

என் மொழி வேதனை
நம் மொழி என்ன?









************************

உன்னேடும் என்னேடும்

வாழும் சில கால சொந்தம்
உன்னையும் என்னையும்
எல்லையின்றி தொட்டு
சொல்லுது காலத்தின் பாதை





*******************************

என்ன பதில் நான் சொல்ல

வாழ வழியின்றி வாழ்ந்த
இடம் தானின்றி அகதியாய்
அயல் நாட்டில் வேலையே
 வாழ்கையாய்
சின்ன சின்ன ஆசைகளை
பகிர்ந்து கொள்ள நேரமின்றி
வேக வேகமாய் தொலைந்த
வாழ்வை தேடும் முதுமையின்
கேள்விக்கு...............

*********************************

தொலைந்த வாழ்வின்

தொலையா நினைவே
ஏன் என்னை தொடராய்
தொடர்கின்றாய்?
யார் தந்தார் என்னை
உன்னிடம்! ஒரு தரம்
சொல்லி விட்டு தொடறேன்!
என் காயத்தின் வலிதெரியவர்
வார்தைக்குள் கைதியானவள் எழுந்து
காலத்தை வென்று காயத்தையாற்றிட
காரணத்தை தேடுகின்றேன் !சொல்லிவிட்டு
தொடறேன்!!!


**********************


தமிழ் என்னும் அமுதினை

திகட்டாது நான் உண்டு!
கரைந்திட்ட காலமதை
கவியென நான் வரைந்து!
வாழ்ந்திடும் நிமிடங்களை
உனக்காய் தந்து! உன்னோடு
வாழும் நிமிடங்களை நான்
ரசித்து! இருப்பேன் என்றும்
உன் தமிழாய்......

****************************

சரியென சரியென

சரிந்தது ஓர் சரி
சரியாய் வந்து போக!
இது சரியானதால்
சரியில்லா சரியை
சரிசெய்து சரிசெய்து
சரியாகுது இங்கே!
ஓர் சரி சரியோடு சரி சேர்ந்து!
இது சரியில்லை சரியில்லை
எனச் சொல்லி சாய்ந்தது தோல்களில்
*******************

கல்லறை மலரென்று

கன்னிப் பருவத்தில்
தொலைத்திட்ட நாளை
காயங்களால் கரைந்து
கற்பனையோடு கனவைத் தேடி
மெளனத்தின் நினைவோடு
கரைக்கின்றது! காயங்கள்
தந்தவர் காயமின்றி சிரிந்திடும்
இன்ப நாளை பார்த்திட.........
தன் இதயத்தின் வலியை
தன்னுள் அடக்கிக்யபடி !!

**********************
தமிழ் அழகு கவியழகு

கற்பனைக்குள் வாழ்வதும் அழகு!
எல்லா அழகிலும்
உங்களுடன்
சேர்ந்திடும் அழகை
தந்திடும்அழகு
எப்போதும் அழகு...

********************

என்னுள் ஏதே வேதனை
தெரியா வலி தர

தனிமை தேடினேன்
ஏனெனத் தெரியாமல்
ஆனால்.....
இசையின் அணைப்பில்
இசைக்கொரு கைதியாகி
இன்னும் நான் உயிரோடு....

***************************

மெளனங்களோடு

வாழும் நாட்கள்
ஞாபங்களோடு கழிந்திடும்
நிமிடங்கள்
ஏக்கம் கொண்டு தேடிடும்
வாழ்கை வழிதெரியப் பாதையில்
வழிதேடுது கண்ணீர்துளிஎன்றும்.......


*********************************

கண்களை மூடினேன்

கனவில் நீ வந்தாய்
விழிகளைத் திறந்தேன்
வேதனைகள் எனைமூட..







**************************

பெரும் பாவம் சுமக்கும

என் அன்பே! உன் பாவம்
சுமக்க நான் வந்தேன்
தேய்பிறையாய் தேயாது
வளர்பிறையாய் வந்து விடு
இனிய உதயம் காண்போம்
என் நாளும்.....


*****************************

ஒழிந்திருப்பதை நீ கண்டு

ஒழித்தேன் போனாய்
ஒழிந்தவள் தெரியாது
ஒழித்து போனவனே
ஒழிந்தவள் உள்ளம்
கண்டுவா? ஒருவழிப் பாதை
கனவுகள் சுமக்கும் பெண்ணென்றால்......

2 comments:

குட்டிபிசாசு said...

கிறுக்கல்கள் என தலைப்பிட்டு, ஒரு வித எண்ணக்கலவையாக பதிவிட்டுள்ளீர்கள். (தங்கள் கவிதை சோகமாக தொடங்கி, பாசமாகி, காதலாகி ஒருவாறாக முடிகிறது)

நீங்கள் இதை தனித்தனியாக பதிவேற்றி இருக்க வேண்டும். இவ்வளவையும் மொத்தமாக, பொறுமையாகப் படிப்பவர்கள் குறைவு.

கவிதை அனைத்தும் அருமை!! வாழ்த்துக்கள்!!

சு.கஜந்தி said...

நன்றிகள் எனது பதிவுகள் தற்காலிக
பதிவுகள் தான் அதனை விரைவில்
மாற்றவுள்ளேன் எனக்குள் தோன்றிய
கற்பனை தனை பதிவு செய்து வைத்துள்ளேன் திறந்த நாட்குறிப்பாக....