Thursday 5 July 2007

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


விதி


அன்னை மடிதொட்டு
தந்தை கரம்தொட்டு
மாமன் உறவைத் தொட்டு
மாமியின் பாசம் தொட் டதால்
அன்பே உன்னைத் தொட்டு
மழலைகள் வாழ்வைத்தொட்டு
சொர்கம் என்னைத்தொட
சோதனை நமைத்தொட்டு
இறப்புகள் வாழ்வைத்தொட்டு
பிரிவுகள் எனைத் தொட்டதால்
இதயம்வ லியைத்தொட்டு
கண்கள் நீரைத்தொட்டு
கவிதை சோகம் தொட்டு
தவிப்புகள் எனைத்தொட்டு
துடிக்கின்றேன் உன்னால்
இதுதான் விதியா?

2 comments:

ஜீவி said...

இது விதி அல்ல
இது தான் வாழ்க்கை
புடம் போட்ட முடிவில்
பொன் கிடைக்கும்
பூட்டி மகிழ
அனுபவ நகை கிடைக்கும்;
ஆனந்தம் அசைபோட
அந்திமம் வந்தணைக்கும்
ஜீவி

சு.கஜந்தி said...

என் கவிதைக்கு கவிதை தந்த உங்களுக்கு
என் நன்றிகள்