Friday, 17 March 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை பார்த்து பைத்தியமென

திட்டியவனை பார்த்து 

புன்னகைத்தே திரும்பினேன் 

திரும்பிய என்னுள்

அவனை நினைத்து கவலையானேன்

நான் இசையேடு பேசி

கவிதையேடு விளையாடி

உரையாடுவதை 

இவன் பார்த்தால்

இவன் அல்ல பைத்திமாவான்

எல்லோரும் ஏதோ ஒன்றின் மீது

பைத்தியம் தான்!!’இதை புரியாமல்

மற்றவரை கூறுகின்றோம்!! 

No comments: