வருடங்கள் ஓடின
நம் பிரிவிற்குள்
வாழ்கை எதை எதையேகற்பித்தது!
கற்பித்த வாழ்க்கைகுள்
உன்னைபோல் ஒருத்தன்
இல்லாமல் தோற்று போன
பெண்னானேன்!!
நம் பிரிவு தந்த
இடைவெளி மறந்த நீயோ
என்னை இன்னும்
பாடசாலை பெண்ணாகவே
பார்க்கின்றாய்!!
மாற்றதில் உடைந்த
விம்பத்தை கண்டால்
உன் முகம் தாங்காதேயென
நானும் உன் கைபிடித்தே
மடியுறங்கிய பெண்னைபோல்
நடித்துக்கொண்டே
இருக்கின்றேன்
என் சோகத்தை
உன் அன்பு கட்டிப்போடுகின்றது
என் பிடிவாத்தை
என் சோம்பலை
உன் கோவம் எழுந்திட செய்கின்றது
என்னை கண்டாலே
உன் கண்கள் உற்சாகம் கொள்ளுகின்றது
உன்னேடு வாழ்ந்த நாட்களில்
என் கண்கள்
கண்ணீரை கண்டதில்லை
பொய்யாயன என் நடிப்பில் கூட
கண்ணீர் வந்ததில்லை இப்போ
என்னை கண்ணீர் காதலிக்க
தோல்விகளே கைபிடிக்க
நீ காண நான்
நீகாணாதே உன் வீட்டு
பூசையறை படமாகவே
ஆசைகொண்டேன்
உன்னையும் என்னையும் மீண்டும்
விதி சந்திக்க வைக்கின்றது
தானாய்
கடந்து வந்த பாதையில்
சில முகம் நிலவைப்போல்
நம்மோடு கூட நடக்க
சந்தோஷாம் தரும்
தோழியாய் நானும்
என் மரணம் வரை
நீயும் இருக்கின்றோம்
மீண்டும் !!
.jpg)
No comments:
Post a Comment