Tuesday, 9 November 2021

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 கண்ணேமணியே !!!

விம்பத்தில் பதிந்தே

 சித்திரமானவளே !!

துன்பதை மறந்து புன்னகைசிந்தி  

என்னை தோற்கடித்தவளே 

கொஞ்சநேரம்பிரியா கொஞ்சு

மொழியே!! 

கற்பனைக்குள் உன்னை வைத்து 

கண்டகனவும்  கண்மூடா

காரிருளும்   காலத்தை கடத்தே

 நிற்க!உன்

புன்னகையழகை  கடந்திடா 

என் புன்னகை உன்னால் 

தேற்றதடி  !!

நீ பயணித்த  இடத்தில் 

என் பாதச்சுவடடுகள் 

சிலநெடி நடக்கையில் 

உன் வாசம் பட்டு 

அதிர்ந்த  இதயம் 

கூட உன்னைத்தேட

விழுந்திடா உன் இறுதிபயணம் 

என்னை தேற்றே ஓட

ஓடிய நாட்கள் ஒற்றை நீர்துளியானது

 எனக்குள்

எப்படி முடிந்தது உன்னால் 

என்னை அழவிடாதே 

ஏமாற்றி போய்விட  

இல்லையென்றும் என 

உணர்ந்தும் தேடியழைகின்ற

இதயத்தின் உணர்வே 

என்றும் என்னோடு வாழ்வாய் 

புன்னகையாய் !!!

No comments: