Sunday, 14 November 2021

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

 உணர்வின்  விழிப்புணர்வை 

விழிகளின் விழிம்பில் 

விதையென விதைத்து

மண்ணுடல் வித்தாகிட

மரணத்தின் உணர்வை 

உயிரென சுவாசித்தே 

சுவாசத்தை நிறுத்திட  

விடுதலை  மூச்சில் 

வீரமாய்ப்பேசி

கையுரையணியாக்கி

மெய்யுரை கதையில் 

பொய்யுரை புகுத்தி

  ஐயகோ  பைத்தமிழில்  

நாமென 

 பரிதவித்தே கண்ணீர்

வடித்தவர் உணர்வுகள்

  தன் நலனேடு பிறநலம்

கண்டு   காணாதும்  வாழுது 

பொறுமையாய்  பெருமைமிக்க 

சமூகமென்று !!


No comments: