பலகாலம் போனாலும்
சிலைவடித்ததில் சிதறிய
கற்கள் மட்டும் மாறாமல்
குற்றிக்கிழிக்கின்றது என்
பாதச்சுவடுகளை ஏன்
அப்பா? !! நீங்கள் வடித்த
வடிவமாய் நான்
நடப்பதாலா!!விட்டு
சென்ற காட்டுக்குள்
தீபமில்லை தான்!! ஆனாலும்
நீங்கள் கைபிடித்து
நடத்திய நம்பிக்கை மட்டும்
கூடவருகின்றது !இருந்தும்
தனியாக விடப்பட்டபோது
தடுமாறாத நம்பிக்கை எனக்குள்
உடைந்து சிதறி
அழுகின்றது தனியாய்
ஏன் அப்பா ?
கைப்பிடிக்கும் கைகள்
இல்லா தனிமை
கொஞ்சம்கொஞ்சமாய்
என்னை புற்றுநோய்போல்
கொன்றதால் தானோ !!!
.jpg)
No comments:
Post a Comment