Tuesday, 22 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 நிற்காமல்   ஓடிய 



கால்களை  கட்டிப்போட 

தம்பிவந்தான்  வீடு 

அதிகாலை  தேனீர் 

என்னை  எழுப்ப  விட்டுப்போனவன் 

விரும்பி  திரும்பி  தந்தான்  

தொலைந்த  காலத்தை!!

எப்போதும்  கிடைக்குமா 

என  மனசு  ஏங்க  

எப்பவும்  போல்  என்னை 

தனியே  விட்டு  செல்கின்றான் 

போதுமென!!மீண்டும் 

காத்திருக்கின்றேன்  அவனுக்காய் !!

 


No comments: