Monday, 7 July 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எதையும்  சிந்திக்காமல்! 

பாதையில்  போனவள் 

ஏன்  போகின்றாள்?  என 

பலவிழிகள்  சிந்திக்க  !

தன்  பாதையில் 

நின்ற  கற்சிலைகளோடு 

பேசியே விளையாடியபடியே 

போனவள்! கல்லில் 

அடிபட்டு  விழுந்து  

 தனக்காக  அழுத்தபோதே

அவள்  அறிவு  

நின்று  நிதானமாய்  

சிந்திக்க தொடங்கத்தான் 

புரியா அவளே  அவளுக்கு 

 புரிந்தது!

தனக்கா  இல்லா விம்பங்களையே 

தனக்காக  எடுத்து  சென்ற

தவறே  மண்ணில்  விழுந்த 

உத்திரமென !!! 



No comments: