Tuesday, 27 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 என்னை  நனைத்த

 மழை 

இளமைக் கனவை

 தென்றலால்கட்டி இழுத்து

 சொல்கின்றது 



என்னை

 விட்டுத்தனியாய்

பறித்தெடுத்திட

 கைகள் துடிக்க

வேடிக்கை பார்க்கின்றது 

 முதுமை!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 என் தண்டனையே வரமாய் வரதா

வரமானவனே வருந்தியே போகுமெனில்

உடலேடு காயமேன் 

குட்டிக்குட்டிச் சாரல்......

 எங்கேயே  எதையே

 தொலைத்ததாய் 

அங்கேயும் இங்கேயுமாய் 

இதயம்  அலைகின்றதே 

காதல் சாயம் பூசிக்கொண்டு

 இருப்பதை தொலைப்பதே 

காதலால் தானே !!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 கற்றவரின் சுயநலதவறை விட

கல்லாதவரின் கற்பனை தவறுகள்

ஒன்றும் பெரிதல்ல !!

 கற்றவர் திட்டமிட்டு செய்வதில் 

சிறந்தவர்  அவரே 



மட்டிக்கொண்டு தவிக்கும் 

வரை !! கல்லாதவர் 

தவறுகளை 

 பெரிதாய்  பேசும் 

கண்கள் தான் விழிக்கொள்ளவேண்டும் !!!!

Monday, 26 July 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என் ரசனைகள் 

என்னை ரசித்திட சொல்வதால்

நான்  என்னையே  ரசிக்கின்றேன் !!

நான்  என்னை  ரசிப்பதால் 

என்  ரசனைகள்  என்னக்குள்

எதிர்பாராமல் பூக்கின்றது !!!

என்  ரசனைகள்  எனக்குள் 

பூப்பாதலால்  

என் ரசனைகள்  

என்னையே  நேசிக்கின்றது!!!

நான்  என்னையே 

நேசிப்பதால்   

எங்கையும் யாரிடமும் யாசகம்

கேட்கவில்லை!!ஆனால் 

ரசனையுள்ளவர்

 என்னைக்
கடக்கையில் 

புன்னகையேடு மொளனிக்கின்றேன்  

ரசனைகளில் தோற்கா 

மனிதனினே எதிர்காலமென்பதால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 இருவிழியெழுதிய இருதயக் கோலம்

இவளுக்கு மட்டும்  உணர்வேடு உயிரானதேன்

மறைகையில் உதிக்கின்றதே!!

Sunday, 25 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 விரும்பலில் தொலைந்தவர்களை திட்டி

விரும்பமால் தொலைந்தவர்கள்  நடுவே

 விரும்பியது கிடைக்காமல் தொலைந்தவர்கள் மத்தியில்

தொலைந்தவர்களை தேடித்தொலைந்தவர்கள்

தோட்டத்தில் தன்னை தேடியது ஓன்றை ரோஜா

குட்டிக்குட்டிச் சாரல்......

 என் 

தனி யுலகத்திற்க்குள் 

 தனியாய் கிடத்தது

என் விருப்பங்கள்  



தேடிட தேவையில்லையென்ற

வலியேடு போட்டி போட்டுக்கொண்டு!!

யாரும்  சொல்லாதே 

மறைந்த மனிதனைப் போல்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஒடி விளையாடிடும் 



 மேகங்களே! நீங்கள் 

ஓடிய திசையில் 

நானே  ஓட 

என்னோடு விளையடி

போகின்றீர்கள் 

நின்று விளையாடிட 

நேரமின்றி போகின்றேன் 

உங்கள் !!

துறலேடு விளையாடியபடி !!




குட்டிக்குட்டிச் சாரல்......

 விரும்பியதையே விரும்பும் மனமே

எந்த துயரிலும் விரும்பும் வெறுப்பின்றி

 விலகாமல்!!




Monday, 19 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 மறந்திட மரணம் தேவையென்ற

மரணவலியினை 

கடந்திட முடியா நாளுக்குள்

இன்று ஓரு சின்ன பூவென்று

 புன்னைக்கின்றது

என் கைபிடித்து
விட்டு சென்ற 

பூவே தேடிவந்ததைபோல

கண்ணீர் துளியிற்குள் 

புன்னகை பூக்கின்றது தானாய்!!!

Saturday, 17 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உயிரே !


நீ விட்டு சென்ற இடத்தில்

உன்னைத்தேடிட முடியாமல்.

தத்தளிக்கு என் உயிர் 

 நீ கொடுத்து சென்ற

 உன் உயிரை !

நான் பக்குவமாய்

 பாதுகாகின்றேன் 

  உன் வடிவாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

  ஓரு  முறை   இரு முறையல்ல தோல்வி

பல முறை பலர்வடிவில் இறைவன் வில்லில் இருந்து

வந்த மனித அம்புகள் குற்றிய காயம் எதையும் எட்ட

நின்றே பார்ரென  தடுக்கின்றது !!!

குட்டிக்குட்டிச் சாரல்

நிலவின் தள்ளாட்டத்தால் 

 நிலையிழந்த வானம்

தாரை தாரையாய் கண்ணீர் சிந்த

பூமியே அச்சத்தில்   !!

பணத்தால் சாதித்த பணக்கார

மண்ணிலும்  கூட 

பணம் !1

 மனிதனை மட்டுமே வேண்டியே 

  தன்னை  கொடுத்தது!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 நெஞ்சோரம்  இன்னும் ஊஞ்சலாடு

மாமன்  நினைப்பு நெஞ்சமே நெருப்பாய்

எரிந்த பின்னும்   மாமா நீ   கசக்கவில்லையே

எனக்குள்!!!


Thursday, 15 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஓன்றறையடைந்து ஓன்றை பெற்றவருக்கு

ஒன்றினிழப்பு  பெரிதல்ல ஒன்றன்பின் ஒன்றாய்

இழந்ததை பெற்றிட முடியா வெற்றிடமே 

இழப்பின்  வலி!!!


குட்டிக்குட்டிச் சாரல்......

 இசையின் மடியில்


சில காலம்

தூக்கத்தின் மடியில் 

சில காலம்

தனிமையின் மடியில்

 சில காலமென

காலங்களை மாற்றமுடிந்தது 

வலிகளையல்ல!!


Wednesday, 14 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 தவமின்றி !

வரமாய் கிடைக்கும்  உறவையே

அதிகம்  ஏமாற்றி  

வாழ்கின்றது உறவு

தன்னையே தியாகமாக்குவதால் 

மதியாஉயிர்  

சாம்பலாய் கரைகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 புரியாப்பி்ரிவே 

  உலகில் அதிகம்!

புரிந்த பெண்னே 

உறவின் பலம்!

பலமாய் பலவீனத்தை

 காக்கும் பெண்மை

 இல்லறத்தின்  அழகி!

இல்றத்திற்குள்

வந்த பெண்னை

 மதிக்கும் பெண்னே

 வாழும் பெண்னில் 

சிறந்த பெண்மை!!!


Tuesday, 13 July 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவளுக்கு 

அவன் எழுதிய 

விதி  

வீதியில் நிறுத்திட

எங்கையே   ஒரு  குடில் 

 திறந்திடாதாயென 

ஏங்கிய  மனதிற்கு 



எங்குமில்லையென்றது

அவன் விதி 

இதையுடைத்திட உருதியாய்

எழுந்த மனசு 

தன்னை தானே ஏமாற்றியது 

நாளையென  சொல்லியே!!!


குட்டிக்குட்டிச் சாரல்......

 நடக்கும் போது பார்த்து பார்த்து

நடக்கும் நாம்  தான் வாழ்கையில்  பார்க்காமல்

விழ்ந்துவிடுகின்றோம்!!!

Monday, 12 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எம்தேசத்தின் சோற்றில்   கைவைத்திட 

கொளரவம் பார்தவர்கள் தான் கையுறைடன்

இங்கே கழிவறையை.  சுத்தம் செய்கின்றோம்

கொளரவமாய் எம்மை தாழ்த்தி உயர்வை தந்த

நாடே நம் சொர்கமானது

Saturday, 10 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 அமங்கலபெண்ணின்  

நெற்றியில் திலகமிட

யோசிப்பவர் 

மங்களமிழந்த பெண்மையின்

வாழ்க்கைக்கு சிகப்பு விளக்கை 

ஏற்றுகின்றனர்!!




Friday, 9 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 இளமைக்கும் முதுமைக்கும் இடையில்

தொலைத்த பக்கத்தை 

கைபிடித்தே  கூட்டிபோகின்றது  சின்ன உறவு 

சாபத்திலும் கிடைத்த வரமாய்  பெற்றதால்

கல்லிலும் முள்ளிலும் கூடவே  புன்னகைகின்றான்


குட்டிக்குட்டிச் சாரல்

 கற்பனை தந்தெடுத்த கனவே கண்முன்

தோன்றா நியமே சொந்தமென  நான்

கொண்டாடும் மகிழ்வே சற்றேனும் தலைசாக்கா

தலைவதியில் எப்போதும் உறங்கும் உறக்கமே

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னில் நான் கொண்ட நம்பிக்கையே

எனக்கான  போராட்டம்  இன்னும் தொடவதே

என்னையே நான்  சிந்திக்க காரணம்  இருந்து

தேடியது   நிழலில் சிறு ஓய்வு  கடந்தவர் 

வாய்களில்விழுந்தால் வந்ததே தெரியா வெறுப்பு!!!

Thursday, 8 July 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 புதைந்தது புதைந்ததே.

 தொலைந்ததுவும்

தொலைந்ததே  

கண்ணில் நீ 

இருப்பதுவும் நியமே  

இல்லையென! ஏங்குவதும் 

உண்மையே  

கண்கள்!  கரைப்பதுவும்  

உன்காயமே  

உன்னால் இதயம் 

துடிபதுவும்  துயரமே

கடந்திடும்விம்பத்தால் 

தேற்பதுவும்   நானே

என்னில் நின்று 

உன்னை பிரிந்தவன் 

செய்த மாயமே

 எந்தன் கேள்விக்கும்    

விடைகிடைக்காத  வலியே !!

வழிந்தோடும்  நீருக்கும் 

கிடைக்காத  கரமே !!!

குட்டிக்குட்டிச் சாரல்


 என்னை உணர்ந்திட முடியா  உணர்வு

கற்று தந்தது என்னை யாரும் அறியா

அறியாமையென 

 அதை  நான் அறிந்த

அறிவின் விம்பத்திடம்கொடுத்திடாதே 

பற்றியதால் என்னை நானாய்

காண்கின்றேன் என்றும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 

உன் 

நினைவேடு பயணம் 

நீ  

தொலைந்தால் அல்ல

உன்னையன்றி 

யாரும் எனக்கில்லையென்பதால்

சண்டைக்கோழியாய் இருந்தவள் 

இப்போது  தனாய் 

மொளனத்தையே

அதிகம்  விரும்புகின்றாள்  

அவள் 

இதயத்துடிப்பை நிறுத்தியே  

வைத்த இதயத்துடிப்பை 

இசையாய் சுவசிப்பதால் 


Wednesday, 7 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 அயலவன் உண்டிடும் பழத்தை

மரத்தோடு வெட்டி 

மண்ணில் போட்டவர் வெறுப்பு!!



யாரோயொருவன் 

மண்புகுந்தே தனதென 

கொண்டு சொல்வதை 

கைகட்டி வேடிக்கை  பார்க்கின்றான் 

இருக்கும் மண்ணும் சொந்தமற்றபின்

இன்னும் ஏமாற  வழியமைப்போம் 

நம்மினத்தின்  விடுதலைக்காய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 கண்மணி  கண்களை  கட்டி ஒவியத்தை 

ரசித்திடசொல்லும்  நேசத்தால்தேய்வதை  விட  

இருள்நிறைந்த வாழ்வேடு கண்மணி

வழித்துணையின்றி தனியாய்நடக்கலானால்!!! 

பொய்யேடு பெருந்தாத கண்மணி இதயம்

      மெய்யொடு   இறந்தது!!!


Tuesday, 6 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 கார்மேகநிறத்தழகி  கார்காலத்தென்றல் பூப்போல

நடையழகி மூங்கில் தொட்டு சிதறிய மழைத்துளி

முகத்தழகி

  வார்தை ஒப்பனையின்ரோஜா மனதழகி   

மல்லிகை பூ வாசத்தின்குழந்தைத்தன

சொல்லழகி மாமன் கண்ணிற்குள் நாணத்தில்

முகம் மலர்ந்தால்  இதயத்தின் வண்ணத்தின் அழகாய்

குட்டிக்குட்டிச் சாரல்

காதில்  ஓலிக்கும்  கடிகாரசத்தில்

காலைபொழுவிடிய காலை மாலை

போனதை யார் உரைத்தார் காக்கையே

நீயில்லா தேசமென்றில்  நானுவாழ வாழ

வந்த  தேசம் தேடி ஏனோ நீயும் வந்து 

அதிகாலைக்கு ஒரு அலாரம் அடிக்கின்றாய்

மீண்டும்  வாழ்ந்த நாட்கள் மகிழ்வாய் தோன்ற

தனிமை தேனீருக்கு குரலின் துணை நீயானாய்

மலர்ந்து பார்க்கின்றேன் நீயாரென!!!!


Sunday, 4 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மனிதன் காலங்கள் 

கடந்ததும்மாறகாயமென்ற



 காலத்தின் காயத்தை

தமிழன் அறிவு பசிக்கு

 விருந்திட்டு தோற்றிட்டான்


குட்டிக்குட்டிச் சாரல்......,

 நான்வேண்டாமென கடந்த பாதையில்

என்னை யாரோ வேண்டுமென்று கரைத்த

வண்ணங்கள் தான்  என் முகவரிபிழைகள்!!!

என் சந்தோஷங்கள் தொலைந்தால் சந்தோஷமாக

கடந்தேன்   காலமே பதிலென!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 சொன்னாலும் கேட்கா சொல்லுக்கு

சொல்லி பயனென்ன சொல்லமொளனங்களே

புன்னகையின்றது   இன காயங்கள் வேண்டாமென

குட்டிக்குட்டிச் சாரல்......,

 எப்படி த்தவிர்த்தாலும் தவிர்க்க முடியமால்

தொடர்வதே பெண்மையின் போராட்டம்

கதையில்  கண்ணீரோடு துடிப்பதை  கண்ணீரோடு

பார்த்து  மற்றவரை கண்ணீர்வர சித்திரவதை

செய்தே ரசிக்கின்றது நல்ல இதயங்கள்!!!மாற்றங்களே

நீ   மாறதே!!

Friday, 2 July 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஆண்மை !! 

உயிரோடு உள்ள பெண்மையின்

உணர்வை கொலை செய்து 

இன்னெரு  பெண்மையை 
நேசித்தே கைபிடித்து   

ஓரு  பெண்மையை  ஏமாற்றி 

இன்னெருபெண்மையோடு வாழும்

இரட்டை வாழ்க்கையை 

 ஏற்கும் வரலாறு இன்னும் 

உயிரோடு  இருக்க 

 வாழ்கையில் ஓரு

விதவையின் மறுமணதிற்கு

  நாள் கணக்கு கேட்க்கின்றதே 

அன்பாய் விசித்திரமாகவுள்ளது. 

ஆண்மையே !!

உன்னால்   ஓரு 

பெண்மையின்தனிமையை 

கலங்மின்றி பாதுகாத்திட முடிந்தால்

மறுமணம் பெண்மைக்கும்

 தோன்றாதே ஆண்மையே 

இல்லறம் நரகமென சொல்லும் 

ஆண்மையின்பொய்களை விட 

பெண்மைகே  இழப்பக்களால்

 ஏற்படும் துயரங்கள் அதிகம்

இன்றுவரை 

ஓரு பெண்மை விபச்சாரியாய்

 மாற்றிட

தயக்கமின்றி துணியும் ஆண்மை 

ஒரு பெண்ணை

வாழ வைக்கதுணிவதில்லை 

 இருளேடு வெளிச்சத்தையும் 

நேசித்தவனே மனதேடு 

உண்மையயாய் சுமந்தே  

வாழ்கின்றாள் 


குட்டிக்குட்டிச் சாரல்......,

 உன்னை புரிந்தவர்களே இல்லையென

புலம்பதே மனமே இவ் உலகில் தன்னையே

புரியதவர்களே அதிகம்

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மனதின் இருக்கையில் பல வலிகள்

சிம்மாசனம் இட்டதால் பல சந்தோஷங்களை

காணவில்லை  எனக்குள்  

தந்தவர்கள் சந்தோஷமாய் வாழ்கையில்

பெற்றவள் தொலைத்ததேன்  வாழ்க்கையை

மற்றவர்சந்தோஷம் இதுவென இவள் 


புரிந்து கொண்டதாலே!!

மொனளமாய்  நடக்கின்றால்  தனியாய்!!!