அத்திப்பூ சிகப்பழகில்
ஆதவன் முகில்குளிக்கபவளமல்லி வாசத்தில்
மாமன் தோப்புக்குள் என்
மனசு தான் குளிக்க
வெட்டிக்கொண்டு ஓடுது
ஆத்துநீருக்குள் கயல்விழி
கட்டிப்போட முடியாமல் !!
எட்டுத்தொட்டு எடுத்து
பதுங்கி நிக்கின்றது கால்கள்
மாமன் அழகில் !
கொட்டி கிடக்கின்றது வேர்வை
எடுத்து விதைக்கும் விதைநெல் போல் !!
.jpg)
No comments:
Post a Comment