நிம்மதி கிடைத்த
காலம் தொலைந்து
பெருமை சொல்லும்
ஆடம்பரம் !
கோயில் கொண்டாட்டமானது
வெளிநாட்டு உறவுகளால்
அதனால் தானோ
விடியவிடிய
வண்ணங்களாய் பேசுகின்றது
ஊருக்கு ஊர்!
இங்கே! சொல்லிப்புலம்பியே
உறவும் அச்சப்பட்டு
கொட்டுகின்றது பணத்தை
இறைவா!! ஏழை மகள்
விருத்துக்கு கூட நுழைந்திடமுடியாமல்
திரும்பி நடக்கின்றாள்
உன் வாசலில் நின்று !!!
.jpg)
No comments:
Post a Comment