யாருடனும் பேச பிடிக்கா
நிமிடத்தில் கூட
அவனோடு சண்டையிடுகின்றேன்
ஜென்மங்களில் !!நம்பிக்கை
இல்லையென்றாலும்
எதோ ஒன்று இருவரும்
பிரியாமல் காக்கின்றது !!
என் எதிரே! அவன் உலகம்
அவனைப்போல் ! சந்தோஷமாய்
இருப்பதால் தானோ
அவனுக்கு ஒரு
வானவில் தோன்றும்
நிமிடச்சந்தோஷம் நானானேன் !!
கறுப்பாய் போகும் மேகத்தை
தூரத்தே துரத்தி விடும்
தென்றல்காற்றால்
பூமி விழா மழைத்துளிபோல்
எனக்கும் அவனுக்கும்
எழுதி போட்டு அஞ்சல்
செய்யா முகவரியில்
வான்மழைத்துறலின் தேடலாய்
அவனுக்காய் நான் மண்ணில் !!!
.jpg)
No comments:
Post a Comment