Monday 25 July 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 பெண்மையே நம்மை

தப்பாக  நினைத்து

நடிப்பரிடத்தில்

கல்லாக மாறிவிடு

தன் 

சந்தோஷத்திற்காக 

எம் கைபிடித்து கைவிடுபவரிடத்தில்

நீ   கல்லாக மாறிவிடு

கூடவே வாழ்ந்தும்

கொஞ்சம் கூட நம்மை  

நேசிக்காதவர் முன் நீ

கல்லாய் மாறிவிடு

நமக்கு நல்லதை செய்வதாய்

தமக்கான நல்லதை தேடுபவர் முன்

நீ   கல்லாகமாறிவிடு  நம்

உண்ர்வை சிந்தி தன் உணர்வை

வாழவைக்கும்  அறிவிலிகள்

முன் நீ  கல்லாய் மாறிவிடு

 மாற்றத்தை தேடும் மாற்றத்தின் முன்

மட்டும் நீ  உளியாய் மாறிவிடு

No comments: