Friday, 22 April 2022

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 என்  உயிரில்


உறைந்த உயிர்

உயிர் வாழும் வரை 

என்னை  மட்டுமே 

நினைவேடும் கனவேடும் சுமந்தே

உயிரைவிட்ட உயிர் 

விடைகொடுத்திட முடியாமல் 

 என் ஏக்கங்களில்

வாழும்     விதியின்

முதல் பரிசு!  என்  அண்ணா  

யாரும்  தந்திட முடியா 

அன்பு  பரிசும்  அவன் !

எனக்கான உயிரில் உயிராகி

உயிரேடு உயிரைக் கட்டியே

உயிருக்குள் கலந்தே  உடனிருந்தே

எனக்கான ஆசைகளை 

தனக்கான ஆசையாய் சுமந்தே  

எனக்காக வாழந்த உயிர்! என்  அப்பா !

விடைகொடுத்திட முடியா 

கண்ணீர் துளியாய் விழும் விதியின்

இராண்டாவது பரிசு!!

என்னுள் உயிர்பெற்று 

எனக்கே தாயாகி 

என்னை   தன்னுள் சுமந்த

 உயிரின்  உயிர்பூ

அழகின்  ரசனையாய்

என்  கிறுக்கல் பேசும்  அழகான

மொழியின் காதலாய்

இசைக்குள்  வாழும்  ஸ்ரங்களாய் 

உயிரைப்பிரித்தாலும்

பிரித்திடமுடியா காலமாய் 

உயிரில் மறைந்த

பிரிவாய் எனக்குள்

வாழும் என் விம்பம்  என்  மகள் !

நெஞ்சத்தில்உ றங்கியே  

என்னை உறங்கிட வைத்த

விதியின் மூன்றாம்பரிசு !!

 காலத்திடம் தேற்ற

 கடிகாரமாய்

என்னிடம் தேற்று 

என்னை தேற்கடித்தே

விதியிடம் அடகுவைத்தே  

விதியிடம்தொலைத்த  உயிர் என் 

மாமன் ! விதியின்  நான்காவது பரிசு 

 கடசிவரை பேசாமலே 

 கைபிடித்து கண்ணீர்துளியால்

விடைபெற்று  

வாசலில் காக்க வைத்தே

சொல்லாமல் சென்ற 

விதியின் விதி !!

கடந்திடா கருணையற்ற  

காயங்கள்

போலியாய்  என்னை  வரைந்தே

தேற்கடித்தத விதியாயிடம்

நான் கேளாமலே கிடைத்த  பரிசுகள்!

என்வாழ்வில்  யாரும்  நிரந்தரமில்ல 

நியாங்கள் !!!!





No comments: