Sunday, 10 April 2022

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,



 இழப்பின்வலியை பிறப்பின்

சந்தோஷத்தில்

 கலந்தாய்

கண்ணீரின் சந்தோஷத்தை 

கருணை வடிவத்தில்  

தேடவைத்தாய்

கண்விழித்து கேட்பதை 

கண்ணெடுத்தும்  பாராமல் 

கற்சிலையாய்  நிற்கின்றாய்

ஓய்ந்தே போனது மனசு 


இருந்தும் தேய்ந்த நிலவாய்

நானும் கேட்கின்றேன்

 உன்னிடம் ஒன்றை 

நீயே திரும்ப திரும்ப 

திரும்பமலேயே 

என்னைப் பார்க்கின்றாய்

அன்பின் வடிவமானவளே 

கொஞ்சம் என்னையும் 

பார்கலாமே  கண்ணிறங்கி

கனவில் கதை கூறும் 

கற்பனைகள் புரியா 

கற்பனையான என்னை

உந்தன் கனவில் 

காட்டிடா நியத்தில் 

திரும்பி பார்

 இந்த நிழலின்

நியமும் புன்னகைக்க!!!!!

No comments: