Sunday, 19 July 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உயிரோ நீதந்த 

காயங்கள் சித்தாமல்

தனிமையில் வசிப்பவர்களுக்கான டாப் 10 ...

சிதறாமல் என் நினைவலைக்குள்

மோதி மோதி

 என்னைத் தண்டித்து   

 கொண்டேயுள்ளது !

என் பாவங்கள்  புரியாமலேயே 

 நான் பாவிப் பெண்ணானேன்  !!

என் மொழிகள்

ஊமையானாலும் பாவத்தால்

தண்டிக்கப்படுக்கொண்டேயுள்ளோன்!!

திசைக்காற்றில்  கால்வைத்து 

திசையற்ற பயனத்தில்  நடந்தேன்

திசைகள் அனைத்தம் 

தண்டிக்கின்றது தனியாய்!!

 பிழையென்ன  செய்தேன்

பிறப்பைப் தவிர

  யார்யாரோ கல்லெறித்து 

ரசிக்கின்றனர்

வேண்டாம் நானேயென  

என்னை அழித்து 

உன் சந்தோசத்தை 

என் சந்தோசமாய் 

தந்தொடுத்து வாழயெழுந்தேன்

தத்தெடுத்தசந்தோசம் நீயென

அறிந்திடச்செய்திடாமலே

அதையும் பறித்தேன் போனாய்!! 

பைத்தியமானோன் 

பறிதபடக்கூட யாறுமற்று!!

மாறிடாத இறையே யென்றேன்

மாற்றமாய் காயங்களே தேடியனுபினான்

பரிசாய்!!!

No comments: