Friday, 31 July 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கற்பனைக் கதைகளும்  
 கற்பனைக்கு
எட்டா வாழ்கையும் 
 கற்பனையெனத்தெரியா 
 நிழல்களும் 
நிழலெனத்தெரியா  நியங்களும் 
நியமாய்  சொல்லியே  
நகரும் தொடர்களும்


கண்னேடு ஓடும் திரைகளும் 
 கண்முன்னே விம்பங்களாக்கியே 
சந்தோஷம்  பேசுவதால் 
தன்சந்தோசதிற்காய்
எதையும் செய்திடலாம் 
என்பதே
இன்றைய  காலத்தின் 
 தேடல் 
இதையே  பார்த்தே வளரும் 
உலகின் கற்பனையற்ற 
வழக்கையும்  அப்படியே கற்பனையாய் 
மாறுகின்றது !!!

No comments: