Friday, 26 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நிறந்தேடு நிறம் சேர்ந்து
பலவர்ணப் பூவாகிய
என் தோட்டமே!!உன்
இதழ் நடுவோ வண்ணங்களின்
எண்ணங்களாய் 
பூப்போல்  வண்ணத்துபூச்சியாய்
வண்ண மகள் நான் ஆட!

உன் தேன் பருக
உன்னைத் தேடும் வண்டு
என்னை தேடி வந்தால்
வந்த பயந்தால்
என் இதழ் காக்க உன்னை
பறிந்து என் முகம் மறைக்க
கையில் எடுத்த 
என்னை மன்னித்து விடுவாயா!!
உன்  உயிரில்  என்  மென்மை 
தனிக்ககோலம்   கொண்டது 
உண்மையே!! 

No comments: