Friday, 26 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


உனக்குள் கரைந்து
உன்னோடு நான் வந்து
ஆண்டுகள் பல போன பின்பு
உன்னைத் தொலைத்து
என்னைத் தேடுகின்றாயே
என் அன்பே !!

உனக்குள் இருந்து உன்னால்
துடிக்கும் என் இதயதை
எங்கே தொலைத்தாய் சொல்!!

எப்போதும் பிரியா என் இதயம்
மெளனமாய் உனக்குள் வாழ்ந்து
உன் சோக சுமைகளால் அழும்
போது இதில் நீ வேறு நான் வேறு
ஆனது எப்போது!

பறக்க மறந்து
தனிந்து நிற்கும் எனக்காய்
கோடி சுகங்களை கொட்டி
தர தேடாதே! ஒரு புன்னகை
சிந்து முடிந்தால்........

No comments: