Friday, 12 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கனிந்த  காதலை  
 பிரிந்த கனவு
தொலைத்த முகவரியில்
மிஞ்சிய  நினைவாய்
உன்னிடத்தே என் விழிகளையும்
என்னிடத்தே உன் இதயத்தையும்
சொந்தமாய் விட்டது !!

கட்டிய தாஐ்மகால்
  விட்ட கல்லில்
செதுக்கிய ஒவியக் காதலை
உடைத்தெறிந்த உணர்வு 
சில்லுச் சில்லாய் 
போன கற்பனைக்குள்
மிச்சமாய் விட்டுசென்ற 
 கனவுகற்களை  கல்லறைக்கு  
கொடுத்திட சம்மதம்
என்றுகவலையோடு நிற்கின்றது……………………

No comments: