Friday, 26 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அறிவியலில் தடம்பதித்தே
ஆடி 
Bildergebnis für தமிழ்பெருமையின் சிகரத்தில்
ஆடி
 தரையில் நின்றே வானில்
ஆடி 
விண்ணில் பறந்தே வியப்பில்
ஆடி
 உயிருக்குள் உயிர் கலந்தே
ஆடி
திசைகளின்  வியப்பில் 
ஆடி

விழுந்த உயிரின் மேலே   நின்றே 
ஆடி
தனித்தே நின்ற
தனிபாதை மீதே
ஆடி 
அழித்தவர்
பயக்க பக்கம் சென்றே
ஆடி
தமிழே பேசும்
 தனிச் சிறப்பின்
அழிவின் விளிம்போடு
ஆடி 
உதிரம் உறைய களம் தனில்
ஆடி
எழுந்ததமிழும் விழுந்தத நிமிடம்
ஆடி
நினைவுகள்  மறைய மரணத்தை
லென்றிட
 ஆடி
உணர்வுகள்  தழும்பும்
வலியில்
உறவினை எரித்தே
ஆடி
இழந்ததை மறந்த வாழ்விற்க்குள்
இருப்பதை தொலைத்தே
ஆடி
நினைவில் புதைத்த  புதைகுழிக்குள்
புதைந்தே மறந்தே 
போகுது  மெல்ல மெல்ல ஆடி!!!


No comments: