Tuesday, 17 June 2008

இறைவா எனக்காய் தாரும்...

எனக்காய் ஒரு பூமி
வேண்டும்

அங்கே மனிதனில்லா
தனிமை வேண்டும்

இசைகள் மட்டும்
இசைத்திட வேண்டும்

காதல் மொழி கிளிகள்
பேசிக் கேட்டிட வேண்டும்

அழகு மயில் மான்கள்
இணைந்தாட வேண்டும்

கற்பனையில்லா கவிதைகள்
என்னோடு தோன்றிட வேண்டும்

அருவிக்கரை ஓரத்தில்
சில நிமிடத் தனிமை
வேண்டும்
அங்கே
பூக்களோடு நான் மட்டும்
வாழ்ந்திட வேண்டும்

No comments: