Monday 23 June 2008

விழிகளுக்குள் சிக்கிக் கொண்ட சாரல்.....2


உன்னில் என்னை
அடக்கி
என்னில் உன்னை
அடக்கி
காதல் நம்மை
அடக்கியதால்!
தொலைந்திட மகிழ்ச்சிக்குள்
இன்பத்தை அடக்கி
வாழ்விற்குள் நாம் அடக்கி
எங்கும் இல்லா சொர்கத்தை
அமைந்திடுவோமா?
************************

வறுமைக் கோலம்
கண்டும்
தன் குடும்ப
வாழ்வை
தன் வாழ்வாய்
எண்ணியதால்
தன் வறுமைத்
தவிப்பிலும்
மாறாப் பாசம்
கொண்டு
தன் சுமை சுமக்கின்றான்
வலி மறந்து
உலகில் உயர்தவுள்ளம்
இவனிடம் உள்ளதன்றோ...
*****************************

அழகாய் ஒரு வீடு
அதில் இவள் வாழ்ந்திட
மட்டும் ஒரு கூடு

போகுமிடமெல்லாம்
பூக்களின் வாசம்
நடுவே இவளக்காய்
ஊஞ்சல் ஒன்று
துயில்கொள்ளும் பஞ்சனையாய்

இவளை தாலாட்டும்
இசைகள் எல்லாம்
தென்றலில் மோதி
இசைத்திட- அதை கேட்டு
ஆடிடும் பூக்களாய் -அந்த
வீட்டில் இவள்
ரம்மிய மாலைப்பொழுதில்
இவள் கண்மூடி துயில் கொள்ளும்
அந்த அழகை கண்ட
வண்டுகள் பூவோயென
தேனெடுக்க தேடி வந்து
தேவதையாய் இவளைக் கண்டு
முத்தமிட்டு சென்றிடும்
இவள் துயில்களையாது....
**************************

என் இதயம் அடிக்கடி
இறந்து துடிக்க என்
இதயத்தை வெறுமையாக்கி
உன்னை என் உயிரில்
கலந்து கொண்டேன் !
என்னோடு உன்னையும்
எடுத்து செல்ல!

என் இதயமே என்னைத் திட்டாதே
உன் மனதிற்குள்
சுயநலவாதியடி நீ என்று
உனக்கு மட்டுதான் நான்
எப்போதும் சுயநலவாதியே!!

பின்பு என் இறப்பு வரை நீ
திட்டிக் கொண்டே இருப்பாய்
என் இதயத்திற்குள் உன் உயிரென
அறியாதே!

அல்லவா!! அதனால் உன்னிடம்
இப்போதே சொல்லி விட்டேன்

இப்போது ஏன் சொன்னாய்
எனக் கேட்காதே!!
இப்போது நீ என்னோடு
கோவமாய் இருக்கின்றாய்..
நமக்குள்இன்னெரு சண்டை
வேண்டாமே அதனால் தான்....
இப்போதே சொல்லி விட்டேன்......
நாளை சொல்லாதே சென்று விட்டாள்
என திட்டகூடாது என்பதால்!!!
******************
பல வர்ணப் பூக்கள்
அழகழகாய் இதழ்விரியும்
வர்ணத் தோட்டத்தின் நடுவே
பூக்களின் பூமகள் பூவோடு பூவாய்

சிந்தும் புன்னகையும்
சிதறும் குறும்பும்
தேடிய செல்வமும்
தன் வர்ணங்களாக்கி
தன்னை மறந்து விளையாட
வந்தர் போனவர் நின்றவர்
இல்லாதவரும் மயங்கி நின்று
இவளைப் பார்க்க

சின்னம் சிறுமியாய்
தன்னைத் தான் மறந்து
தென்றல் காற்றாய்
நதியோடு விளையாடி
மழையோடு உறவாடி
மனிதனை மறந்து
நிலாஒளியின் மின்னியாய்
உலகை வலம் வந்தால்
கவலை மறந்து கவிதை பாடி
தனிப் பூவாய் நந்தவனத்திற்குளோ
இருள் அகற்றும் ஒளியாய்
****************
நித்தம் நித்தம் உன்னை
சுற்றி சுற்றி ரசித்தேன்!
தென்றல் காற்றில் கலந்திடா
பூவாய்! மழை நீர்
நனைத்திடா மண்ணாய்!
நதியோடி அழித்திடா பாதையாய்!!
உன்னை அறியா அறிவிநீர்
தூய்மை கொண்டு!
சுத்தமாய் என்னை அதில்
தொலைத்து! எதிர் பார்ப்பிலா
உண்மைப் பாசம் கொண்டு

இதில் கள்ளமில்லை
கபடமில்லை பொய்யுமில்லை
புகழுமில்லை ஆனால்
உண்மை அன்பு கொண்ட
மனசு எப்போதும் உணக்காய்
உண்டு

********************
வைகரையில் எழுந்து
இயற்கையோடு நடந்து
இலக்கியதை ரசித்து!
கவியென அவள் நிற்க!

பொய்கை மலரென்று வாடியதாய்
நினைத்து
கருமேகம் மழையாய் பொழிய!

தென்றல் காற்று அவள்
உடல் நீரைத் துடைக்க!

குளிர் நீர் நனைந்த புறாவைப்
போல் அவள் உடல் நடுங்க

அதைப்பார்த்து வானவில்
சிரிக்க..சூரியன் கம்பளியைப் போல்
தழுவினான் அவள் உடலை...
*********************
நீண்ட நெடும் பாதையில்
நீயும் நானும் கைகோர்க்கையில்
நம்மைக்கண்டுநந்தவன பூக்கள்
பொறுமைகொள்ள
துன்பம் வென்று இன்பம் கொண்டு
சொல்லச் சொல்ல கதைபேசி
நான் சிரித்து  ரசிக்கையில்!
எம்மைப் பார்த்து பொறாமை கொண்ட
மலருண்டு வண்டுண்டு
பெண்ணுடு பொன்னுடு
நிலவுண்டு நினைவோடு
ஆனால் நீ எங்கே?
நான் மட்டும் தனியா
இப்போ இங்கே!!!
**********************
ஊசியிலைக் காட்டுவீட்டுக்குள்!
அதிகாலை சூரியன்
உதித்திட முதல்!
என்னவன் வந்தானென்று
என் கனவிற்குள்
வனதேவதை வந்து சொல்ல!

கண்ணுக்குள் மன்னன் நினைவோடு
பனிக்காற்றுப் புள்ளிமானாய்
துள்ளியோடி வந்தேன்
என்னவனைக் காண!

வந்த குதிரை காத்து நிற்க
என் மனமே ஏங்கித் தேட
மாயவன் எங்கே சென்றான்
என்னை தவிக்க விட்டு!

என் தவளையே
பார்தாயா என்னவனை!
தவிக்கும் என் மனசு தெரிந்தும்!
என்னைத்தவிக்க விட்டு
வேடிக்கை பார்ப்பதுவும்  ஞாயம் தானா!

எனக்காக அவனிடம்
நீயே கூறிவிடு!

 இதழ் விரிந்த பனிப்பூவாய்!
ஓடி வந்தவள்
சூரியன் தீண்டிய மலராய்
வாடிச் செல்லுகின்றாள்
இன்று...........என்று

*****************
குட்டிக் கூட்டுக்குள்
ரோஜா மலருக்குள்
இன்பமாய் வாழும்
தேன் சிட்டுக் குருவியே!
உன்னோடு நானும்...
தேன் குடித்து துயில்
கொண்டு!விலி வந்த
திசை மறந்து! ஓர் நாள்
ஆனந்தமாய் வாழ்ந்திட
வரலாமா?
******************
கருவில் சேராக்கவிதையாய்
சோகம் தந்ததனிமையாய்
அருகில் நீயில்லாத்துன்பமாய் !
சிறைக்குள்வாழும் மகிழ்ச்சியாய்
 வாழ்வே !ஆன பின்
எப்படி அன்பே ! மகிழ்ச்சி
பூக்களாய் பூக்கும்....


************
உடைந்தது என் மனசு
பதிந்த உன் உருவக் கண்ணாடி
போட்ட வேடம் கண்டு!

சிரிக்குது விழியிரண்டும்
போதைப்பெண் நீயென்று
என்னை கேலி செய்த
உன்னை அறிந்த போது
வலிக்கு இதயம்
நீ செய்த மாயம் கண்டு!

காயம் காக்க வந்த காயம்
காயம் செய்து மாயம் செய்து
காயத்தின் மேல் காயம்
செய்ததது ஏனோ?
****************
நித்தம் நித்தம் என்
 கனவில் தோன்றி
செல்லச் செல்லகதைகள் பேசி
என்னைச்செல்லமாய் சிறையிட்ட
என் தேவதையே!
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
மாறி மாறிதோன்றியதால்
நான் யாரே ஆனோன்
மணணில் உன்னால்!
ஆனால் !!கண்மணியே
என் கண்மணிக்குள்
கண் மூடிக் கொண்டு
என்னைக் கண் மூட விடாது!
எனக்குள் உறங்குகின்றாய் நீ!
இருவரும் வான் மேகத்தில்
கண்ணுறங்குவது எப்போது?
***************
வலி மறந்து
கனவை நேசித்து
நம்மை நாம்
ரசித்திட்ட நாட்கள்
இப்போ எங்கோ
தொலைந்தாய் ஓர் உணர்வு.....

உனைப் பிரியா நானும்
எனைப் பிரியா நீயும்
இனைந்து ரசித்து
மோதி விளையாடி
கோவமாய் நடித்த நாட்கள்
இப்போ எங்கே தொலைந்தாய்
ஓர் உணர்வு!
பல நிமிடம் நம்மை நாம்
மறந்தாலும்!
ஓர் நிமிடத்தில்
இரு உணர்வு ஒன்றாகும்!
அந்த இனிய நாட்கள்
இப்போ எங்கோ
தொலைந்ததாய் ஓர் உணர்வு
வந்து வந்து போகுதடா எனக்குள்.....
*************
வண்ணக்கிளியே என்
செல்லக் கிளியே
என்னைத் தேடி
வந்ததென்ன செல்லு கிளியே!



தன்னம் தனிமையில்
ஒருத்தி; தலைவன்
வருவிற்காய் காத்திருக்கும்
சங்கதி அறிந்து தனிமை
போக்க நீ வந்தாயா?

இல்லை
இவள் எழுத்தில் வடித்திடா
கனவை நேரில் கண்டறிந்து
சொல்லிட வந்தாயா?

இல்லை
இவள் இதயத்து ஆசைகளை
அருகிருந்து ரசித்து மகிழ்ந்திட
வந்தாயா?
இவளிடம் நீ சொல்வாயா
கிளியே உன் செவ்விதழ்
திறந்து!உன் வரவை!
*******************
சுற்றி சுற்றி சோகம்
வட்டமிட்டு என்னைத்
தேடித் தேடி வதைத்திட

கண்ணீர் சிந்திச் சிந்தி
விழியோ சிவந்து நேக
காலமறியா கண்ணீர் கதையும்
தொடர கதையாகிட

தன்னம் தனிமையில்
கானல் நீர் தடாகத்துள்
கரைகின்றேன் பெண்ணாய்
நானும்................

****************
உன்னைத் தேடி
உனக்குள்ளிருக்கும்
மனதைத் தேடி
மனசுக்குள்ளிருக்கும்
நினைவைத்திறந்து பாரேன்டா....... அவள்
மெளனமாய் இருப்பது தெரியும்

அவளுக்காய் ஒருதரம்
 உன்மனதைத் திறந்து
சொல்லேன்டா உன்காதலி அவளென்று

****************

கார் மேகத்தின் நீர் துளியில்
ஓர் துளி சிப்பிக்குள் வீழ்ந்து
கருவாகி உயிர்பெற்று
பூத்திட்டாள் சிப்பி வீட்டிற்க்குள்
முத்துப் பெண்.............

கடவுளுக்கே வரமாய்
சுற்றியகொடிப்பூவின்
வாசத்தோடு
வெண்மேக மெத்தை விரிப்பில்
கனவுத் தேவதையாய்
தனை மறந்து உறங்கினாள்
மாய உலகத்துமுத்துப் பெண்.........

அவள் உறக்கம் கலைத்து
நித்தம் நித்தம ஓர்உறவு
கனவிற்குள் தோன்றி
மெல்ல மெல்ல கதை பேசி
செல்லமாய் எழுப்பியது

யன்னல் திறந்து தென்றல்
 சில்லென்று வீச
அந்த வழி வந்த சூரியன்
மனதோடு பேச
வந்தவர் அறியாமல்
உறவும் புரியாமல்
மெல்ல விழித்தாள் முத்துப்பெண்

அவள் விழிபார்த்த பார்வையில்
 பனிபோல் ஒருவன் பறந்து வர
பார்த்தவள் இதயம் படபடக்க
பயந்தவள் மீண்டும் போனாள்
மாய உலகிற்கே..
***************
அழகு மயில் போல்
தென்றல் பெண்ணெருத்தி
வண்ண வண்ண கனவோடு
சின்ன சின்ன ஆசை சுமந்து
துள்ளியோடும் புள்ளிமானைப் போல்
தெமாங்கு பாட்டுப்பாடி
நந்தவன பக்கம் வந்தால் துள்ளிக்கொண்டு
சட்டென ஒரு குரல்
புல்லாங் குழல் இசையாய்
கட்டி இழுக்க
தட்டு தடுமாறி திரும்பினால்
அழகு மயில்

திரும்பியவள் பார்வை
திரும்பாது நிற்க
வசிகர புண்ணகை
வசிகரம் செய்ய
அசையாது நின்றாள் அவனால்

எடுத்த பாதம் தரை படாமல்
தவித்த மனசு சொல்லாது
செந்தாமரைப் பூவைப் போல்
தளர்ந்து நின்றால் மெளனமாய்
****************
உன் நினைவு என்னை
சொந்தமென்று அழைக்க
உன்னவளாய் உன்னைத் தேடி
நாளும்!உனக்காய் தேய்கின்றேன்


அந்திசாயும் நேரத்தில்
ஆற்றங்கரையோரத்தில்
தன்னத் தனிமையில்
தூது சொல்ல தேழியின்றி
துணை வந்த நீயுமின்றி
உறங்கிட விழிமறுக்க
உண்ணும் உணவு தனை மறக்க
நித்தம் நித்தம் தேய்கின்றேன்
உன்னால்..............

******************
என் உணர்வுகள்
சொல்லிய காதல்
எனக்கு மட்டும்
புரிந்த காதல்!

என் நினைவேடு பேசும்
காதல் நியத்தில் எனக்குள்
தோன்றிய காதல்



என்னை தூங்க வைத்து
ரசிக்கும் காதல்
என் விழி பேசும்
உண்மைக் காதல்

என் உள்ளத்தில் உயர்ந்த
காதல் !என்னைக் குழந்தையாக்கி
தாலாட்டிய காதல்

என் உயிரைத்தெட்ட
காதல் என் கல்லறைக்கும்
உரிய காதல்

********************
என் வெள்ளைப் புறாவே
உன் சிறகுகளை எனக்கு தந்து
இந்த பூமியை தான்டி ஓர்
அற்புத உலகிற்கு! என்னை
அழைந்து செல்வாயா?


அங்கே
தென்றல் காற்றில் இரத்தவாசம்
கலந்திடா பூவின் வாசம்
எங்கும் வீசிட வேண்டும்

உடல்களை எரிக்கும் தீ ,அழகாய்
இருளைப் போக்கும் தீபமாய்
எங்கும் எரிந்திட வேண்டும்


மனிதன் என்றும் சிரித்தே
வாழ வேண்டும் அங்கே
நானும் சேர வேண்டும்
என்னை அழைத்து செல்வாய்
தானே என் வெள்ளை புறாவே....
**********************
பூவென மலர்ந்து
பூப்போல் சிரிக்கும் இந்த
பூப்போன்ற இதயம்!!
என்றும் வாடா பாசம்
கொண்டு !பட்டம் பூச்சியாய்
மெல்ல விரிகின்றது!!
காயப் பட்டு கருகாமல்
ஏமாற்றம் தோல்வியால் வாடாமல்
கூடாது கூடின்றி பிரிந்தும்
சிரித்த பூவாய் வாழ்கின்றது
அவன் தந்த நினைவேடு..
*****************
என் இதயமே நீ எப்போது
காதல் வங்கி திறந்தாய்?
இல்ல.....உன்
உணர்வறியா மனிதன்
உன் பெயரால் காதல்
கணக்கை திறந்து மூடி
திட்டி அழித்து அம்பு விட்டு
சித்திரவதை செய்து
தன்னைத் தானே அழித்து
ரசித்து வெறுத்து  நிக்கின்றானே
அது தான் ஒர் சந்தேகம்
எனக்கு....
******************
உன்னைக் காணாது தேடி
உன்னைக் கண்டதும்
மலர்ந்து
உனக்குள் கரைந்து
நீயாக மாறியவளை
நீ யாரிடமும் தேடாதே
என் அன்பே..

தன் உருவம் அழிந்து
உன் மூச்சால் உயிர் பெற்று
உன் மனதிற்குள் எழுந்தவளை
நீ யாரிடமும் தேடாதே
என் அன்பே....

உன் சுவாசக் காற்றில் கலந்து
உன் இதயம் துடிப்பிற்குள் விழுந்து
உனக்குள் வாழும் அவளை
எனி நீ யாரிடமும் தேடாதே
என் அன்பே...

உன் கனவாகி நினைவாகி
உள்ளவளை உன் உயிர் உள்ளவரை
எனி யாரிடமும் தேடாதே
என் அன்பே..

இந்த மன்னில் உள்ளவரை
அவள் உயிர் போகும் வரை
எனி யும் அவளைத்தேடாதே என் அன்பே..

*********************************


தொல்லை தொல்லையாய்
தொல்லைதந்தாள் இந்த
சின்னப் பெண் எனக்கு

அவளையே திட்டித் திட்டி
வெறுத்தாலும்!அவள் முகம்
 காட்டிக் காட்டி சிரிக்கும்
என் விழியின் கனவவே தொல்லை

அவளை விட்டு விலகிப் போனாலும்
அவளை தேடித் தேடி அலையும்
என் நினைவுகளோ தொல்லை

அவளை வெட்டி வெறுத்து நின்றாலும்
என் உணர்ச்சிகள்
நித்தம் நித்தம் அவளைத் தேடும்
தேடலே தொல்லை

அவளால் காயப்பட்டு காயப்பட்டு
வாழ்ந்தாலும்
என் இதயம் முழுதும் அவள்
தந்த வலியே தொல்லை

தொல்லை தொல்லையாய்
தொல்லையானது இந்த
வாழ்கையும் அவளால்....

No comments: