Friday, 30 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யாரோ!  அவன்  

என்னைத்  திரும்பிப்பார்க்க 

வைக்கின்றான் 

மனசின்  ஊனத்தை 

கால்களின்  ஊனதால்  

வெல்கின்றான் 

 முதல் முறை 

என்  கண்ணாடி 

என்னை  காட்டிட 

மறுக்கின்றது!  அவனின் 

தன்நம்பிக்கையின்  

முன்!

என்  விம்பங்கள்

  சிதறிப்போனது!   

என்னைத்தொலைக்காமல் 

வாழ 

கற்றுக்கொள்கின்றேன் 

அவனால்  

எனக்குள்  இறந்த  என் 

உணர்வுகள் 

 என்னைத்தேடியெடுத்திட  

துடிக்கின்றது !

அவனால் !! 

திரும்ப கிடைக்குமா  என 

தெரியாவில்லை !1



 

No comments: