வறுமைக்கு பிறந்த
மகளானேன்!
வார்த்தைகள் பேசிடா
கவியானேன்!
ஊமையின் காதல்
பூவானேன்!
உயிர்விட்டு சென்ற
உடலானேன்!
உள்ளம் சிதைந்த
மெழுகானேன் !
இதயம் உடைந்த
துடிப்பானேன் !
கண்ணீர்பேசிடும்
கண்களானேன்!
வெள்ளிநிலா பார்த்தே
பசியை மறக்கும்
குழந்தையானேன்!
இழிவுபடுத்தி உயர்வு கொள்
மனிதனுக்கு பகையானேன்!
பாசமென்று பாசங்கு செய்து
ஏமாற்றி வாழ் மனிதனுக்கு
முட்டாளானேன்!
இருந்தும் எனக்குள்
ஒடும் வேகம் மட்டும்
மாறவில்லை என்றும் !
இழந்ததை விட்டு
அடுத்தது என்ன
என்றே கேட்கும்
நம்பிக்கைக்கு உயிரானேன் !!!
.jpg)
No comments:
Post a Comment