Friday, 31 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 விடியலில் விடிவுகள்

 விடியும்  என்றே 

விழிகள் விழிக்கின்றது

விழிகளின் கனவுபோல் 

சிலவிடியலும்  தவிக்கின்றது 

கனவைகள் சோரும் போது

சில மனங்களும் சோரும் 

மனங்களில் சோர்வு  கொண்டால்

பல விடியல்கள் உதயத்தை 

இழக்கம்

இழந்தை தேட பல விடியலில்

இதயமும் துடிக்கும்

துடிக்கும் இதயம்  இழந்ததை இரவுகளே

சுமக்கும் 

சுமக்கும் இரவிற்கு  தான் தெரியும்

விழிகளின்ஆசையும் கனவும்!!!!


Thursday, 30 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓன்றையடைத்து  

இன்னென்றை  நேசித்து 

இரட்டை வாழ்க்கை

தன்னை மறக்க!! 

தண்ணீயை நாடியேடுது

தன்னில் தவறியில்லையென

தன்னையே  தவறாய் புரிந்து !!

இன்னும் புரியா 

வாழ்க்கையை புரித்தே வாழ!!!

தன்னை தொலைத்து

கோப்பைக்குள் விழுந்து 

இருப்பதையும் இழப்பதே

வாழ்க்கையென்கின்றனர்!

இதையும்  புரியாமல் 

தடுமாறு  மனிதம் !!


 

குட்டிக்குட்டிச் சாரல்

 விமர்சணம் தாண்டியது

வாழ்க்கை நம்மை காயபடுத்த பலர்

வாழும் உலகில் தன்னை

புரிந்தவர்  கூட வாழ்பவரே  

மகிழ்ச்சியாய் வாழ்கின்றனர் 

விமர்சணத்திற்கு பயந்தவர்கள்

போலியாய் நடித்து பொய்யாய்

புன்னைகைத்து தன்னை நிறுபிக்க

போராடிகொண்டே  வாழ்கின்றனர்!!!!

Tuesday, 28 March 2023

குட்டிக்குட்டிச் சாரல்

என் கண்ணீர்துளியை 

முத்தமிட்டு உடைத்தது

கடல் அலை!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................


 ஏதோ!!

ஓரிடத்தில் பணம்

எம்மை உடைதெறிந்திடுவதால்

நாம் அதனிடம் அடிமையாகி 

விடுகின்றோம்!!!

ஏதோ ஓரிடத்தில் ஏழ்மை நம்மை

பின் தள்ளிவிடுவதால்

நாம் பணம்  கடவுள் என

கை கட்டி  சேவை 

செய்கின்றோம்!!!

அனைத்தையும் இழந்து பணத்தை

அடைகின்றோம்  பணத்தை இழக்கும்

போது தனியாக நிக்கின்றோம்!!

நிரந்தரம் இல்ல பூமியில்

 ஒரு நிரந்தரம் 

தேடியே  வாழ்க்கையேடு

சண்டை போடுகின்றோம்!!!!

 

Friday, 24 March 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லையென்பதில் தெடங்கிய

வாழ்க்கை  இல்லாமலே போனது

இருக்கு என்ற என் உயிரை மறந்து

குட்டிக்குட்டிச் சாரல்

 புரிந்திடாமல் 

உதாசினம் செய்து

 போனவர்களின்  

நடிப்பில்



தேற்றுவிடுகின்றது 

நம் உணர்வு!!

நம்மை புரியவைத்திட

 முடியாமல்!!


Wednesday, 22 March 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 கற்பனைக்குள 

ஓரு சிலைவடித்து

என் கனவால் உயிர்கொடுத்து

என் ஆசைகளை  கூறி

விளையாடுகின்றேன் நியமற்றதென

தெரிந்தும்!!!


Tuesday, 21 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அவள் விட்டு போன முகம்

இவள் வைத்துக்கொண்ட

கவிதை 

அவள் தந்து சென்ற இசை

இவள் உறக்க செய்யும் 

தாலாட்டு 

அவள் வரைந்து கொடுத்த

ஒவியம் 

இவள் கைகள் பிடித்து 

அழைத்து செல்லும்  

கற்பனை

அவள் பேசி கொண்ட வார்த்தைகள்

இவள் மொழியில் பூக்கும் 

காதல்




குட்டிக்குட்டிச் சாரல்

 ஓவ்வொரு துன்பத்திலும்

ஒரு விரக்த்தி

ஓவ்வொரு விரக்த்திலும்

ஒரு சலிப்பு 

ஓவ்வொரு சலிப்பிலும்

ஓரு ஏமாற்றம் 

ஓவ்வொரு ஏமாற்றத்திலும்

ஓரு வெறுப்பு 

ஒவ்வொரு வெறுப்பிலும்

உயிர் இழக்கின்றது  

நம்மிக்கையை!!!




Friday, 17 March 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை பார்த்து பைத்தியமென

திட்டியவனை பார்த்து 

புன்னகைத்தே திரும்பினேன் 

திரும்பிய என்னுள்

அவனை நினைத்து கவலையானேன்

நான் இசையேடு பேசி

கவிதையேடு விளையாடி

உரையாடுவதை 

இவன் பார்த்தால்

இவன் அல்ல பைத்திமாவான்

எல்லோரும் ஏதோ ஒன்றின் மீது

பைத்தியம் தான்!!’இதை புரியாமல்

மற்றவரை கூறுகின்றோம்!! 

Wednesday, 15 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஓற்றை சலிப்பில் தேனீருக்காய் 

ஓரு ஏக்கம்

வேலைக்களைப்பில் சமையலுக்காய் 

ஓரு ஏக்கம்

ஓய்வாய் அமர்கையில் கூடி

வாழும் வாழ்க்கைக்காய்

ஒரு ஏக்கம்

எல்லாம் இருந்தால் 

 இல்லாமல் ஓடும் நேரத்திற்க்காய்

 ஒரு ஏக்கம் !

ஏக்கம் ஏக்கமாய் 

அடைபட்டு கிடக்கும்   உறவு 

பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு 

வெளிநாட்டிலும்

ஏங்குது  தனித்தனியாய் ! 

குட்டிக்குட்டிச் சாரல்

 சின்ன சின்ன கனவு

சுமக்கையில் அழகாய்

இருந்தது வாழ்க்கை பள்ளி

பருவம் போல் 

குட்டிக்குட்டிச் சாரல்


முற்கள் மேல் பிறந்தே முற்களின்

காயமற்று அழகாய் பூப்பதாய்

வந்த  ஓற்றை சந்தோகத்தில் 

தென்றலும் மழையும்

அடித்துக்கொண்டதில்

காணமல் போது ரோஜா!!!

நம் கற்பனையும் இப்படியே!!!


 


Tuesday, 14 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நமக்கு பிடித்ததை அடைய

எந்தவழியை தேர்வு செய்தாலும்

தப்பில்லையென

 தப்பாய் அடியெடுத்து வைக்கின்றோம்

 இங்கே  

நம்மை மட்டும் சிந்திக்கும் 

நம் சுயநலமே

யாரே ஒருவர் பாதையை 

அடைத்து நீக்கின்றது

என் காட்டுவழி பாதையில்

மனிதமிருங்களை கடந்தேன் 

மனிதனை மட்டும் 

கடந்திட செய்தே நின்றேன் 

இங்கே மிருங்கள்

அன்பானது மனிதமிருகங்கள்

எதிரியானது!!!எதிரிகளை அன்பால்

வென்றிடவே  அமைதியானேன்

என் அமைதிக்குள்

அழகான ஒரு உருவம் 

உயிரானது!!! அந்த உயிர்  

பல கேலிகளால் 

தன்னை வரைந்தபோதும் 

 தன் பாதையை மாற்றவில்லை 

நம்பிக்கை வைக்காமலே

நம்பிக்கையை மட்டும்  நம்பி நடக்கின்றது

பொய்கள் தேற்கும் போது 

உண்மை வாழும் தானே,….,,


Monday, 13 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நம்மை பிடிக்காமல்

விட்டுசென்றவருக்காக்கூட

 நம் சந்தோஷம்  

நமக்குள்  துடிக்காமலேயே 

ஏன் கஸ்ரத்தை கொடுக்கின்றது !!

நாம் சந்தோஷமாய்

இருக்க கூடாதென  

நம்  நினைவே நம்மை   

ஏன்  வதைக்கின்றது 

இங்கே 

கஸ்ரப்படும் போது

வராத பாசத்தாலேயே  



நம்மை யாரேனும்

 நேசிப்பதாய்  சொல்லும் 

நிமிடம்  கோவமாகின்றதே ஏன்?

நம்மை வெறுப்பவர் மனதிலும்

நாம் நன்றாக வாழ்ந்திடக்கூடதென்ற

நல்ல எண்ணங்கள்  எப்ப்டி 

தோன்று தானாய் !!

தன் பிரிவு அவர் வாழ்வை

அழித்திடவேண்டும் 

என்ற நற்பாசமா!

இற்றைவரை !!புரியாத ஆண்பெண்

வாழ்க்கை ஓரு யுத்தகளமே!

இதில்!

 பெரிதென்றும்  சிறிதென்றும்

சண்டையிட்டு மண்டையுடைத்து

மண்ணில் சாம்பலாகியவரே அதிகம்!!!

நேசித்து பாருங்கள் குறைகள்

காதலாகும் 

மதித்து பாருங்கள்

 வாழ்க்கைவெளிச்சமாகும்  

ஓற்றுக்குள் ஓன்றை

ஓழித்தவன் செய்தது தவரல்ல 

வாழ்க்கை  !!!




Sunday, 12 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வருடங்கள்  ஓடின

 நம் பிரிவிற்குள் 

வாழ்கை எதை எதையே

 கற்பித்தது!

கற்பித்த வாழ்க்கைகுள் 

உன்னைபோல் ஒருத்தன் 

இல்லாமல்  தோற்று போன 

பெண்னானேன்!!

நம் பிரிவு தந்த 

இடைவெளி மறந்த நீயோ

என்னை இன்னும் 

பாடசாலை  பெண்ணாகவே 

பார்க்கின்றாய்!! 

 மாற்றதில் உடைந்த

விம்பத்தை  கண்டால் 

உன் முகம் தாங்காதேயென 

நானும்  உன் கைபிடித்தே

 மடியுறங்கிய பெண்னைபோல்

நடித்துக்கொண்டே 

இருக்கின்றேன்

என் சோகத்தை 

 உன் அன்பு கட்டிப்போடுகின்றது

என் பிடிவாத்தை

உன் புன்னகை சிதறடிக்கின்றது

என் சோம்பலை 

உன் கோவம் எழுந்திட செய்கின்றது

என்னை  கண்டாலே 

உன்  கண்கள் உற்சாகம் கொள்ளுகின்றது

உன்னேடு வாழ்ந்த நாட்களில்

என் கண்கள்

கண்ணீரை கண்டதில்லை

 பொய்யாயன என் நடிப்பில் கூட

கண்ணீர் வந்ததில்லை இப்போ

என்னை கண்ணீர் காதலிக்க

தோல்விகளே  கைபிடிக்க

நீ காண நான் 

நீகாணாதே உன் வீட்டு

பூசையறை படமாகவே 

ஆசைகொண்டேன்

உன்னையும் என்னையும் மீண்டும்

விதி சந்திக்க வைக்கின்றது 

தானாய்

கடந்து வந்த பாதையில் 

சில முகம்  நிலவைப்போல்

நம்மோடு கூட நடக்க

சந்தோஷாம் தரும்

 தோழியாய் நானும் 

என் மரணம்  வரை 

நீயும் இருக்கின்றோம்

மீண்டும் !!

Friday, 10 March 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 நாம் பாக்கியம்

செய்திருக்க வேனும்

நம் வாழ்வில் நம்மை பிரியாமலே

நம்  பாக்கத்தில் 

இருந்து நம்மை 

வழிநடத்தும் நல்லுறவோடு

நம்மை இணைத்து இறைவன் 

படைத்திருக்க!!!


Thursday, 9 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நீண்ட காலமாய் 

தொலைத்த

ஓரு அழகிய 

விடியலை

 என் காதுகளில் 

கேட்டேன் 

ஒரு கவிபொழுதில்

 அன்றை பொழுது

எதையே அடைந்த

 மகிழ்ச்சி

 என்

இதயக்கூட்டில்!!!

ஓற்றை சேவல் 

சொன்ன 

அதிகாலை வணக்கம்

விட்டு வந்த ஊருக்கு 


 கூட்டிபோக சொன்னது

என் மனதிடம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நம் புரிதலில்லா உறவினை

புரிந்தவர்களே !!நமக்கு நன்மை

செய்வதாய்  நம்மை வைத்து

விளையாடும் ஆட்டமே

நம் வாழ்க்கையாகின்றது!!

Wednesday, 8 March 2023

குட்டிக்குட்டிச் சாரல்

என் 

 நீண்ட பொழுதில் ஓரு பொழுது

என் நடைபாதை தூரமாய்

என்  கனவேடு 

நீயும் நிலவும்  என்

வண்ணத்தூரிகையாய் எண்ணத்தை

அழகாய் தந்த 

அந்த இரவுத்தூரம்

ஒரு அழகான ஒவியக் கையேடாய்

என் இதயதாமரையில்  


Tuesday, 7 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சட்டென வந்தே

 பட்டெனமறையும் 

மழைகாலத்தின்

சூரியன் போன்ற

ஒரு நெடி !!!

இரவுப்பொழுதில் 

வந்து  தேயும் 

நிலவு போன்றே  

என் உணர்வில்


 பூத்த 

உன் உணர்வுகளை

 ஒரு

நெடியில் 

மொய்யென்று 

பொய்ப்பித்துவிடடாய் !!!



Monday, 6 March 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை விட்டு சென்றதெல்லாம்

எனக்குள்  அழகானதும் 

நான்  நேசித்ததும்

என்னேடு  கூட

வரவே  நான்

ஆசைகொண்டதும்

ஆனால் 

விசிந்திரமே வாழ்க்கையானதால்

என்னை விட்டே தூரமானது!!!


Sunday, 5 March 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லாத ஒன்றை 

இருப்பதாய்

கற்பனை செய்து

 நடிப்பதை விட

இல்லையென்றே  

நடப்பதே 

 எனக்கு   நானாய் 

உணரும்  தருனம்  

இதன்சிறப்பே 

 என்னில் நின்று  பலர்

விலகிச் சொல்லும்  தருனம்!!!

இருந்தும் புரிந்து பேசும் மனிதனே்

எனக்கு  என்றும் உறவு!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நீ விட்டு சென்ற 

என்னை!

காலம்  கொலைசெய்ததை

காத்திருந்தே  கடந்திட்டு

இறந்த உயிரிடம்  

உன்னை தேடிஅழுகின்றாய்!!

நேரம்  யாருக்காகவும்

நிற்காது. 

என்று தெரிந்தும்  !!!

இப்பே

உணர்வற்ற உடலேடு. 

உயிர்பேசுவதை 

 ஓரு ஆத்தமா 

வேடிக்கை பார்க்கின்றது

உயிர்  உள்ள வரை தான்

உணர்வுகள் 

வாழும்  வாழும் போதே

வாழ தொடங்கிடு எனியாவது!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 என்னை திரும்பி பார்த்த

பின்னே என் தவறுகளை

திருத்திப்பார்த்தேன் என்

தவறுகள் புரிந்த பின்னே நான்

சேற்றில் பூக்கும் 

வெண்தாமரை போல்

மழையில்  நனைகின்றேன்

இப்போ !

நினைவில் கூட 

தவறுகள்  இல்லை 

கவலையின்றியே என்

மனசும் உறங்கிக்கிடக்கின்றது

கெட்டவர் நடுவே  

நல்லகண்டிபூப்போல் 

என் அழகான  அகம் 

அழகாய் தெரிகின்றது !!!

வறுமையும் பினியும் 

ஆசையும் கூட

அருகே இருந்தும் 

 என்னை கற்பனையாய்

காத்துக்கிடக்கின்றது கொஞ்சம்

ஏக்கம் கண்ணீர் விட்டாலும் 

அறிவு சமதான் சொல்லியே 

அழைத்து சொல்கின்றது இந்த

உலகத்தை காட்டியே !!




Friday, 3 March 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என் பாதைகளின்



ஓரங்களில்

என்விழியின் 

கண்ணாடியில் விழுகின்ற

பல விம்பங்களே இங்கே

தோன்றும் வண்ணங்கள்



குட்டிக்குட்டிச் சாரல்

 தன்னை தியாகத்திற்குள் மறைத்து 

கொண்டவர்களுக்கு

தான் தெரியும் தன் நிழல் 

இருளின்  நியாமென்று 

இருளின் பிழைக்குள் 

தனியே நடப்பவர்களுக்கு 

தெரியாது தன் இருளுக்குள்

ஓழிந்து  கொண்ட நிழலை!

இங்கே !நியம். புரிந்திடா

 நிழல்களின் பெய்களே  

வலிகளை கொடுக்கின்றது!!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பெண்மையின்!!



 வாழ்க்கையில்உண்மைகள் 

அற்ற பொய்களே

அழகாய்  பூக்கின்றது!!

இங்கே!!

 உண்மையில் பெண்மை

தனக்கே தெரியா 

பெய்களிடமே 

மட்டிக்கொள்கின்றாள் 

 கடசியில் பெண்மைக்கே 

தெரிவதில்லை 

தான் வாழும் வாழ்க்கை!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 பெண்மையை பழி சொல்லி

பழி வாங்கி  பழி போடும் 

யாரேனும் மெண்மையி்ன் 

வலிகளை மட்டும்

ஏன் புரிந்திட மறுக்கின்றனர்

பெண்மையை  ஆண்மை 

 தனதுஅறியாமையென 

நினைப்பதால்
தானே!!


Thursday, 2 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓருவர் ஜெயித்திட  அன்பால்

முடியுமென  சொல்லும் 

அன்பே அன்பிடம் 

தோற்று  எதிரியாகின்றது !

தோற்றவர்  எதிரியாகியே  

ஜெயித்திட  முடியுமென்றால் 

அன்பை கொடுத்தே  ஜெயிந்திட

முடியா  இதயங்களில் புரிதலில்லை 

என்பதால் எதிரியாகயாகியே 

மற்றவரை ஜெயிந்திட

செய்கின்றோமா !  அப்போ 

அன்பின் தோல்விகளில்

எழும் தோல்விகளே  

வெற்றியின் முதல் படியா?!!

Wednesday, 1 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அன்பான இதயமே அழகான



உறவிற்கு சொந்தக்கார்கள்

அந்த 

அழகான உறவிலே அழகான

இல்லம் பூக்கின்றத்து 

இங்கே

சண்டையுண்டு பழிவாங்கிட

தான் யாருமில்லை 

 கோவம் உண்டு

பிரிந்து சொல்லத்தான் 

யாருமில்லை 

பூக்கும் பூவை  விட

அழகான மனசே வாழ்வின் ஆதாரம்!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அந்தியில் ஒரு கனவு

அத்தை  மகன் கைபிடித்து 

நடக்க  கண்ட கனவு 

 இதில்

எதை சொல்ல  எதை விட

எப்படிச்சொல்ல  அவனுக்கு

இருந்தும் உதடுகள் துடிக்கின்றது

உணர்வுகள் உச்சரிக்க தவிக்கின்றது

அவன் முகம் பார்க்கையிலே

ஆனாலும்! 

மிஞ்சம் மிதி  சொல்லாமலே

அத்தை முகம் நினைக்கையில்

அச்சம் வருதே தானாய்!!

அத்தையவள் பெற்றது

ஊரைசுற்றி திரிந்தாலும்

உருப்படாமல் திரிந்தாலும்

இப்பிறவியில்

அத்தைகை மந்திரகோலாய்

அல்லவா  சுழல்கின்றது

சுழலும் மந்திரகோலை என்

கரம் பிடிக்க என்ன செய்து வெல்லுவேன்

அத்தையை!!!0