மனசே உறைந்தால் தான்
நம் உணர்வுகள் பேச மறக்கும்
உணர்வைகளே
உறைந்தால் தான் எவ்வளவு
வலியையும் தன்னுள். சும்ப்பது
தெரியாமல் சுமக்கும்
நன்மையற்ற மற்றவர் தரும்
அவமானங்களை சதாரனமாய்
கடந்தும் செல்லும் !!!
மனசே உறைந்தால் தான்
நம் உணர்வுகள் பேச மறக்கும்
உணர்வைகளே
உறைந்தால் தான் எவ்வளவு
வலியையும் தன்னுள். சும்ப்பது
தெரியாமல் சுமக்கும்
நன்மையற்ற மற்றவர் தரும்
அவமானங்களை சதாரனமாய்
கடந்தும் செல்லும் !!!
ஏதோ ஒன்று என்னை
தூக்கிடா இரவில்
ஏங்க செய்கின்றத்து
ஏதோ ஒன்று என்னை
தனிமையை த்தேடியேடச் சொல்ல
ஏதோ ஒன்று என்னை
மரணத்திடம் கைபிடித்திட
செய்கின்றது
ஏதோ ஒன்று என்னையே
நானே வெறுத்திட சொல்கின்றத்து
ஏதோ ஒன்று என்னை
திசைகாற்றில்
சிக்கித்தவிக்க வைக்கின்றது
ஏதோ ஒன்று என்னை
மொழியற்ற ஊமைபோல்
கூண்டினிலும் அடைத்தே
வைக்கின்றது
அந்த ஏதோயென்றை
எதுவென தேடித்தேடி பார்த்தேன்
நான் பெண்ணாய் பிறந்தே
இழந்தவை எனக்காய்
தந்த அன்பின் பரிசுகள்
என புரிந்தது
என் உணர்வுகள்
பேசும் போது
உயிர பிரிந்த ஓரு
உடலின் மொழியில்
யாரோ தேடும் அன்பில்
ஒரு ஆத்தமாவின் உணர்வுதான்
நானெ புரிந்தது !!
எப்பவும் நமக்கே நமக்காய்
ஒரு உயிரை தேடும் மனசு
அப்படியுமில்லையெனில்
நம்மை நம்மைவிட அழகாய்
நம்மை பார்த்துக்கொள்ள
தேடும் மனசும்
அப்படியுமில்லையெனில்
நம்மில் தேன்றும் வலிகளை
புரிந்தேனும்நம்மேடு
வாழ்த்திட தேடும் மனசு
இந்தேடலில் தேற்கும் மனசே
சலிப்பேடு வெறுப்பை சுமக்கும்
தனக்குள் வாழ்வின்
வெற்றிகள் தனிமனிதனை
உருவாக்கும் மனிதனிடம்
ஓழிந்திருப்பதை வெற்றியாளன்
புரிந்திட்டால்
தேடிதேற்றவருக்கும் கிடைக்கும்
நல்மனசு!!!!
காவியங்களில் ஏதோ ஓரு
இடத்தில்
பெண்மையை தொலைத்தே
தொலைதூரமானது காவியம்
பெண்மை தேற்ற இடத்தை
தேடிக்கொண்டேயுள்ளது
எங்கேயென தெரியாமல்!!
இல்லம் தேற்றே
உலகம் தேடும் அமைதி
இல்லையென தெரியா
இல்லத்தின் கதவுகளே
உலகத்தை நேசிபமாய்
கூறி க்கொண்டே மூடியவழியினுடே
உலகத்தின்அமைதியை
தேடுகையில்
இல்லம் உடைந்தே இல்லாமல்
போகின்றது அமைதியை
வெள்ளி பணம்
சோறுபோட பச்சமிளகாய்
விலையென்றால் அன்னை
அழுகின்றால் விலையேற்றதை
எண்ணியே
அள்ளியே தண்ணீர் ஊற்றி
வீட்டேடு தோட்டம்
செய்த நாட்கள் தோற்றதே
வீட்டுத்தோட்டம் எங்கே என்றேன்
வீணாய்போனது தண்ணீரைபோல்
மனித சுயசிந்தனை தன்னை
வெளிநாட்டு உறவிடம்
அடைவு வைத்தே காத்திருப்பாதால்
என்றாள்!!!!
அழகாய் காட்டும. கைகளிலேயே
சில தவறான கையுறை
மின்னுவதால் அழிகின்றது
கையுரையின் கைபிடிப்பிற்குள்
அழகிய பெண்னின் வாழ்க்கை
முற்கள் பாய்ந்த
சொற்களை கொஞ்சம்
சேகரித்தேன் என்னுள்
என் பாதைகளை கடந்திட
கற்கள் பட்டவலியை
மறந்தே பதம் போக
தக்க வைக்க ஆசையற்ற
பயணமான வாழ்வில் கொஞ்சம்
கற்பனையை இசையாய்
கொடுத்தேன் என் இதயம் தாங்க
இயல்பாய் இயங்கா இதயம்
துடிக்க மறந்த நிமிடம்
இசையே ஒடியது என்னுள் உயிராய்
ஆச்சரியமாய் விழிக்கும்
விழிகள்தோற்றுவிட்ட
உறவாகளாய் என்னை
தேற்றியே தூக்கியே
உறவாகி என்னுள் துடிப்பதும்
இசையே
அச்சத்தில் வந்த பயத்தில்
மிஞ்சமாய் போனவாழ்க்கையை
கற்பனைகள் தொட்டிடா
கற்சிலையாய் வடித்தெடுத்தால்
பக்கத்தில் நின்று புறம்பேசும்
மனிதனும் பகையற்றே போனான்!!!
துள்ளிய கால்கள்
அள்ளிய ஆசைகளை
நம்பிய இதயம் தட்டிவிட்ட
நினைவு கட்டிபோட்டது
கால்களை. எட்டிப்பிடிக்க
அச்சமற்ற துணிவு. இருந்தும்
அக்கறையாய் இக்கரையில்
நின்றுவிட்டது கால்கள்
சித்ததுள் சிதைத்த
சின்ன சின்ன கனவு
தொடைக்குழிவரை
வந்து வந்து சென்ற
அழகிய ஆசை
இருந்தும் மறைந்த
கற்பனைகள்
எழுதமுடியா தோல்விகளால்
எழுதி முடித்த புத்தகம்
இருந்தும் வருகின்றது
ஏழ்மையேடே ஏக்கம்
விரைந்தே போகுமே காலம்
விரைவாய் முடியுமே நாட்கள்
இருக்கும் உயிரை தேடி தருமே
விடுதலை இயல்பாய்
நடித்தே இயலாதே தேற்கின்றது
இதயம்
இல்லையென்றதை
இருப்பதாய் எழுதும் விதியிடமே!!!
மேகங்கள் என்னிடத்தில்
கேட்டது
உன் எண்ணத்தில்
ஒரு வண்ணத்தின் தூரிகையால்
உன் விம்பத்தின் புன்னகைக்குள்
வானவிலால் ஓரு கற்சிலை
வரைய கொஞ்சம்
கார்மேகம் ஆடையுடுத்தி
என்னேடு
கறபனை கடலில் விழுந்திட வாயென
நான் கனவில் கரைந்த
கண்ணீர் விம்பம் நீயே கற்பனை
வானின் ஆச்சரியம் என்னை
வரைந்தே உந்தன்
கற்பனைதேற்றிட வேண்டாமே
உன் கார்மேக ஆடையே
போதுமென்றேன் எனக்கு
ஆச்சரியத்தின்ஆச்சரியம்
தன்னை கரைத்தே வானவில்லை
தந்தது எனக்கு
சுயநலமே பலர் வாழ்க்கையை
திசைகாற்றில் சிறவிடுகின்றது
கொஞ்சம்
தன்னை மாற்றிட முடிந்தவனே
தன் வாழ்க்கையில்
தெளிவு கொள்கின்றான் தெளிவில்
சிதறும் பிழையே
தவறை மறுபடி செய்யாமல்
வாழகற்றுக்கொடுக்கின்றது
வண்ணத்தின் வண்ணத்தில்
எண்ணங்கள்சொல்ல
வண்ணத்தை எடுத்த
வண்ணம்
கடசியில்தந்தே
சென்றதுவெள்ளை
வண்ணத்தை
வாழ்வின்நியமதை
புரியா பெண்மை
கைநிரைய வண்ணங்களை
அள்ளி வந்தே மழையில் நனைத்தே
புரிந்தாள் தன்னை!!!
நமக்காய் யாரேனும் வாழவே
நம் மனசு ஏங்கும்
காலங்கள்போகப்போக
எல்லாமே குறைய குறைய
எது இதில் நியமென ஏமாற்றங்கள்
கற்றுகொடுக்ககொடுக்க
கொஞ்சம் கொஞ்சமாக
நம்மைவிட்டு
ஒவ்வொன்றாய் விலகவிலக
நம் தனிமை கற்பிக்கும்
நியமே உண்மையான
வாழ்க்கையாகும்
இப்போ
நம்மை தவிர நமக்காய்
யாருமில்லையென்ற உறுதியேடு
ஒரு புன்னகைபதிலேடு
வாழ தொடங்குவோம்
இங்கே
ஆசைகளும் கனவுகளும்
சிலநெடி துறல் போல்
மனதில் விழுந்தேடினாலும்
காலம் கைபிடித்து நிறுதிவிடும்
காயங்கள் கண்மூடி
உறங்கி கொண்டேஇருப்பதால்
நம்பிக்கை ஓன்று மட்டும் எப்போதும்
நிழலாடும் நம்மில்!!!
தெரிந்தவர் தெரியாதவர்
கைபிடித்தே நடத்தி சென்றால்
வாழ்க்கை சுகமாகும்
மாறாக நாம்தெரியவர்களையே
அதிகம் காயபடுத்தி
நம்மை பெரியவர்களாய்
காட்டிக்கொள்கின்றோம்
தவறுகளில்சிந்திக்க
செய்த பெண் தாமரை
சேற்றில் பூக்கும்
வெண்தாமரைப்பூவாய்
தன் மனசுக்குள் பூக்கின்றது!!!
இங்கே மனித அழுக்குள்
தன் அழுக்கையவது மழைநீர்
போல் தூய்மையாய் பட்டேட
நிமிர்நே நிக்ககின்றது பூ!!!!
தன்னில் தேடும்
மண்ணின் அழகு வடிவத்தில்
பெருந்த கற்பனை அழகு
வளைப்பவர் கைகளில்
வளைந்திடும்அழகு
வளைவுகளின் கண்களுக்குள்
வளையா அழகு
மதியுண்டு மறுப்பர் முன்
மறைத்தெளிரும் அழகு
தனித்தடைத்தே தனியாய்
தொலைத்தவர் கான அழகு
தடையங்கள் தேடும்
ஆராட்சியின் தேடலின்அழகு
அழிப்பதும் சிதைப்பதும்
இதயம் தொலைத்தவர்
படைப்பின் அழகு
இருந்தும் ஒளிருவதே
கருணைகொண்ட கண்ணின்
அழகு
கவியாக தனித்தே
தன்னை காக்கும்
உறுதி
எதையும் செய்யும்
திறமை
யார் தடுத்தும்
நிக்கா தேடல்
தன்னைதானே
தேற்றுவிக்கும் தைரியம்
யாராலே
உடைத்தெறியும்போது
தேற்றுவிட்டால்
என்ற பயம்
தோற்றுவிக்கும்
கோழைவிம்பம்
நெடிப்பொழுதில்
கொடுக்கும் தைரியமே
மரணம்
இதனிடமே
நானும்தோற்றேன்
ஒரு நெடிம்பொழுதின்
கோழையாய்!!!
அழகிய கனவு ஓன்றை
தந்தது விழிகள்
இதயம் பூவாய் சிரிக்க
புன்னகை கண்ட இறைவன்
தொலைபேசி சத்ததால்
தொடர்வை அறுத்தான்
கனவும்மறைய
தொடர்வும் நிக்க
எல்லாம் மாயமாய் போக
விடியலி்ல்கனவுக்கவிதை
கனவில் புதைய
ஏக்கம் கிறுக்கலானது!என்னேடு!!!
தீயில் சாம்பலான த்த்துவம்
இல்லையென்ற விதி
தொலைத்துபோன உருவம்
இருந்தும் தேடிபார்க்கின்றனர்
சாம்பலுக்குள் ஒழித்து கிடக்குமே
வாழ்க்கையென !!!!ஊமையான
உணர்வு உயிரே இல்லா கவிதை
படித்தாலும் அறியா கிறுக்கல்
பார்வையின் முன்னே இருட்டு
இருளும் ஒர் நாள் ஓளியாய்
மாற விழிகள் கண்டு
கண்ணீர் ஊற்ற
சாபலும் மறையும் மண்ணேடு!!!
புரிந்திடாவர் கைகளில்
பொம்மையாவதை விட
புரிந்தவர் கைகளின் நம்பிக்கையானால்
கையேடு வெற்றி கண்களேடு
மகிழ்ச்சி கஷ்ரத்தோடு போராடியேனும்
அடையும் உறுதியாவோம்!!!
இல்லத்தின் அழகிற்குள்
அஞ்சலம்பெட்டிபோல்
பயண் பட்டால் பெண்
வாசணைதிரவியமாய்
வலம் வந்தால் ஆண்
இங்கே
வாசணைபடும் இடத்தினை
பலர் பேசிபெருமை கொள்ளவர்
ஆனால்
அஞ்சலபெட்டிகளை
மட்டும்
மறைத்தே வைக்கவே
ஆசைகளேடு
காதல் கொள்கின்றது
பொம்மையை ரசித்தாலே என்
இதயம் தாங்காமல்
கோவம் கொண்டே
சண்டை போடும்
என் கோவம்
தப்பே சரியே அறியேன்!!
ஆனால் ஒற்றையாணைத்தவிர
இவ்வலகில் ஆண்மையே இல்லையென
தன்னை தொலைத்து
தன் அறிவைதொலைத்து
சுயமிழந்து வாழ எப்படி முடிகின்றது
பெண்ணால்!!
வீரமற்று விவேகமற்று இவ்வலகில்
ஆச்சரியமாய் தோன்றும்
பெண்மைகள் எழுதும்
வாழ்க்கை நாடகம் !!!
சந்தோஷத்தை
புதைத்து தன் நம்பிக்கையும் புதைத்து
தன்னையே அழித்திடும் எதிர்கால
சூனியக்கற்பனைகள் என்றும் !!
உன்னை இரட்டை பயிராய்
பிரித்தே வடிக்கும் வடித்தில்
கிடைக்கும் முடிவின் கதைக்கு
மட்டுமே நீ வாழ்வதாரம்!!!
பெண்னே ஒன்றை ஏந்தி
ஒன்றை பயண்படுத்தும்
ஆண்களின் இரண்டை முகத்தில்
ஏமாறுவதை உணரும்
காலம் எக்காலம்!!!
பாராங்கற்களை கொடுத்தவன்
கடினபாதையில் தண்ணீர் இல்லா
கண்ணீர் தடாகம் வடித்தவன்
இல்லையென்ற ஒன்றை மட்டும்
இறுகட்டிவிட்டவன்
இருக்க நிலையில் தனிமை தந்து
மரணத்தை நேசிக்க சொன்னவன்
இருப்பவர் இல்லாதவர்
இயல்பை கற்க
வறுமைக்கு என்னை விற்றவன்
வரைந்த பாதை கசக்க
மனசை கல்லாய் மாற்றியவன்
ஆசைகள் தொலைத்து
தனக்காய் தானே உண்மையாய்
நம்பிட செய்தவன்
நம்பிகையற்ற நிழல்களை
வடித்தே தன்னை
பற்றிய கைகள் கொண்டு
நம்பிகையாய் போராடி
வாழ சொன்னவன் எதிர்காற்றில்
நடைதளர்த்தாலும் எந்தன் கைகளையே
தூணாய் நம்பி நடக்க செய்தவன்
எழுதிய விதியே நானும் பிறப்பும்!!!
அழித்திடவும்
அசிங்கமாய்படைத்திடவும்
கட்டிபோட்டு கற்பனை
செய்யவும் படைத்திட்டதே
உந்தன் உருவம்
தவறி விழுந்தே தவறுகள் சுமக்கும்
அடையலாங்களே உந்தன்
பெருமையின் கொள் அழகு
ஆண்மைக்கு எழுதா விதிகள்
உந்தன் நிழலுக்கு போட்ட வேலிகள்
நியமாய்நீ நிழலாய் வாழ்வதால்
உந்தன் நியமே கற்பனையாகிட
நீயே உலகின் பிழைகளாகின்றாய்
தவறுக்குள் உன்னை கட்டி
ஆண்மை தேடும்
தன் தவறுக்கு முகம்
காட்டிடாதே
உந்தன்
வாழ்வின் தனித்துவத்தை
புரித்திட முடியாமல்
சிதைத்தழித்தே
உன்னை உருவாக்க் உந்தன்
கற்பனைக்கு கூட
கற்றுக்கொடுக்காதே தவறை
உன்னை வடித்தெடுக்கும்
கற்பனைகளே அதிகமாய்
புதைக்கின்றது உன்னை
மண்ணில்!!!!
அழகின் அழகில் மயங்கி
ஒன்றை இதயதிற்க்குள்
இரண்டை ஒளித்தே வைத்து
என் கண்முன்னே
தனியே அமர்ந்தவனே!!
உன்னை சுற்றியே வந்த
என்னை திரும்பிப் பாரா
உந்தன் ஆண்மையும்அழகே!
எத்தனை கொண்டாலும்
அடங்கா ஆண்மையேடு
போட்டி போடா ஆண்மையே
நீயே சிறந்த ஆண்மகன்!
கற்பனையே
சரித்திரமே உண்மையே
கற்றவர் கற்பனை பொய்யே
இவ்வுலகில் நான்
ஆற்றங்கரை கடக்கையில்
தனியே அமர்ந்த உன்னை பார்த்தே
எந்தன் காதல் எனக்குள்
பூத்தது!!
பூத்தகாதல் பூவில் கோர்த்தே
போட்ட மாலைகள் தவறின்
தவறே என்றாலும்
மறைத்தே வைத்த உந்தன்
கதையை தேடா
எந்தன் காதலே தவறு நீ
ஓளித்த ஓளிக்கு
ஓளியை ஏற்றுகின்றேன்
இருளாய் போன இருளின் ஒளியாய்
ஓளித்திட!!!இவ் உலகத்தில்
நல்லவை அழிந்து கெட்டவை
நல்லவைபோல் உயர்கின்றது!!
அந்த கெட்டவை அழிந்து நல்லவை
உயர்ந்திட!!!!