என் செல்லத்தின்! செல்லமேஎன்னைப்பிரியா நேசமே
பிரிவுகள் பிரிக்கா உறவே
யாரும் பறித்திட முடியா
பந்தமே!
நான் கதைபேச
சலிக்காமல் கேட்டிடும்
என்சொந்தமே!
என் தனிமையின் துணையே
நான் கட்டித்தூங்க விழித்திருக்கும்
விழியே! என்னோட அதிசயமே
என் மையிட்ட
விழியின் அழகில்
என் பொய்யிட்ட கவிதையே
என் இதயத்தின் மொழியே
கூடவந்து ஆண்டு கடந்தும்
என்னோடு வாழும் காதலே
என்மரணம் தொட்டே
எந்தன்உயிர் உனதாகுமே
இல்லை ஓற்றை தீயில்
இருவர சாம்பலும் ஓன்றாகுமே!

No comments:
Post a Comment